மரண அறிவித்தல்



திரு முருகுப்பிள்ளை ஏரம்பமூர்த்தி


புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்கள் 01-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவபுண்ணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியமூர்த்தி, சத்தியதேவி(அவுஸ்திரேலியா), சத்தியநாதன், சத்தியசீலன், ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசப்பிள்ளை(புலோலி மேற்கு) காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வடிவேலு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
மனோகரி, பாலகெங்காதரன்(அவுஸ்திரேலியா), கௌசலா, சறோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகநேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவநேசன், புனிதவதி, தேவசேனா, அம்பிகைபாகன், குகப்பிரிகை, குகபாலன், ரமணி, ரதி, காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா, அம்பிகைதாசன், பாலசிங்கம், குருதேவி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கௌதமி, பூரணி, வைஷ்ணவி, வாகினி, கணணன், மாதங்கி, சாஜினி, ஜனனி, சாமினி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
புதன்கிழமை 03/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
 Highland Funeral Home & Cremation Centre Scarborough Chapel , 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை
வியாழக்கிழமை 04/10/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப
Highland Funeral Home & Cremation Centre Scarborough Chapel , 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி(மகன்) — கனடா
தொலைபேசி:+14164934545
சத்தியதேவி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61297063375
சத்தியநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14163353484
சத்தியசீலன்(மகன்) — கனடா
தொலைபேசி:+19052018375


தூறல் -

.



எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்

காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்

சிட்னியில் பேராசிரியர் வெங்கட் ராமனுடைய சிறப்புச் சொற்பொழிவு

.
சிட்னியில் பேராசிரியர்  வெங்கட் ராமனுடைய சிறப்புச் சொற்பொழிவு கடந்த ஞாயிற்றுக்  கிழமை 23/09/2012 ம்  திகதி  Kings College, North Parramatta இல் நடைபெற்றது


 படப்பிடிப்பு   ராஜேந்திரன்

எதிர்பாருங்கள் ஈழன் இளங்கோவின் "இனியவளே காத்திருப்பேன் "

.

அவுஸ்ரேலியாவில் இருந்து 'அழகிய தென்றலே' தமிழ் பாடல்

.


அழகிய தென்றலே என்ற தமிழ் பாடல் அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவந்திருக்கிறது. இலங்கைத்தமிழரான ஸ்ரீ ஷியாமள ங்கனின்  இசையமைப்பில்  சங்கர் மகாதேவன் பாடிய இனிமையான  பாடல் .

சொல்ல மறந்த கதைகள் --12 --முருகபூபதி

.

உயிர்ப்பிச்சை

Premawathi_Manamperi_Suriyakanda இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள்.
 இச்சந்தர்ப்பங்களில் பெரும்;பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.
 பாவம்செய்தவர்கள்தான் தமிழராகப்பிறக்கிறார்கள் என்ற பொதுவான  பேச்சுத்தான் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இத்தேடுதல் வேட்டைகளின்போது உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கும்.

இலங்கைச் செய்திகள்

.
நாடு திரும்பிய 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி

600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்

இலங்கை பணிப்பெண்கள் 22 பேர் நாடு திரும்பினர்

மெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது

செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்

தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்
-தேவன் (கனடா)                                பகுதி 2

அறிவியல்நகர் பலகலைக்கழகம்‏



மௌனம் கலைகிறது - 13


அவர்களை பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக் கொண்டிருந்தேன் அவ்வளவுதான்

.
அவர்களைப் பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக்கொண்டிருந்தேன்!அவ்வளவுதான்



எனது மெளனம் கலைகிறது தொடர் சிலகாலம் வெளிவராமல் இருந்தது குறித்துப் பல வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அக்கறையுடன் கேட்டிருந்தார்கள். குருபரன் மீண்டும் மௌனமாகி விட்டாரோ எனப்பலரும் எண்ணத் தலைப்பட்டிருந்தனர். இடையறாத வேலைப்பழுவும் மனிதர்களுக்கே உரிய இடையிட்டு வரும் மனச் சோர்வுகளும் நினைவுகளையும் உணர்வுகளையும் கோர்த்துக் கட்டுரையாக்குவதற்குரிய உழைப்பை செய்ய முடியாமலாக்கி விட்டன. இப்பொழுது சற்று இளைப்பாறிய பின் மீண்டும் கலைகிறது என் மௌனம்.

நீ, நான், நேசம் - சிறுகதை

.


(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)

_________________________________________________________________



நிவேதாவிற்கு,

எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது.

உலகச் செய்திகள்

.

இமயமலையில் பனிச்சரிவு: 9 பேர் பலி

பாகிஸ்தானில் நிர்வாணக் கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மதகுருவின் மகள்

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' தயாரிப்பாளரை கொல்வதற்கு 100,000 டொலர் சன்மானம்

சிரியாவின் அநேக பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை

சிரிய தலைநகரில் இரட்டைக் குண்டுவெடிப்புக்கள்

அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி

பாகிஸ்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?: ஹீனா ரப்பானி. பிலாவல் பூட்டோ காதல் விவகாரம்
  
 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் கைது!

 நேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி

பக்கம் பார்த்துப் பேசு!

.



நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!

  •   நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத 

காதுகள்ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் 

முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.

  •  பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம் 
செல்லும்போது நம் உறவினர்களிடமோநண்பர்களிடமோ நம் 

தனிப்பட்ட இன்ப துன்பங்களையோஅலுவலகம் சார்ந்த 

செய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே 

பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக 

இருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு 

கேட்பார்.சிலநேரங்களில் நம்மோடு கலந்து 

நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் 

உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக் 

கொண்டிருப்பதுபோலவே இருக்கும்.

தமிழ் சினிமா

சாட்டை 

தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.
நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.
இந்நிலையில் இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார்.
பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.
இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.
தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.
இதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான்.
இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.
ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.
உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்து விட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.
தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.
நாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.
இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’, ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.
அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.
மொத்தத்தில் சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...
நடிகர்: சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா.
நடிகை: மகிமா.
இயக்குனர்: அன்பழகன்.
இசை: டி.இமான்.
ஒளிப்பதிவு: ஜீவன்.
நன்றி விடுப்பு