மரண அறிவித்தல்

      திருமதி திலகவதி நடராஜா

முன்னாள் ஆசிரியை அருணோதயா கல்லூரி அளவெட்டி 

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி நடராஜா அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(பொன்னையா மாஸ்டர்) இராசலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

 காலஞ்சென்ற பொ.வை. நடராஜா(முன்னாள் ஆசிரியர்- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

 

உஷா(மெல்போன்), வரதன்(லண்டன்), நளினி(சிட்னி), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 

சிவநாதன், ராஜ்குமார், காலஞ்சென்ற சாவித்திரி வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

மங்கையற்கரசி, மங்களேஸ்வரி, செல்வராணி, உமாபதி சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

அ.கந்தையா, காலஞ்சென்ற Dr.சிவபாதசுந்தரம், சபாரட்ணம், சுதித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

வை.கந்தையா, கணேசநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

 

ரதினி(பைரவி), ருத்ரன்- மடலின், லக்‌ஷ்மி, அபிராமி, செபஸ்ரியன், இஸபெல், ஸ்ரெவான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 

அனுக் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கிரியை விபரம் 

தகவல்: 
உஷா சிவநாதன்  0406 539 470
நளினி ராஜ்குமார் 0412 240 201
வரதன் நடராஜா - 44 7951 025 875
நந்தினி நடராஜா 44 7833 985 296


மரண அறிவித்தல்

 .

                                    நாதஸ்வர கலைஞர் மாசிலாமணி சத்தியமூர்த்தி 


பிரபல நாதஸ்வர வித்வானும், சிட்னி முருகன், ஹெலென்ஸ்பேர்க் ஆலயங்களின் ஆஸ்தான வித்துவானுமான நாத கலாவித்தகர் மாசிலாமணி சத்தியமூர்த்தி அவர்கள் 01.10.2020 அன்று சிட்னியில் காலமானார். அன்னார் காலம்சென்ற மாசிலாமணி மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளின் அருமைப்  புதல்வனும் நித்யராணி அவர்களின் ஆருயிர்  கணவனும் துஷ்யந்தி, காண்டீபன், இந்துமதி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமார், காலம்சென்ற சுகந்தினி, ராஜேஷ், திவாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஹரி, கிஷான், ஆதேஷ், அம்ரிதா, வம்சி, தான்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்

 

இடம்: Camellia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

 

பார்வை நேரம்: காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை

இறுதிக்கிரியை, தகனம்: காலை 10.30 மணிமுதல் 12மணிவரை (குடும்ப உறுப்பினர்கள் மட்டும்)

 

கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடுகளிற்கு அமைவாகவே இறுதிக்கிரிகைகள் நடைபெறும். ஆகையால் அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் பார்வை நேரத்தில் தமது அஞ்சலிகளை செலுத்துமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்பு

காண்டீபன் (மகன்) - +61 416 379 915

சிவகுமார் (மருமகன்) - +61 404 271 892

ராஜேஷ் (மருமகன்) - + 61 433 917 266

திவாகரன் (மருமகன்) - + 61 450 663 635



51 நாட்கள் வைத்தியசாலையில் இருந்த SPB இன்று காலமானார்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது 74ஆவது வயதில் இன்று (25) சிகிச்சை பலனின்றி காலமானதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

பின்னர் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைஅறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 51 நாட்களாக வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக, இயக்குநர் வெங்கட் பிரபு  ட்வீற்றரில் பதிவிட்டுள்ளார்.

அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், கடந்த 1946ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர். அவர் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்   



எஸ்பிபி நினைவுகளுடன் கதைப்பமா

 https://youtu.be/mkInXrc4Z_U

ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள் இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!.

     பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


அற்புதமாய் இசைவானில் தடம்ப தித்து

    ஆட்சிசெய்து அருஞ்சாதனை படைத்து யர்ந்து

பொற்புடனே புகழ்விரித்த பாலசுப்ர மணியா!

    போற்றியுனை ஏத்தினோர்கள் விழிநீர் சிந்த

கற்பனையிலுங் காண்பரிய கலைஞவுன் பிரிவால்    

    கலையுலகம் பெருமிழப்பாய் கண்ணீர் சொரிய  

சிற்சபையில் சேந்தனவன் தினமும் உன்றன்

    தேன்மதுர இசைகேட்க அழைத்த தேனோ?


தேன்றமிழின் இனிமையெல்லாம் தெவிட்டிடா தென்றெம்

    சிந்தைதனில் மலர்ந்தினிக்கச் செய்த தீரா!

வேந்தனென இசையுலகில் ஆண்டாண் டாக

    விருந்துவைத்த பெற்றியெல்லாம் பேசப் போமோ?

சேந்தனுன்றன் மதுரகானம் தினமும் மாந்தத்

    திருவடியிற் சேர்த்தனனோ? சாந்தி யுற்றாய்!

ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள்

     இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!.

 

பாலுவே உன்னிசையை நிறுத்துவிட்ட தேனையா !



கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


   

   ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது


   பாலுவே நீயும் பாட  வருவாயா 
   தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
   நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

  மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
  மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
  காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
  கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

  சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று
  இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்
  வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே
  பாலுவே உன்னிசையை  நிறுத்துவிட்ட  தேனையா    !

இசை மேதை எஸ்.பி. பாலு - கவிஞர் க. கணேசலிங்கம் கன்பெரா


இன்னிசை  வேந்தன்  எஸ்.பி.  பாலு 

எமைப்பிரிந்  திட்டான்!  இசைஇனி   இலையோ?

புன்னகை  முகமும்  பொலிவுறு  வடிவும்

புவியினில்  இனியெப்  பொழுது  காண்பதுவோ!

 

'ஆயிரம்  நிலவே வா'என  முதலில்

பாயிரம்  பாடினாய்!  தொடர்ந்தெழு  பாடல்கள்

ஆயிரம்  ஆயிரம்  அமுதமாய்ப்  பொழிந்தாய்!

அவற்றால்  தமிழும்   அழகாய்ப்  பொலிந்தது!

 

பலமொழி  களிலே  பாடிய  உந்தன்

பாடல்கள்  புவியுள  பலரையும்  கவர்ந்தன!

நிலவின்    தண்மையைச்    சிந்திடும்    உன்குரல்

நித்தமும்  எத்தனை   பாடல்கள்   தந்தன!

பண்பைச் சுமந்து பறந்திடுவேன் !

     


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பெய்யும் மழைக்குக் குடையாவேன்
பெருகும் நீருக்குக் கணையாவேன்
ஐயும் கிலியும் பறந்தோட
அமையும் மந்திரம் ஆகிடுவேன் 

உய்யும் வழிக்கு ஒளியாவேன்
உணர்வில் ஒன்றாய் கலந்திடுவேன்
ஐயம் தெளிய உரைபகர்வேன்
அதுவே பிறவிப் பயனென்பேன்  ! 

தவிக்கும் பலர்க்குத் தாயாவேன்
பசிக்கும் நிலைக்கு உணவாவேன்
கொடுத்துச் சிவக்கும் கையாவேன்
கொடுமை ஒழிக்கும் சினமாவேன் 

தமிழர் மனங்களில் திலீபன் – பரமபுத்திரன்.

“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்  துன்பம் துடைத்தூன்றும் தூண்” என்கிறது வள்ளுவம். தனக்கு, தன் உடலுக்கு  இன்பம் தேடாது, தன்  உடல் படக்கூடிய வேதனைகளும் தெரிந்து கொண்டு, தான் வாழும்  சுற்றத்திற்கு நன்மை செய்யப் புறப்பட்ட கொடையாளி திலீபன்.  இந்த உலகு உள்ளவரை திலீபன் பெயர் ஒலிக்கும் என்று திடமாக கூறலாம். எனவே உன்னைக் கொண்டாடத்  தடைகள் வரலாம்.  ஆனால்  திலீபன் நிரந்தரமாக தமிழரால் கொண்டாடப்படுவான். அதனை யாராலும் மாற்றமுடியாது. உன்னை விரும்புவோர், தமிழை விரும்புவோர், தமிழ் மண்ணை விரும்புவோர் நீ செய்தது தற்கொடை என்று போற்றுகிறார்கள். உன்னை எதிர்ப்போரும் இல்லாமல் இல்லை. தமிழர்களே எதிர்க்கும் போது ஏனையோர் சொல்லும் குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. ஆகவே உன்னைப் போற்றுவோரும்,  வசைபாடித் தூற்றுவோரும் உன்னால் உருவாக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல உன்பெயரை உச்சரிப்பவர்கள். அதுதான் நீ தமிழ் மக்களை நேசித்ததன்  சான்று எனலாம்.  “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்”  இவை எல்லாம் ஆதியிலேயே  இருந்தமையால் தான் அன்றைய தமிழ்ப் புலவர்களால் பாடப்பட்டுள்ளது என்பதனை உறுதிபட உரைக்கலாம். எனவே சொன்ன சொல் மாறாது, சொல்லும் செயலும் ஒன்றாக  வாழ்பவர்கள் வையகத்தில் ஒரு சிலர்தான். அவர்களிடம்  இருப்பது வெற்றி என்ற இலக்குக் கொண்ட நோக்கு ஒன்று மட்டுமே. அதிலிருந்து அடுத்த படியான  தங்களைத்  தாங்களே மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கை வாழ வழிகாணல் அல்ல. கொள்கையின் வழி எண்ணியபடி மட்டுமே  செல்வர். எம்மைப் போன்று  உலகியல் இன்பம் முதன்மையாய் வேண்டியே வாழ்வோரக்கு நீ ஒரு புதிர்  மட்டுமல்ல, வாழ்த் தெரியாதவனும் கூட. 

உன் செயல் எங்களுக்கு வேடிக்கையாகவே தெரிகிறது. சாதனையாகத் தெரியவில்லை. ஆனால் உனது கொடையின் உச்சம் தெரிந்ததால் உன் செயலைக்   களங்கப்படுத்தவும் பலர் ஆரம்பித்து விட்டார்கள்.  நோயில் விழுந்ததால் உண்ணா நோன்பில்  இருந்தார் என்கிறார்கள். தேசியத்தலைவர் வலுக்கட்டாயமாக இருத்தினார் என்றும் கூறுகிறார்கள். நாமும் அதனைத்  நம்பத் தயாராகவே உள்ளோம். காரணம் தமிழர்களை எதனையும் சுலபமாக நம்பவைக்க முடியும். ஆனால் எமக்கு நோய் வந்தால் கூட, எங்கள் குடும்பம் அன்றி எவருக்கும் எதையும் செய்யும் வலுவற்ற அல்லது விருப்பற்ற  நாங்கள் இதனைப் பேச அருகதை உண்டா என்று தெரியவில்லை. காரணம் இறப்பிலும் நீ மக்களை நேசித்தவன். இதனைவிட தன்னையும், தன்குடும்ப சூழலையும் சிறப்பாக மாற்றும் வாய்ப்பு வந்தபோது அதனையும் தூக்கியெறிந்து தமிழர் தேசம்  வெல்லவேண்டும் என்று விரும்பிய தலைவர் உன்னை வலுக்கட்டயமாக இருத்தியதாகவும் செய்திகள் உண்டு. இறுதி வரை தனது குடும்பத்தைக் காக்கவோ அவர்களுக்காக எதனையும் சேர்க்கவோ விரும்பாத தலைவனை இவ்வாறு சொல்வது சரியா என்றும்  தெரியவில்லை.  ஆனால் போராட்டத்தில் வலுவான பற்றும், உறுதியான நம்பிக்கையும் உள்ளவர்களே வெற்றியை சமைப்பார்கள் என்பது தலைவனின் நம்பிக்கை என்பது சரியானது. எனவே  மக்களை  நேசித்து, உண்ணா நோன்பில் இருந்தவேளை, வானில் வாழும் அறுநூற்றைம்பது போராளிகளுடன் இணைந்து மலரும் தமிழ் ஈழத்தை நான் பார்ப்பேன் என்ற உணர்வுள்ள வார்த்தைகள்,  மண்காக்க உடலை வருத்தி  உயிர்கொடுத்த   உன் தூய்மையை சொல்லும் எனலாம்.  எனவே இந்த வார்த்தைகள் தமிழ் ஈழத்தின் மீதில் நீ கொண்ட நேசத்தின் ஆழத்தைக் காட்டுகின்றது. அதுவே உன்னை நிரந்தரமாக தமிழர் நெஞ்சங்களில் உட்கார வைத்துவிட்டது. பின் வந்த சந்ததியும் உன்னை ஏற்றுக்கொண்டு விட்டது.        உண்மையில் ஈழத்தமிழ்  மண்ணில் நீ இருந்த உண்ணா நோன்பு இந்தியாவிற்கு எதிரான ஒன்று. அன்றைய காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்ததை இலங்கையின் பெரும்பான்மையும் எதிர்த்தது. இன்று பெரும்பான்மை  உன்னை நினைக்கவும் தடுக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளல் மிகவும் கடினமாக உள்ளது. இதற்கும் மேலாக இந்தியா வந்தது. மாகாணசபை தந்தது. ஆனால் எல்லாவற்றையும் குழப்பியது புலிகள் என்ற பேச்சும் உண்டு. அன்று எங்களை உரிமையுடன் வாழவிடுங்கள் என்று கேட்டவர்கள் தமிழர்கள். ஆனால் வந்தது இலங்கை முழுவதற்கும் மாகாணசபைகள். எனவே இது தமிழ்  மக்களுக்கான தீர்வல்ல  என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இன்றும் தவற விட்டுவிட்டார்கள் என்கின்றோம். அன்றைய வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராசப்பெருமாள் அவர்களும், பின்னே வந்த வடக்கு முதலமைச்சர் விக்கினேசுவரன் அவர்களும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அதாவது அதிகாரமாற்ற பதவிநிலை என்பதுதான் அது. எனவே இந்திய அமைதிப்படை வருகை எமக்கு சாதகமான ஒன்றை செய்வதற்கானது அல்ல என்பதனை அப்போதே நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் இப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் நிற்கின்றோம்.     தமிழர்களைப் பொறுத்தவரையில் எங்களை நாங்களே மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றோம். அதாவது என்னை உயர்வாகவும் மற்றைய தமிழர்களை தாழ்வாகவும் எண்ணிப் பழகிவிட்டோம்.  தமிழனே தனது சொந்த விருப்பு வெறுப்பு, பிற இனங்களுடன் கொள்ளவுள்ள நட்பு என்பவற்றுக்காக எங்களை நாங்களே இழித்துப்பழக்கி விட்டோம். தமிழர்களே உன்னை நினைக்கக்கூடாது என்பதற்கு வலுவாகத்  துணை போகிறார்கள். என்ன செய்வது? யாரை  நோவது? இருப்பினும் சேகுவாரா சொன்னது போல “எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் முழுமையான வாழ்கையை வாழவில்லை என்பதே கருத்து” என்பதற்கு இணங்க உனக்கும்  எதிரிகள் இருக்கத்தான் வேண்டும். வரலாறு மட்டும் தமிழன் வீரன் என்கிறது. ஆனால்     தமிழன் என்பவன் தலைநிமிர்ந்து வாழ்வது தவிர்த்து இணங்கி வாழும் நிலையிலேயே இருக்கின்றான் என்பதுதான் உண்மையான இயங்கியல் நிலையாக உள்ளது. அது மட்டுமல்ல அவ்வாறு  இருக்கவேண்டும் என்று மற்றவர்கள் மட்டுமல்ல நம்மவர்களும்  நினைக்கிறார்கள். நாம் என்றும் அடிமை எண்ணத்துடன் வாழ நன்கு பயிற்றப்பட்டு விட்டோம். அதனால் அடிமை இல்லை என்று இடித்துச் சொன்னாலும் நம்பமறுக்கின்றோம். விடுதலையை வெறுக்கின்றோம்.  இதனை எடுத்துச் சொல்பவனை வாழத்தெரியாதவன் என்கின்றோம்.  இதுதான் இன்றைய தமிழரின் நிலையாகிப்போனது. நாமும் எழுதுகிறோமே தவிர வேறொன்றும் செய்யமுடியாது என்று வலுவாக நம்பும் மனிதர்களாகவே இருக்கின்றோம்.  உன்னையும் ஒரு தாய்தான்  பெற்றெடுத்தாள். அவளும் உனக்காக பத்தியம் காத்திருப்பாள். பசிக்குப் பால் தந்து, செல்லமாய்க்  கொஞ்சி, மெள்ளவாய் நடை பழக்கி இந்த உலகினுக்கு அறிமுகப்படுத்தி இருப்பாள். அப்படி  வளர்ந்த உடலை தமிழ் மக்களுக்காக மெல்லமெல்லமாய் நீ உருக்கி, அதனுள் இருந்த உயிரை வெளியேற்றிவிட்டாய். விடுதலைப்புலிகள் உன் உடலைப் பக்குவமாய்க் காத்து வைத்தனர். தமிழ் மக்கள் உன் நினைவுகளை உலகளாவிய வகையில் தேக்கி வைத்திருக்கின்றனர். எனவே வானிலிருந்து நீ உன் தோழர்களுடன் சேர்ந்து விடுதலை பெற்ற தமிழர்களைப்  பார்க்கும் நாள் வந்தே ஆகும்.     



மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 54 முருகபூபதி


இன்னும் எத்தனைபேரை இந்த கொரோனா கொல்லப்போகிறது…? முடிவே இல்லையா…?   அபிதா,  வீட்டின் விறாந்தாவிலிருந்து  தலையில் கைவைத்து யோசித்துக்கொண்டிருந்தாள். வெறுமை  சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வோடு,  எதனையும் செய்யப்பிடிக்காமல்,  வாசல் கேட்டையே வெறித்துப்பார்த்தாள். விறாந்தாவின் அரைச்சுவர் குந்திலிருந்து அவள் பார்த்தபோது வழக்கமாக அந்த கேட்டின் கைப்பிடியில் வந்தமரும் சிட்டுக்குருவியையும் காணவில்லை.   அன்றொருநாள்  காலைப்பொழுதில்   மழைக்காற்றோடு  வந்து இறங்கி, இந்த கேட்டை தள்ளித்திறந்துகொண்டுதானே இந்த வீட்டுக்குள்  பிரவேசித்தேன்.  வாய்பேசமுடியாத இந்த கேட், திறந்து மூடும்போது மாத்திரம் கிறீச் என்று ஒலி எழுப்பி பேசுகிறது.  உள்ளத்தின் கதவை  மூடித்திறக்கும்போது ஏதும் ஓசை எழுகிறதா…? அபிதா அறுசுவை நிகழ்ச்சியை  முதல் நாள் முன்னிரவில்  தொலைக்காட்சி ஒளிபரப்பியபோதும், அதனைப்பார்த்து ரசிக்கும் ஆவலும்  அவளுக்கு இருக்கவில்லை.  உதயசங்ககரின் தாய் தமயந்தியும்  கண்டியிலிருந்து மஞ்சுளாவும், அவளது தாய் சிவகாம சுந்தரியும் பார்த்துவிட்டு நன்றாக இருந்ததாக சொன்னார்கள்.  நுவரேலியாவிலிருந்து சுபாவும், யாழ்ப்பாணத்திலிருந்து கற்பகம் ரீச்சரும் அந்த

நிகழ்ச்சியை பார்த்தார்களோ தெரியாது. அவ்வாறு அவர்களும் பார்த்துவிட்டு சொல்லியிருந்தாலும் சுரத்தின்றித்தான் கேட்டிருப்பாள்.  மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைக்கழிந்தது.  பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  அபிமான ரசிகை அவள்.  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இணையத்தில் வெளியான செய்திகளையும் அடிக்கடி பார்த்திருந்தவளுக்கு,  மறைந்தார் என்ற செய்தி வந்ததும்,  மஞ்சுளாவுடனும் சுபாஷினியுடனும் கைத்தொலைபேசியில் பேசினாள்.  அவர் பாடித் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை மனதிற்குள் பாடினாள். மகள் தமிழ்மலரதும்,  காணாமல்போன கணவன் பார்த்திபனதும்  நினைவு வரும்போதெல்லாம், பாலசுப்பிரமணியத்தின் மனதை வருடிச்செல்லும் குரலும் நினைவுக்கு வரும்.  வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு  காற்றுக்கு ஞானமில்லை நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை ! நீண்ட பெருமூச்சு  மெதுவாக  உதிர்ந்தது.  மனம் உறைந்துபோயிருந்தது. கசிந்த கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.  ஜீவிகா இன்றும் வீடு திரும்பவில்லை.  

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் – 10 எஸ்.பொ. வுடன் முதல் சந்திப்பு ! கதிர்காமம் அழகியும் அங்கப்பிரதிஷ்டையும் முருகபூபதி


  வாசிக்கும் ஆர்வம் எனது பாடசாலைப்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இலக்கியப்பிரவேசம் செய்தபின்னர், அந்த ஆர்வம் பன்மடங்காக அதிகரித்து எமது வீட்டிலேயே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாறிக்கொண்டோம். 1972 இன் தொடக்கத்தில் வெளியான மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழில் வளர்மதி நூலகம் என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருந்தேன். அதனை எழுதுவதற்கு முன்னர், 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியினால், இரவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்திருந்தது.  என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட முடியாத நிலை. 

அதனால் வீட்டிலிருந்து புத்தகம் படிப்பதற்கும் நேரம் தாராளமாக கிடைத்தது. தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில், சைக்கிளை எடுத்துக்கொண்டு,  நண்பர்களுடன் ஊர் சுற்றிய பருவம். அயல் ஊர்களான கட்டுநாயக்கா,  சீதுவ   கொச்சிக்கடை,  வென்னப்புவ முதலான பிரதேசங்களுக்கும் சென்று தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி, மலையாளப்  படங்களை பார்த்த காலம்.  1971 ஏப்ரிலுடன் அந்த சுற்றுலாவும் முடிவுக்கு வந்தது.  எங்கள் ஊர் பொலிஸ் நிலையத்திற்கு பின்னாளிருந்த பற்றைக்காணியில்,  பிடித்துக்கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் சுடப்பட்டு எரித்து சாம்பராக்கப்பட்ட திடுக்கிடும் செய்திகளும் ஊரில் கசியத்தொடங்கியது. 

களனி நதியில் இளைஞர்கள், யுவதிகளில் சடலங்கள் மிதந்தன. கதிர்காமத்தில்  மக்கள் விடுதலை


முன்னணியில் அங்கம் வகித்த செல்வி பிரேமாவதி மனம்பேரி என்ற அழகுராணிப்போட்டியில் பரிசுகள் வென்றிருந்த யுவதியும் மானபங்கப்படுத்தப்பட்டு  கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட பதறவைக்கும் செய்திகளும் வெளியாகியிருந்தன. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஒரு பெண்மணியின் ஆட்சிக்காலத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைபற்றி பேசுவதற்கும் நாதியற்ற காலத்தை  நாம் கடந்துகொண்டிருந்தோம்.  சரியாக ஒரு வருடம் கழித்து, 1972 ஏப்ரில் மாதமே நான் கதிர்காமம் சென்று மனம்பேரியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தேட முற்பட்டேன்.

 கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு பஸ்ஸில் செல்லவேண்டும்.  வீட்டிலே தடுத்தார்கள். “  எனக்கு ஒரு வேலை வாய்ப்பு சரிவரும்போல இருக்கிறது. அது சரிவரவேண்டும். அதற்காக கதிர்காமம் சென்று அங்கப்பிரதிஷ்ட்டை  செய்யப்போகிறேன். “ என்று பெற்றவர்களிடம் ஒரு பொய் சொன்னேன். நான் பிறந்த  சமயத்தில் கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்திவைத்திருந்தமையால், அங்குதான் எனக்கு மொட்டை அடித்திருப்பதாக வீட்டில் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  

எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏதாவது ஒரு ஆலயத்தில் மொட்டை அடிப்பது வழக்கம். அந்த பண்பாட்டை  வெளிநாடு வந்த பின்னரும் தொடர்ந்திருப்பதற்கு பெரியவர்களின் வளர்ப்பு அவ்வாறு  இருந்ததுதான் காரணம். எனது மூத்த மகளுக்கு நயினா தீவில் 1981 இலும்,  இளைய மகளுக்கு 1983 இல்  யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் கோயிலிலும், எனது மகனுக்கு 1990 இல் தமிழ் நாடு திருப்பதியிலும் மொட்டை அடித்திருக்கின்றேன்.   

இலங்கைச் செய்திகள்

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில் 

மட்டக்களப்பு அபிவிருத்தி குழு இணைத்தலைவராக பிள்ளையான் நியமனம்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்க ஐ.நா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

20வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

பூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID

வடக்கில் விளையாட்டுத் துறையை முன்னேற்ற தேவையான நடவடிக்கை

பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்

நீர்நிலைகளின் அபிவிருத்திக்கு உதவ நோர்வே தயார் நிலையில்

மலையக தொழிற்சங்க வரலாற்றில் சாதனையாளர் அமரர் அருள்சாமி

 நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிரத போராட்டம்

வாய் மூல உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளாக கருதவும்

சம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை

இந்திய - இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி


எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில் 

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்-20th Amendment Presented to Parliament Amidst Opposition Protests

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று (22) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.   நன்றி தினகரன்   

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 33 – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு –


சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி  அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான தோல்களில்  ஓட்டைகள் இடப்படுகிறது. எருமை மாட்டின் தோல் வாரைக் கொண்டு உடல் பகுதியுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. தவிலைப் போல் நட்-போல்ட் இல்லாமல் பழைய முறையிலேயே வார்களைக் கொண்டு இத்தவில் கட்டப்படுகிறது. ஒரு ஜான் அளவு இடப்பக்கம், அதைவிட  1-2 இன்ச் அளவு கூடுதல் அளவில் மறுபுறம் உள்ளது. குச்சியைக் கொண்டு ஒருமுகமும் கைகளால் ஒரு முகமும் இசைக்கப்படுகிறது.   குறிப்பு ஜிம்பளங்கு மேளம், ஜிம்பளங்கு கொட்டு, ஜிம்பளா

கொட்டு, சிம்பளா கொட்டு, எருதுகட்டு மேளம், ஜல்லிகட்டு மேளம், சக்கிலியக்கொட்டு ஆகியவை இந்த இசைக்கருவியின் வேறு பெயர்கள். ஜிம்பளா ஜிம்பளா என்று ஓசை வருவதினால் இதற்கு ஜிம்பளா கொட்டு என்று பெயராம். இதை இசைப்பவர்கள் விளிம்பு நிலை அருந்ததியர் சமூகத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் (சில பகுதி), சிவகங்கை மாவட்டங்களில் இந்த மேளம் தான் மண்ணின் இசைக்கருவியாக மதிக்கப்படுகிறது. கமுதி, பெருநாழி, காத்தனேந்தல், சாயல்குடி, கொக்காடி(திரு தருமர், திரு நாகன்) , திம்மநாதபுரம் (பூச்சாரியம்மன் கோவில்), சிங்கம்பட்டி, ஆர் எஸ் மங்கலம், தொப்படைபட்டி ஆகிய ஊர்களில் இந்த மேளத்தை நாம் குறிப்பாக் ககாணலாம்.  இந்த மூன்று மாவட்டங்களில் எருதுகட்டு என்பது பிரபலம். வட மாடு என்றும் அழைக்கிறார்கள் (வடம் – கயிறு). மாசி களரி போன்ற திருவிழாக்களில் இடம்பெறும் போட்டி. இதற்கான கயிறை வைக்கோல் கொண்டு ஊர்க் கூடி திரிக்கிறார்கள். இது ஒரு சடங்கு. இந்த சடங்கிலும் ஜிம்பளங்கு மேளம் தான். ஒரு மைதானத்தில் ஒரு மாட்டை திரித்த கயிறுகொண்டு கட்டி விடுகிறார்கள். சல்லிக்கட்டை போன்று மாடு ஒடுவதில்லை. மாடு சுற்றி சுற்றி வரும் அல்லது ஒரே இடத்தில் நிற்கும். அதை அடக்க வேண்டும். அடக்கினால் வெற்றி இல்லையென்றால் மாடு வெற்றி என்று அறிவிக்கப்படும். 

Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories By Lavanya Sridharan (Katpadi - Vellore Tamil Nadu)


I'm not one to usually post about celebrities, but this one's hit me really hard. SPB never felt like


a celebrity far out of reach. He was in our homes, a part of the family, his voice echoing through the TV, Radio, the car rides and the late nights. My dad and I have always bonded over Music and SPB's voice is always a magnet that draws us together and we mused in fascination over the mannerisms, voice modulations and tiny inflections that he brings to the songs he sang. A fantastic voice artist, composer and actor - he wore many hats in his celebrated career. The way he says "Beautiful" in Sippi Irukudhu song, the way he emotes pain in "En Kadhale", the way he energizes people in Rajini introduction songs, the way he makes people who have never known love to feel what it is like to be in love, the way he laughs and cries and brings a thousand emotions into a single song, there can never be another SPB.


A humble man he was, I always enjoyed watching his interviews bringing joy to everyone he talks to. There are many stories of pranks he's played on his fellow singers - he was a child at heart. There is a story of how after recording "Malare Mounama" he heard Janaki amma's version and insisted on re-recording the song to match her level of competence - a true lover of music he was - he even named his children Charan and Pallavi. SPB kept me company all my life, from the lullabies my dad used to sing for me, to the stories from her life my mother told me. I even have memories of discussing the song "Satham Illadha Thanimai keten" with my grandmother. SPB made me laugh, he made me cry and he stayed up with me, the insomniac whenever I worked late into the night or simply couldn't sleep. Whatever experience I went through in my life so far, there's always been an SPB song that resonated with what I was feeling at the time. I'm writing this post as a tribute but it is turning out to be an outlet for me to experience catharsis as I'm still in shock - my words wavering between past tense and present tense I still cannot think of him in the past tense. He was my first love in music, "Raagangal Pathinaaru Uruvaana varalaru naan padum bodhu arivaai amma" - how true it was for me! Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories. 


உலகச் செய்திகள்

 சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸார் கைது       

ஹைட்ரஜன் விமானங்களை உருவாக்க ஏர்பஸ் திட்டம்

பெண்கள், சிறுவர்களை கொன்ற கெமரூன் படையினருக்கு சிறை

கொவிட்-19: ஸ்பெயின் தலைநகரில் மீண்டும் பகுதி அளவு முடக்க நிலை

2024இல் நிலவுக்கு திரும்ப நாசா திட்டம்

கொவிட்–19: அமெரிக்காவில் 200,000ஐ தொட்ட உயிரிழப்பு

அரபு லீக் பொறுப்பை பலஸ்தீனம் நிராகரிப்பு

ஒக்டோபர் நான்கில் உம்றா யாத்திரை மீண்டும் ஆரம்பம்

ஐ.நா பொதுக் கூட்டத்திலும் சீனா – அமெரிக்கா முறுகல்

காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பேச்சு

கறுப்பின பெண் கொலை விவகாரம்: அமெரிக்காவில் மீண்டும் வன்முறை


சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸார் கைது       

சீனாவுக்காக உளவு செயற்பாட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திபெத்தில் பிறந்த பைமட்ஜி அங்வங் என்ற அந்த அதிகாரி நியூயோர்க் பகுதியில் திபெத் பிரஜைகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவரது சேவைக்காக சீன நிர்வாகம் அவருக்கு பல்லாயிரம் டொலர்களை செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.பொலிஸ் திணைக்கள சமூக விவகாரங்கள் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற வாய்ப்பு உள்ளது.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 32

தமிழை மறந்த எங்கள் தமிழரும் – தமிழை நேசித்த அமெரிக்கரும் !  கடந்த அங்கங்களில்  எனது பாப்புவாநியுகினி வாழ்க்கை பற்றி குறிப்பிட்டபோது, அங்கு வெளியிடப்பட்ட Lingering Memories கவிதை நூல் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா..? 

அங்கிருந்தபோது முதலில் ஆங்கிலத்தில் பத்து கவிதைகளை எழுதியிருந்தேன். அவற்றைத் தொகுத்து, சிறிய நூலாக வெளியிட்டபோது, அதனை வெளியிட்டு வைத்த எனது மதிப்பிற்குரிய பாப்புவாநியுகினி  ஆளுநர் Sir  Serei Eri                          ( Governor General of PNG: 18 January 1990 to 01 October 1991 ) திடீரென காலமானார். 

அவரது மறைவு எனக்கு பேரதிர்ச்சி. அவரது மறைவின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தொடர்ந்து


மேலும் முப்பது கவிதைகளை எழுதலானேன். அவற்றையும் தொகுத்து   Lingering Memories நூலின் இரண்டாவது பாகத்தை வெளியிட்டபோது,  குறிப்பிட்ட ஆளுநருக்கே அந்த நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.  அந்த நாட்டை விட்டு நான் வெளியேறவேண்டிய காலமும் வந்தது.  அப்போது மனதிலே  ஒருவகையான ஈடாட்டம் புகுந்தது.  எனது நண்பர் இரசிகமணி கனகசெந்திநாதனால்  ஒரு செய்தித் தகவலாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவத்தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன் அவர்களும் ஒரு காலத்தில் எமது தாயகத்தை விட்டு விடைபெறும்போது எத்தகைய உணர்வுகளுக்கு ஆளாகியிருந்திருப்பார் என்பதுதான் அந்த ஈடாட்டம். நாம் மிகவும் ஆழ்ந்து நேசிக்கின்ற இடத்திலிருந்து  விடைபெறவேண்டி வரும் சூழ்நிலை வரும்போது தோன்றும் மனவலியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.  அந்த வலி உங்களுக்கும் விதிவசத்தால் நேர்ந்திருக்கவும் கூடும். வலியை உணரலாம். ஆனால், எழுத்தில் வடிக்க இயலாது. எனக்கும் அதுதான் நேர்ந்தது.  அப்படியாயின்  நான் நேரில் பார்த்தே அறியாத டாக்டர் கிறீனுக்கு எவ்வாறு இருந்திருக்கும்..? பாப்புவாநியுகினியில் எல்லா கடற்கரைக்கு நான் உலாவச்சென்று எனது மனதை ஆற்றுப்படுத்துவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்றபோது  எனது  மனதில் நிழலாடிய இரண்டு காட்சிகள்  இப்போது நினைவுக்கு வருகிறது. இரண்டுமே நேரில் கண்ட காட்சிகள்தான். பாப்புவாநியுகினியை விட்டு நான் விடைபெறும் தருணத்தில் எனது மனநிலை எப்படி இருந்தது என்பதையும் அந்த ஈடாட்டத்தையும் பற்றி நான் எல்லா கடற்கரையில் என்ற தலைப்பில் எழுதிய நெடுங்கவிதையை எனது அம்பி கவிதைகள் நூலின் 186 ஆம் பக்கத்திலிருந்து 189 ஆம் பக்கம் வரையில் பாருங்கள். அதிலிருந்து சில வரிகளை கடந்த அங்கங்களிலும் எழுதியிருக்கின்றேன்.  

வாசிப்பு அனுபவம்: இரகுமத்துல்லா எழுதிய டீக்கடை சிறுகதை முருகபூபதி ( மெல்பன் வாசகர் வட்டம் நேற்று நடத்திய மாதாந்த இணையவழி காணொளி நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )


 அண்மையில் நான் படித்த  பல சிறுகதைகளில்  எனக்கு பிடித்தமான  ஒரு கதையாகவும்  நண்பர் இரகுமத்துல்லாவின் டீக்கடை மனதில் தங்கிவிட்டது. இச்சிறுகதையின் தொடக்கமே அமர்க்களமாக இருந்தது.  விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளன், தான் வாங்கும் சம்பளத்திற்கு கேட்ட கேள்வி என்று ஒரு வரி வருகிறது. அதனைப்படித்தபோது வாய்விட்டுச்சிரித்தேன். ஆளுமைகளை பேட்டி காணும்  தொலைக்காட்சி, வானொலி பத்திரிகை நிருபர்கள் முதலில் சொல்லும் மில்லியன் டொலர் பெறுமதியான வார்த்தை இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா..? “  உங்களைப்பற்றிச் சொல்லுங்கள். அதிலிருந்து எனது கேள்விகளைக் கேட்கின்றேன்.  “    எனக்கும் இச்சிறுகதையின் தொடக்கம் அவ்வாறுதான் இருந்தது.   இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ.  டீக்கடைல பாஸ். அதே டீக்கடை பெஞ்சுலதான்.   இந்த வரிகளிலிருந்தே  நண்பர் இரகுமத்துல்லா தனது சிறுகதையை திரைப்படக்காட்சியாகவே நகர்த்திச்சென்றிருக்கும் உத்தியை வெகுவாக ரசித்தேன்.  தமிழகத்தில் சென்னைப்பட்டணம்,    பல இளைஞர்களுக்கும் கனவுகளின் தொழிற்சாலையாக நீண்ட காலமாக  மாறியிருப்பதை அறிவோம். வெளியூர்களிலிருந்து  நிறைய கனவுகளை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு வந்தவர்களில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதையும்,  மேலும் பலர் வெற்றியோடு நிலைத்து நின்றதையும் அவதானிக்கின்றோம். தியாகராஜ பாகவதர், சிவாஜி, எம். ஜி.ஆர், விஜயகாந்த் காலத்திலிருந்தே   இளைஞர்கள் சினிமாவினால் ஈர்க்கப்பட்டு கனவுத் தொழிற்சாலைகளை தேடி வந்துகொண்டே

இருக்கின்றனர். அவ்வாறு வந்த ஒரு இளைஞனும்,  கோடம்பாக்கத்தில் ஒரு குறுக்கு சந்தில் புறாக்கூண்டுபோன்ற அறைகள் இருக்கும் கட்டிடத்தில் தங்கியிருந்து கதை வசனம் எழுதுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியோ ஒரு திரைப்படத்தில் பங்கேற்று விருதும் வாங்கிவிடுகிறான். அவனைப்போன்று கனவுகளை சுமந்து வந்த பல இளவட்டங்களுக்கு   தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தோழனுக்கு தோழனாகவும் இருக்கும்  அந்தப்பகுதியில் சிறிய  டீக்கடை நடத்தும் காஜா பாய் அந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களான எமக்கும்  ஆதர்சமாக இருக்கிறார். வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப் பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும்.  மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.