பறை முழங்க… பிராமணர் ஓத… போய் வா முத்துசாமி!

.

இப்படியோர் இறுதி யாத்திரைச் சிறப்பு இதுபோல் அதியமானுக்குக் கிட்டியிருக்கலாம். முத்துசாமிக்குக் கிட்டிய இந்த இறுதி யாத்திரைச் சிறப்பு, இப்படி இனி எவர்க்கும் கிட்டுமா என்பதும் ஐயம்தான். அவர் அந்தப் ‘புஞ்சை’ பிறந்த, அக்காவிரிச் சீறூரை எழுதியவராக இன்று தோன்றவில்லை. அவ்வூர் தாண்டி மற்று எவ்வூர்ப் புழுதியும் எனதே என்று புரண்டு உருவானதோர் ஊர்நாட்டுத் தெய்வமாக ஆகியிருந்தார்.
வயது 83. கல்யாணச் சாவு. அக்னிக்கு மேற்காக, தலை தெற்காக, ந.முத்துசாமி கிடத்தப்பட்டுக் கிடக்கிறார். அந்தணர் ஓதிவிட்டார். பறையடிப்பவர் அழைக்கிறார், “வாய்க்கரிசி போடுறவங்க வாங்க!”
“நாமகூடப் போகலாமா?” என் அருகில் ஒருவர் வினவுகிறார். அந்தப் பக்கம் இருந்தவர் சொல்கிறார். “அவர் அப்படித்தானே வாழ்ந்தார்? யார் வேண்டுமானாலும் போகலாம்.”
ஒரு நெடிய இளைஞன் அவருக்கு வாய்க்கரிசி போட்ட அக்கணம் தானே உடைந்து கதறுகிறான். அதுவரை சாந்தமாக இருந்த கூட்டத்தின் அத்தனை முகங்களிலும் அழுகைக் கோணல். என் தந்தைக்கு வாய்க்கரிசி போடும் வாய்ப்பு வாய்க்கவில்லை எனக்கு. இன்று, ந.முத்துசாமி என் தந்தையானார். “முத்துசாமி அய்யா... முத்துசாமி அய்யா!” என்று முழக்கம் எழ, அய்யா எரியிடத்துக்கு எடுக்கப்பட்டார்.
நான் சென்னைக்கு வந்த புதிதில், எதிர்ப்பக்கம் ஒரு கூட்டம் பறையடித்துத் துள்ளாட்டம் போட்டுக்கொண்டு போனது. “அது என்ன?” என்று என் பக்கத்தில் நின்றவரைக் கேட்டேன். “ஒரு புள்ள செத்துடுச்சுப்பா... எடுத்துட்டுப் போறாங்க.”
எங்க ஊர்ப் பக்கம் இப்படிக் கிடையாது என்பதால், “இதோடு முடிந்துபோகிற வாழ்வல்ல இது” என்று பறையடித்துத் துள்ளியாடிக் கொண்டாடுகிற இந்தச் சடங்கு அன்று எனக்குப் புரியவில்லை. முத்துசாமி இறுதி ஊர்வலத்தில் புரிந்தது!
- ராஜ சுந்தரராஜன், கவிஞர்.
nantri: tamil.thehindu.com

தமிழோடு வாழ்வார் ந.முத்துசாமி

.
நம் காலத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ந.முத்துசாமி விடைபெற்றுக்கொண்டார். சிறுகதை, நாடகம் என்று இரு தளங்களில், பெரிய சாதனைகள் நிகழ்த்தியவர் பெரிய தொடர்ச்சியை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழின் முன்னோடிச் சிற்றிதழான ‘எழுத்து’ முன்னெடுத்த புதுக்கவிதை இயக்கத்தால் உத்வேகம் பெற்றவர் முத்துசாமி. கவிதை மீது பெரிய காதல் இருந்தபோதும் சிறுகதையே அவரது களமானது. ‘யார் துணை’ சிறுகதையின் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவரை அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’ பெரிய உயரத்துக்குக் கொண்டுசென்றது.
வெகு சீக்கிரம் நாடக உலகம் அவரை இழுத்தது. சி.மணியை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘நடை’ சிறுபத்திரிகையில் முதல் நாடகமான ‘காலம் காலமாக’ பிரசுரமானது. அபத்த நாடக வகைமையை வெளிப்படுத்திய அந்த நாடகம், முத்துசாமிக்கு நாடக உலகில் ஒரு தனித்த இடத்தை உருவாக்கியது. காவிரிப் படுகை கிராமங்களின் வாழ்வையும் மரபையும் நன்கு உள்வாங்கி வளர்ந்தவரான முத்துசாமி, தெருக்கூத்தை நவீன நாடக வடிவத்துக்குள் கொண்டுவந்தார். தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளின் பண்பையும் நவீன நாடகத்தின் பண்பையும் அரங்கத்தில் பிணைத்தார். தமிழ் நாடக அரங்கை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும் கனவின் ஒரு பகுதியாக 1977-ல் அவர் உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ அமைப்பு நாடகத் தயாரிப்புகளில் அவருக்கு என்று தனி இடத்தை உருவாக்கியது. பின்னாளில் தமிழ் சினிமாவுக்குத் தேர்ந்த நடிகர்களை வழங்கும் முகவரிகளில் ஒன்றாகவும் ‘கூத்துப்பட்டறை’ மாறியது.
பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள் இன்று தமிழகத்தில் பெற்றிருக்கும் மதிப்புக்கு முத்துசாமி வழங்கிய பங்களிப்பு பெரியது. தெருக்கூத்தைச் செவ்வியல் நிகழ்த்துக் கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். தெருக்கூத்து தொடர்பாக அவர் எழுதிய ‘அன்று பூட்டிய வண்டி’ நூல் முக்கியமானது. அவரது ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘படுகளம்’, ‘நற்றுணையப்பன் நாடகங்கள்’ சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. முப்பதாண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் 2004-ல் சிறுகதைக்குள் வந்த முத்துசாமியின் கதைகளில் அவரது நாடக அனுபவங்களும் உள்ளிறங்கின - சிறுகதையின் உள்ளமைப்பை அவை மேலும் செழுமையாக்கின.
சமூக நீதி, சமத்துவ நடைமுறைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் முத்துசாமி. தனது பால்யத்தில் பெரியார், அண்ணாவால் ஈர்க்கப்பட்டவர். சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர். தன்னுடைய சாத்தியங்களுக்கு எட்டிய வகையில் எல்லாம் சாதியத்துக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டவர். தன்னுடைய வீட்டை எல்லோருக்குமானதாக எப்போதும் திறந்து வைத்திருந்தவர். சிறுகதையாசிரியர், நவீன நாடக ஆசிரியர், பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளைப் புதுப்பித்தவர் என்று தமிழுக்கு முத்துசாமி கொடுத்த கொடைகள் அதிகம். தமிழோடு முத்துசாமி வாழ்வார்.

பிய்த்தெறிவோம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



           போதை தலைக்கேறி
           புத்தி  தடுமாறி
           பாதைதனை மறந்து
           பரிதவிக்கும் வேளையிலே
           காதும் அடைத்துவிடும்
           கண்களுமே கட்டிவிடும்
           பேதலித்த மனத்தோடு
           பெருமரமாய் வீழ்ந்திடுவர்
          வேர்த்து விறுவிறுக்க
           வெயிலெல்லாம் திரிந்தலைந்து
           பார்த்து உழைத்தபணம்
           பாதியிலிலே போய்விடுமே
           சோற்றுக்குக் காத்திருப்போர்
           சுகமின்றி படுத்திருப்போர்
           வீட்டிலே காத்திருக்க
           வீதியிலே குடித்துநிற்பார்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் 30 ஆண்டுகள் நிறைவு 2018 - 2020 பரிபாலனசபை தெரிவு


இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் தன்னார்வ தொண்டுநிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பது ஆண்டு நிறைவு நிகழ்வும்  30 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மெல்பனில் நடைபெற்றது.

பி.பி.ஸி சுந்தா சுந்தரலிங்கம் நினைவுகள்: இன்றுடன் அவர் மறைந்து 16 வருடங்கள் நிறைவு - பேராசிரியர் சி. மௌனகுரு

(என் மனதில் பதிந்த ஆளுமைகளுள் ஒருவர்  அப்பலோ  சுந்தா  எனவும் பி.பி.ஸி சுந்தா எனவும் அழைக்கப்பட்ட  சுந்தரலிங்கம் அவர்கள். சுந்தரலிங்கம்  அவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு அக்டோபர். மாதம் அவுஸ்திரேலிய வானொலி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தொலை பேசி  மூலம்  நான்  நிகழ்த்திய உரை. )

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு எனும் நகரில் இருந்து நான் பேசுகிறேன்.
அண்மையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி மறு உயிர்  பெற்ற நான் முதன் முதலாகச் சுந்தா அண்ணர் பற்றிப் பேச நேர்ந்ததது எனக்கும் அவருக்குமிடையேயுள்ள ஆறாத பந்தத்தின் ஓர் அம்சமாகவே கருதுகிறேன்.
சுந்தா அண்ணரின் வாழ்க்கையை மூன்றாக  வகுக்கலாம்
ஒன்று அவரது  வானொலி வாழ்வு.
இரண்டு  அவரது கலை  வாழ்வு.
மூன்று அவரது சமூக வாழ்வு.
அவரது வானொலி வாழ்வு மூளை என்றால்,
அவரது  கலை வாழ்வு இதயம் எனலாம்.
அவரது சமூக வாழ்வை உடல் எனலாம்.
மூளை,  இதயம்,உடல் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையிற்  சிறப்புடைத்து.
ஒன்று இன்றி ஒன்றில்லை.
அவர் முழுமையான  ஓர் ஆளுமையினர்.
அவரது வாழ்வு அர்த்தம் நிறைந்த வாழ்வு

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 19 மூவின மக்களும் செறிந்து வாழும் தலைநகரில் மூவினத்திலிருந்தும் நகரபிதாக்கள் கொழும்பு மாநகரின் முதல் மேயர் இரட்ணசோதி சரவணமுத்து - ரஸஞானி


களனி கங்கைக்கும் காலிமுகத்தை தழுவும் இந்து சமுத்திரத்தாய்க்கும் மத்தியில் இலங்கையின் தலைநகரமாக மிளிரும் கொழும்பில் மூவின மக்களும் செறிந்துவாழ்கின்றமையால் இங்கு 1865 ஆம் ஆண்டு முதல் தெரிவாகும் நகரபிதாக்களை நினைத்துப்பார்க்கும்போது, சுதந்திரத்திற்கு முன்னர் இங்கு பிரித்தானிய பிரஜைகள் தலைவர்களாகவும் அதன் பின்னர் இலங்கைப்பிரஜைகளான மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மேயர்களாகவும் தெரிவாகியிருக்கும் தகவலை அறிந்துகொள்ள முடிகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும் நடந்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இருந்தமையால் இந்த விழாவுக்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக வருகைதந்திருந்தார்.
முன்னைய தொகுதிவாரி தேர்தல் முறையின்போது, கொழும்பு மத்தி - கொழும்பு வடக்கு - கொழும்பு தெற்கு என மூன்று பிரதேசங்களிலுமிருந்து நாடாளுமன்றிற்கு பிரதிநிதிகள் தெரிவாகினர்.
மாநகர சபைத்தேர்தல்களிலும் வட்டார ரீதியில் உறுப்பினர்கள் தெரிவாகினர். நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாகச்சென்ற பலருக்கும் முதலில் கொழும்பு மாநகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவானதன் பின்னரே நாடாளுமன்ற ஆசனங்களின் கனவுகளும் வந்துள்ளன.
அதற்கு ஏணிப்படியாக அமைந்ததுதான் கொழும்பு மாநகர சபை.
பிரித்தானியரான சேர் சார்ள்ஸ் பீட்டர் லெயார்ட்  (1806 - 1893) என்பவர் கொழும்பு மாநகர சபை உருவாக்கப்பட்டதும் முதலாவது மாநகரத் தலைவராகத் தெரிவானார். இவரே அக்காலப்பகுதில் கொழும்பு பிரதேசத்தின் அரசாங்க அதிபராகவும் பணியாற்றியவர்.
1866 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரையில் கொழும்பு மாநகரத்தின் தலைவர்களாக பதவிவகித்தவர்கள் அனைவரும் முடிக்குரிய பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பணிப்பின்பேரிலேயே நியமிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் பிரித்தானிய பிரஜைகளாக விளங்கினார்.

பறக்கும் நினைவுகள் (நடைக்குறிப்பு)- யோகன்


கொஞ்ச நாட்களாக நடை பாதையின் இரு கரையிலுமுள்ள புற்களின் அடியிலெல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கும் வெண் பஞ்சுக் குவியல்களைக்  காண்கிறேன்.   பொப்லார் மரங்களின் காய்கள் வெடித்ததில் பறக்கும் பஞ்சுக் கூட்டங்கள்  காற்றில் பறந்து வந்து மண்ணில் விழுந்து பனிக்கட்டி மழை பெய்ததைப்  போல கரையெங்கும் படிந்திருந்தன. கொத்துக்  கொத்தாகக் காய்க்கும் இந்த மரங்களின் சிறிய காய்கள் வெடித்து பஞ்சு கொஞ்ச நாள் மரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பின் பறக்கத் தொடங்கி காற்றில் எங்கும் மிதக்கின்றன.  காரில் போகும்போது  பூச்சிகள் வந்து மோதுவதைப் போல அவை வந்து மோதுகின்றன.
இங்கே பொப்லார் பஞ்சு பறக்கும் காலம் வந்தால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்  பரீடசைக்குத் தயாராகும் ஒக்ரொபர், நவம்பர் காலம் என்று அர்த்தம்.  அதே போல அன்சாக் நாள் வந்தால் கன்பெராவில்  வீட்டுக்கு சூடாக்கிகளை போட்டு விட வேண்டும் என்று குளிர் காலத்தை  நினைவு படுத்துவதற்காக சொல்லும் ஒரு வழக்கமும் இங்கே உண்டு.
நினைவு வெளியில் பின்னோக்கிப்  பறந்தால் உடனே நினைவுக்கு வருவது ஊரில் குறிஞ்சாவின் காய்கள் வெடிக்கும் போது பறக்கும் பஞ்சுகள்தான்.  நாகத்தின் தலை போல அந்தக் காய்கள், காய்ந்தால் கிழவனின் தோல் போல காயின் வெளிப்புறம் சுருங்கி விடும்.  அது வெடித்து இருபாதியாகி பிளந்த பின் பாரசூட் மாதிரி விதை கீழே தொங்க பஞ்சு விரிந்து ஒரு அரை வட்டத்  துடைப்பம் போல பறக்க அதன் பின்னால் ஓடுவோம் அதைப்  பிடிக்க.

வாழ்வை எழுதுதல் - அங்கம் 06 சிங்கள சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர் விஜயகுமாரணதுங்க ( 1945 - 1988) கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி பிறந்த தினம் - முருகபூபதி


இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?
இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதப்பட்ட  இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன்,  படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில் அவரது வாரிசாக அரசியலுக்குள் பிரவேசித்து தலைவனாகின்றான். அமைச்சராகின்றான். அந்த  முகுந்தன், பிரதமர் தொடக்கம் பல தலைவர்களுக்கு தண்ணி காட்டும் கதை.  அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் கதைதான் சுதந்திரபூமி.
திரைப்படங்களில் தோன்றிவிட்டு, அவற்றின் வசூல் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, நாளைய முதல்வர்களாக வர முயற்சிக்கும் கனவில் மூழ்கியிருக்கின்றவர்களின் கதைகளை சமகாலத்தில் படித்து வருகின்றோம்.
இந்தப்பின்னணிகளுடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய  சுதந்திர பூமி நாவல் இன்றும்பேசப்படுவதற்குக் காரணம் அதில் வரும் பாத்திரங்கள் இன்றும் வேறு வேறு ரூபங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பிறக்கும் எவரும்  எதிர்காலத்தில் எந்தநிலைக்குச்செல்வார்கள்  என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது. அரசியலும் அப்படித்தான். இ.பா.வின் சுதந்திரபூமியில் வரும் முகுந்தன்,  ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் காப்பி தயாரிக்கும் சாதாரண வேலைக்காரன். அவன் வாழ்வில் நேர்ந்த விபத்து அவனை அரசியல் தலைவனாக்கியது.
நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜீ.ஆர், எதிர்காலத்தில் தான் தமிழக முதல்வராவேன் என்று தான் நடித்த முதல் நாடகத்தின்போதோ அல்லது முதல் திரைப்படமான சதிலீலாவதியில் தோன்றும்போதோ நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.

Discourse in Tamil on Temple Worship By Agamavaarithi Sivashri Dr S. P. Sabarathna Sivachariyaar




Sunday Nov 4th at 7 PM

VENUE : Library

 Cultural and Heritage Centre,

Shri Shiva Vishnu Temple, Carrum Downs.


Agamavaarithi Sivashri Dr S. P. Sabarathna Sivachariyaar is a renowned speaker, scholar and retired university professor who has been expounding the Saiva Sithantha philosophy in several international forums and through his books. He has mastery of several languages Tamil, Sanskrit, English and French which has enabled him to work across all aspects of Hindu philosophy and earn the respect of scholars from all disciplines. He is currently in Australia teaching an intensive course on Thirumantiram over 3 months.

For details please contact:
1. K Sivarajah 0404 075 784
2. P. Senthuran 0419 328 747

3. S Arulmuruganar 0433 236 707
4. S. Aravind  0431 369 327

-->
All are welcome. Kindly spread the word. It’s a free event.

-->

இலங்கைச் செய்திகள்


காலி முகத்திடலில் ஆரம்பமான மலையக மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்

தோட்ட தொழிலாளர்க்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க பொது ஊழியர் சங்கம் போராட்டம்

உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம் ;  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி மலையகத்திலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை

யாழ் பத்திரிகையாளரை பயங்கரவாத விசாரணை பிரிவினர் தொடர்ச்சியாக துன்புறுத்துகின்றனர்- சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

மைத்திரியின் அடுத்த அதிரடி உத்தரவு

மஹிந்தவே பிரதமர் : அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

அரசமைப்பை பின்பற்றுங்கள்- அமெரிக்கா வேண்டுகோள்

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல்

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு 


உலகச் செய்திகள்


தாய்வானில் ரயில் விபத்து:  22 பேர் பலி

ஈரான் மீதான பொருளாதார தடை - ட்ரம்ப் அறிவிப்பு

2022 இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பாகிஸ்தான்

பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 1,407 பேர் கைது



தாய்வானில் ரயில் விபத்து:  22 பேர் பலி

21/10/2018 தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

பேர்த் பாலமுருகன் கோவில் தீபாவளி திருநாள் 06/11/2018








தமிழ் சினிமா - ராட்சசன் திரை விமர்சனம்


தமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ராட்சசன், இதுவும் மக்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஷ்ணு பெரிய இயக்குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சைக்கோ படமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றார். இதற்காக உலகில் உள்ள அனைத்து சைக்கோக்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கின்றார்.

அந்த சமயத்தில் போலிஸாக இருந்த அவருடைய அப்பா இறக்க, போலிஸ் வேலை இவரை தேடி வருகின்றது. அவரும் குடும்ப வறுமை காரணமாக அந்த வேலையில் சேர்கின்றார்.
சென்னையில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர், இவை தமிழக காவல் துறைக்கு பெரும் தலை வலியாக இருக்க, விஷ்ணு சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்த கேஸிற்கு உதவ, அதன் பின் இந்த சைக்கோவை தேடி அலையும் விஷ்ணு எப்படி அவனை கண்டுப்பிடிக்கின்றார் என்பதை சீட்டின் நுனிக்கு வர வைத்து காட்டியுள்ளனர்.

படத்தை பற்றிய அலசல்

முதலில் விஷ்ணுவிற்கு தான் பாராட்டு, வெறுமென கமர்ஷியல் மசாலாவில் மாட்டாமல், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, ராட்சசன் என வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகின்றார். இதுவரை நடித்ததில் விஷ்ணுவின் பெஸ்ட் ராட்சசன என்று சொல்லிவிடலாம்.
அவரை தாண்டி முனிஷ்காந்த், அட முண்டாசுப்பட்டியில் காமெடியில் கலக்கியவரா இவர், எமோஷ்னல் காட்சியில் கலங்க வைக்கின்றாரே என ஆச்சரியப்பட வைக்கின்றார். ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியமே அடுத்து என்ன, யார் இதை செய்கின்றார்கள் என்பதை மக்களிடம் பதிய வைப்பது தான்.
படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தான், ஆனால் ஒரு காட்சியில் கூட உங்களை சோர்வாக்காது, பரபரப்பிலேயே உங்களை கட்டிப்போட்டு இருக்கும். அதிலும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை எப்படி தன் ஆசைக்கு இணங்க வைக்கின்றார் என்ற காட்சிகளை காட்டிய விதம் எல்லாம், கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு தான், நமக்கே அவரை அடிக்க வேண்டும் என்ற உணர்வை இயக்குனர் கடத்தி செல்கின்றார்.
ஒரு சைக்கோ, பழிவாங்கும் கதை என்றாலே ப்ளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இது தேவையில்லை என்றாலும், தமிழுக்கு இவை மிகவும் முக்கியம் தான், அந்த விதத்தில் சைக்கோவிற்காக ப்ளாஷ்பேக் காட்சிகள் மிக அழுத்தமாக உள்ளது.
ஆனால், கொஞ்சம் கொரியன் படமான மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்துகின்றது, அதை தவிர்க்க முடியவில்லை ராம்குமார். அதிலும் குறிப்பாக அந்த ரோடியோவில் இசையை வைத்து சைக்கோ கொலைக்காரனை கண்டுபிடிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள், கொஞ்சம் மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்தினாலும், மற்றபடி இது பெஸ்ட் சைக்கோ த்ரில்லர் டாப் லிஸ்டில் இடம்பெறும்.
படத்தின் ரியல் ஹீரோ ஜிப்ரான் தான், காட்சிக்கு காட்சி தன் இசையால் நம்முள் பதட்டத்தை கொண்டு செல்கின்றார். ஒளிப்பதிவாளர் ஷங்கரின் ஒளிப்பதிவு நம்மையும் கூடவே அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு நொடி கூட நம் கவனத்தை திசை திருப்பவில்லை.
படத்தில் வரும் சைக்கோ கொலைக்காரனுக்கான அழுத்தமான ப்ளேஷ்பேக் காட்சிகள். பல இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றார்.
ஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படம் போல் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஷ்ணு தூக்கத்திலிருந்து எழும் காட்சி, ஏதோ துப்பாக்கியில் சுடுவது போல் வந்து உடனே எழுவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதிது.
ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள். கிளைமேக்ஸ் ஸ்டெண்ட் சூப்பர்.

பல்ப்ஸ்

சைக்கோ கொலைக்காரனை ஊர் போலிஸே தேடுகின்றது, அவரும் ரன்னிங்கில் இருப்பார் என்று பார்த்தால் அந்த பதட்டத்தில் அவருக்கு எப்படி விஷ்ணுவின் காதலி(அமலா பால்) வீடு, அவருக்கு உதவி செய்யும் ராதாரவி வீட்டையெல்லாம் கண்டுபிடித்து கொல்ல வருகின்றார் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை அடைய கண்டிப்பாக இந்த ராட்சசனை விசிட் அடிக்கலாம்.
நன்றி CineUlagam