மரண அறிவித்தல்.

 திருமதி சிவபாக்கியம் சிவலிங்கம் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை வதிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவபாக்கியம் அவர்கள் 17/10/2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் கல்வியங்காடு  காலஞ்சென்ற ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் மகளும் குப்பிளான் காலஞ்சென்ற சுப்பையா தெய்வானை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற சுப்பையா சிவலிங்கம் (பிள்ளையார் அரிசி ஆலை - அடம்பன் மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் சகோதரியும் , ரஞ்சிதமலர் (Canada), சரஸ்வதி (Canada) ஆகியோரின் மைத்துணியும், வசந்தி (Australia)
வசந்தன் (Australia), முகுந்தன் (Canada) ஆகியோரின் பாசமிகு  தாயாரும், சிறிதரன் திருநாவுக்கரசு, மிரியம் வசந்தன், கவிதா முகுந்தன் ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், ஶ்ரீத்தி, ஶ்ரீஷா ஆகியோரின் அம்மம்மாவும், நாதன், லொறன், சானுஜன், சஜுதன் ஆகியோரின் பாசமிகு  அப்பம்மாவும் ஆவர்.

20/10/23 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals -  101 South Street Granville ல் பார்வைக்கு வைக்கப்பட்டு 22/10/23 ஞாயிற்றுக்கிழமை
Magnolia Chapel - Macquarie Park Cemetery and Crematorium, Corner of Delhi Rd & Plassey Road North Ryde ல் காலை 9 மணியில் இருந்து 12 
மணிவரை இறுதிச் சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

வசந்தி +61479176282 (Australia)
வசந்தன் +61422366756 (Australia)
முகுந்தன் +14166689696 (Canada)
சிறிதரன்  +61401291281 (Australia)

திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

குரு சுதந்திரறாஜ் அவர்களின் சிஷ்ஷை

திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம்

-    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

திவ்யா சர்வேஸ்வரனின் வேணுகான அரங்கேற்றம் 8-10-2023 பரமாட்டா Riverside Theater-இல் வெகு விமரிசையாக நடந்தேறியது. திவ்யா குரு சுதந்திரறாஜ் அவர்களிடம் வேணு இசையை சிறு வயதிலேயே கற்க ஆரம்பித்து, சிறந்த கலைஞராக உருவாகி உள்ளதை அன்று கண்டு களித்தோம்.

அவர் கச்சேரியை மல்லாரியுடன் ஆரம்பித்தார். கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த பைரவி வர்ணத்தைத் தொடர்ந்தார். ஹம்சதொனியில் வினாயகா ஆரம்பித்ததுமே கச்சேரி களை கட்டியது. பார்வையாளரை தன் இசையால் கவர்ந்தார் திவ்யா. இசை தென்றலென வருடி இன்பமூட்ட, தியாக பிரமத்தின் பஞ்சரத்தின கிருதியில் ஒன்றான “எந்தரோ மகானுபாவுலு” இசை கலைஞர்கள் இணைந்து வாசித்து, இசை எனும் இன்ப சாகரத்தில் எம்மை மூழ்கடித்தனர். மண்டபம் நிறைந்த கூட்டம். வருகை தந்தவர்களில் பலர் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு வராதவர்கள். ஆனால் அன்று கர்னாடக இசையை இரசித்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது. இங்குதான் வாத்திய இசையின் மகிமையை உணர முடிந்தது. தியாக பிரமத்தின் பஞ்சரத்தினமாக இருந்தால் கூட குரலிசையில் வார்த்தையாக வெளிவரும்போது அர்த்தத்தை புரிய முயலும் எம்மவர் புரியாத மொழியில் பாடினால் எப்படி இரசிக்க முடியும் என கேள்வி எழுப்புவார்கள். இங்கோ இசையுடன் இணைந்து அவர்கள் உள நிறைவாக இரசிப்பதை உணர முடிந்தது

கரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் அமிர்தவர்ஷினி, திவ்யா அநாயாசமாக வாசித்து பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.

இசை நிகழ்வின் தொகுப்பாளரான சுபாங்கன் நிர்மலேஸ்வரன், எழுதிக் கொடுத்ததை வாசிக்கும் தொகுப்பாளர் அல்ல. இசைக் கலையின் பல விஷயங்களை அறிந்து எடுத்துக்கூறி இசைக்கு மேலும் மெருகூட்டினார். அவருக்கு எமது பாராட்டுகள்.

“நகுமோ” வேணுவைத் தொடர்ந்து வயிலின் என இரு கலைஞர்களும் ஆபேரி இராகத்தை வாசித்த போது, மெய் சிலிர்த்தது. அவர்கள் தொடர்ந்தும் வாசிக்க மாட்டார்களா என ஏங்க வைத்தனர். தாளவாத்தியக் கலைஞர்கள் நீண்ட நேரத்தை எடுத்ததனால் எதையுமே விரிவாக வாசிக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்த உருப்படிகள் யாவும் நேரம் குறைக்க வேண்டியதாகிவிட்டது. அரங்கேற்றத்தின் அடுத்த நாள் ஒரு இசைக் கலைஞரை சந்தித்தபோது, அவர் கூறியது, “இசை அரங்கேற்றம் திவ்யாவிற்கே, மற்றைய கலைஞர்கள் அரங்கேற்றம் சிறப்புற அனுசரணையாக வாசிக்க வேண்டியவரே” என.

இடைவேளையை அடுத்து ராகம் தானம் பல்லவி இடம்பெற்றது. திவ்யா வேணுவும் தொடர்ந்து வயலின் வித்துவான் அனந்தகிறிஷ்ணனும் தெய்வீக இசையை அள்ளி வழங்கினார்கள்.

ஆழமான கர்னாடக இசையினை அடுத்து கச்சேரியில் சில பிரபல பாடல்களை இசைப்பது மரபு. அந்த வகையில் அருணகிரிநாதரின் திருவடிகள், பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் என தொடர, என்னை அழைத்து வந்தவர்கள் மறுநாள் வேலைக்குப் போகவேண்டும், அடுத்து மோகன கல்யாணி தில்லானா மட்டுமே என நாம் மண்டபத்தை விட்டு வெளியேறினோம்.


நவராத்திரி சிறப்பம்சம்

 image0.jpeg

அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே ! 
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
  இன்பகலா வாழ்க்கை எனக்கருள வேண்டும்
  ஈரமொடு வீரம் மனமமர வேண்டும் 
  துன்பது என்னைத் தொற்றாம லிருக்கத்
  துணையாக இருப்பாய் துர்கையம்மா நீயும்

  வாதமிடு குணத்தை வதைத்திடுவாய் அம்மா
  மோதவரும் பகையை விலக்கிடுவாய் அம்மா
  சோதனைகள் அனைத்தும் சாதனையாய் ஆக்க
  துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

 வார்த்தையிலே இனிமை சேர்த்திடுவாய் தாயே
 வம்பர்தமை வாழ்வில் அகற்றிவிடுவாய் அம்மா
 காப்பாக இருப்பாய் கண்டிப்பாய் இருப்பாய்
 கண்ணுக்குள் மணியாக இருக்கின்றாய் நீயும் 

வாழ்வாக இருப்பாய் வளமாக இருப்பாய்
தாழ்வாக இருப்பாரைத் தாங்கியே நிற்பாய்
ஆழமாய் இருக்கும் அருட்கடலும் ஆவாய்
அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே 

கலை இலக்கிய வித்தகர் “ பாடும்மீன் “ சு. ஶ்ரீகந்தராசவின் வாழ்வும் பணிகளும் ! அக்டோபர் மாதம் அகவை 70 இல் பயணிக்கும் பல்துறை ஆளுமை ! ! முருகபூபதி

 


‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்!  அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்!

  மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால்,  கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை  கேட்கமுடியும்.  அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.  

                             பாடும்மீன் என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம்,  அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

1991 ஆம் ஆண்டு ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.

நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு


அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா  “ என்றார்.

முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

அக்காலப்பகுதியில் நாம் நடத்திய தமிழர் ஒன்றியத்தின் முத்தமிழ்விழாவிற்காக நாவன்மைப்போட்டிகளை நடத்தினோம்.

அதற்கு நடுவராக வருகை தந்து போட்டிகளில் பங்குபற்றுபவர்களை  தெரிவுசெய்து தரமுடியுமா..? எனக்கேட்டேன்.  பாடும் மீன் ஶ்ரீகந்தராசா சம்மதித்தார். போட்டி முடிந்ததும், நாவன்மைப்போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்னர் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆலோசனைகளை விரிவுரையாகவே வழங்கினார்.

யாழ்பாணத்திலிருந்து  கடந்த இரண்டுவருடங்களுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் தீம்பூனல் வார  இதழில் தொடர்ந்தும் குறள் இன்பம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களுக்கு இம்மாதம் 01 ஆம் திகதி  70 ஆவது பிறந்த தினம்.  இந்தத்தினத்தை அவரது குடும்பத்தினர் மெல்பனில், கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலை, இலக்கிய அன்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள்  புடைசூழ சிறப்பாக கொண்டாடினர். பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களை  வாழ்த்திக்கொண்டே, இந்தப்பத்தியை தொடருகின்றேன்.     

 உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கிருந்தாலும் இயங்குவார்கள். அவ்வாறு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியம், வானொலி,  இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான பணிகளில் இயங்கிவருபவர் மீன்பாடும்தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி                   பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

                             பாடசாலைப்பருவத்திலேயே இலக்கியப்பணியை ஆரம்பித்தவர்.  அரைநூற்றாண்டு காலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவருபவர்.

களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை - சின்னம்மா                 தம்பதியரின் ஏகபுத்திரனான ஶ்ரீகந்தராசா,  தனது கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்த பின்னர்,  கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும் இணைந்து சட்டத்தரணியானவர்.

இவர்   கற்ற கல்லூரியில்  வெளியான  உயிர்ப்பு என்ற கையெழுத்து  இதழின் ஆசிரியராகவிருந்தபோது இவரது வயது 14 என்பது வியப்பானது!

சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல், முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவுக்கு களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது சிந்தாமணி வார இதழ்.

பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.

கிழக்கிலங்கையிலிருந்து எழுதத்தொடங்கிய   ஶ்ரீகந்தராசாவுக்கு தென்னிலங்கையிலும் எழுத்துப்பணியை தொடருவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது சிந்தாமணி. அத்துடன், தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகையிலும் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறார்.

ஓவியக் கண்காட்சி - மலையகம் 200எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 81 லண்டனில் ஊன்றுகோலுடன் பயணித்து இலக்கியம் பேசிவரும் ராஜேஸ்வரி அக்கா ! முருகபூபதி


கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பினால் நடத்தப்பட்ட  பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கிற்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ,  “ தம்பி,  நாம் வேளைக்கே புறப்படுவோம். ரயில்,  பஸ் ஏறித்தான்  எனது வீட்டுக்குச்செல்லவேண்டும்.  “ என்றார்.

எனது தொடர் பயணத்தில் அன்றை மாலைப்பொழுது அவருடன்தான் ஆரம்பித்தது.

எனது பொதிகளையும் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன்.

அவரது கையில் ஒரு ஊன்றுகோல்.  அதன் துணையோடுதான் அவர்


லண்டன் மாநகரெங்கும் சுற்றி அலைகிறார்.  பஸ்ஸிலும் ரயிலிலும் சில வேளைகளில் ட்ராம்களிலும் பயணிக்கின்றார்.

அவர் எனக்கு ஒரு வாரத்திற்கான பயண அனுமதிச்சீட்டும் வாங்கித்தந்தார்.    லண்டனைவிட்டுப்  புறப்படும்போது யாரிடமாவது அதனைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். “  என்றார்.

நான் அவர் சொன்னதை முற்றாக மறந்துவிட்டேன்.  அந்த அனுமதிச்சீட்டு என்னோடு புறப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கே வந்துவிட்டது.

அது கலாவதியாகிவிட்டது.

ஆனால், இலக்கிய உலகில் இன்னமும் காலாவதியாகாமல் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் ராஜேஸ்வரி அக்காவை, முதல் முதலில் 1980 களில் அவரது எழுத்தின்மூலமே தெரிந்துகொண்டேன்.

அறச்சீற்றத்துடன் பேசும் அவருடன் பழகினால்,  குழந்தைகளுக்கே உரித்தான அவரது இயல்புகளை புரிந்துகொள்ளமுடியும்.

அன்றைய தினம், அவர் தனது ஊன்றுகோலைக் காண்பித்தே அந்த இரட்டைத்தட்டு பஸ்ஸை நிறுத்தியபோது, நான் அவர் பின்னால் ஓடிச்சென்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவரைத் தொடர்ந்து ஏறினேன்.

 கோபம் இருக்குமிடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள்.  அந்த உண்மையை ராஜேஸ்வரி அக்காவிடமிருந்தும் தெரிந்துகொண்டேன்.

அவருடைய வீட்டில் இரண்டு நாட்கள் நான் தங்கியிருந்தபோது, உடன் பிறந்த தம்பி மீது காண்பிக்கும் கரிசனையோடு கவனித்துக்கொண்டார்.

அவரது வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள்தான்.

அவருடைய வீட்டை  அன்று நெருங்கும்போது வீதியோரத்தில் ஒரு முதிய ஆங்கிலேயப்  பெண்மணி, தனது வீட்டு வாசலில் தூசு தட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

ராஜேஸ்வரி அக்கா, சற்றுத்  தரித்து அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

அந்தப்பெண்ணின் கணவர் சில நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருக்கிறார்.  இறுதிச்சடங்கிற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடு ஒன்றிலிருந்து உறவினர்கள் வரும் வரையில் காத்திருப்பதாக அந்தப்பெண் சொன்னார்.

   இனி அந்தப்பெண்ணின் வாழ்க்கை தனிமையில்தான் கழியப்போகிறது. தனிமையை போக்க அவவும் ஏதும் பணிகளில் ஈடுபடவேண்டும்  “ என்று அனுபவத்தில் சொன்ன ராஜேஸ்வரி அக்கா பற்றி எனது யாதுமாகி நூலில் இவ்வாறு எழுதியிருக்கின்றேன்.

படித்தோம் சொல்கின்றோம்: ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நம்பிக்கையூட்டும் இளம் கவிஞர் ! கலாநிதி செ. சுதர்சனின் தாயிரங்கு பாடல்கள் முருகபூபதி

 புகை மண்டிய கொண்டல்


புழுதி மேவிய வடலி

சன்னங்கள் வேயுமூரின்

குருதி பாவிய இருள்,

கருணை போட்டு

வயிறு தள்ளிய மண்மடி,

கூரை பற்றி எரியும்

நெருப்பு வெளி,

கருவாட்டு வாசமணல்,

இழுவையிசைப் பண்,

நுரை தள்ளித் தெளிக்குமொரு

நிலக்கரை மடிப்பு,

இன்னும் விழியில்

அடங்காதிருக்கையில் எழுதி ஒட்டினார்கள்

 “ சிங்கம் தின்ற நிலம் 


வடபுலத்தின் யாழ். மாவட்டத்தில் பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்த வசாவிளான் ஊரிலிருந்து இரவோடு இரவாக இடம்பெயர்ந்து சென்றவர்கள் பின்னாளில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

அவர்களிடமிருந்து  வாய்மொழிக்கூற்றாக அந்த இடப்பெயர்வு வலிகளை கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கின்றேன்.  அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் எனது அயலவர்களான தமிழர்கள் சிலர்,  வசாவிளான் பற்றியும் அந்த மண்ணின் வளம் பற்றியும், தாம் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் கதைகதையாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்

கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க USNS கப்பல்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக வட,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மூவர் மரணம் 25 பேர் காயம் 75 ஆயிரத்து 734 பேர் பாதிப்பு 1138 வீடுகள் சேதம்

30 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடக்கி வைக்கின்றார்


கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

October 13, 2023 2:08 pm 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உலகச் செய்திகள்

 பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும் -தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி

காசா மீதான தாக்குதல் உக்கிரம்!

காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு 300,000 இஸ்ரேலிய படைகள் குவிப்பு

இஸ்ரேலுக்கு நெருக்கமாக அமெ. போர் கப்பல்கள் நிலைநிறுத்தம்

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது குண்டு மழை: உயிரிழப்பு 1,100 ஆக அதிகரிப்பு


பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும் -தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி

October 13, 2023 7:11 am 

ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை காசாவில் செயற்படுத்தப்படும் முழு முற்றுகை கைவிடப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கோமாதா என் குலமாதா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரைப் படங்களில் மிருகங்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தை


பெற்று கொடுத்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவேரையே சேரும். தான் எடுக்கும் பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒண்டிரண்டு மிருகங்களை நடிக்க வைத்து படத்தை வெற்றி படமாக்கும் ஆற்றல் அவருக்கே உண்டான தனிக் கலை. வேட்டைக்காரன், நீலமலைத் திருடன், நேர்வழி, நல்லநேரம், என்று மிருகங்களை நடிக்க வைத்து இவர் எடுத்த படங்கள் வசூலில் சக்கைபோடு போட்டன. இடையில் மிருகங்களை தவிர்த்து துணைவன், பெண் தெய்வம்,தெய்வம்,மாணவன் என்று சில படங்களை தயாரித்த தேவர் நல்ல நேரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தயாரிக்க தலைப் பட்டார். அந்த வரிசையில் 1973ம் ஆண்டு தேவர்

தயாரித்த படம்தான் கோமாதா என் குலமாதா. தன்னுடையஇரண்டாவது பட நிறுவனமான தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் படத்தை உருவாக்கினார் தேவர்.

படத்தின் பேருக்கு ஏற்றாற் போல் படத்தின் முக்கிய கதா பாத்திரம் மாடுதான். இந்த மாடு கதாநாயகியுடனேயே எப்போதும் காணப்படுகிறது. அவள் சொல்வதை செய்கிறது, அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது, விபத்துக்குள்ளாக இருந்த ரயிலை சிவப்பு விளக்கை ஆட்டி நிறுத்தி விபத்தை தடுக்கிறது. கதாநாயகனுக்கும் நல்ல புத்தியை புகட்டுகிறது. இவ்வளவு நல்லதை செய்யும் கோமாதா என் குலமாதா என்பது சரிதானே.

படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரமிளா. ஏற்கனவே பாலசந்தரின் அரங்கேற்றத்தில் விலைமாதுவாகவும், இன்னும் சில படங்களில் அடங்காபிடாரியாகவும் நடித்த இவருக்கு இந்தப் படத்தில் துடிப்பான வேடம். அதனை சிறப்பாக செய்திருந்தார் பிரமிளா. அதே போல் கதாநாயகனாக வருபவர் ஸ்ரீகாந்த். பல படங்களில் வில்லனாக நடித்த இவரை இப்படத்தில் ஹீரோவாக்கி விட்டார் தேவர். ஆனாலும் படத்தில் அவர்தான் வில்லன். பெண்களை கெடுக்கிறார், குடித்து கும்மாளம் போடுகிறார், உதாரியாக செலவு செய்கிறார் இறுதியில் ஐந்தறிவு படைத்த ஜீவன் அவரை மனிதனாக்குகிறது.

படம் முழுதும் மாடு செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்தன . கிளைமக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான மாடுகள் திரண்டு வந்து வில்லனை துரத்துவது நல்ல த்ரில்! ஒளிப்பதிவாளருக்கு ஜே !

கிராமத்தில் தாய், தந்தை இன்றி வாழும் விஜயாவுக்கு உள்ள ஒரே துணை அவள் வளர்க்கும் லட்சுமி என்ற மாடுதான். ஊருக்கு உபகாரம் செய்யும் அவளுக்கு உபத்திரம் கொடுக்க வருகிறான் அருண் என்ற பணக்கார இளைஞன். இருவருக்கும் சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் ஆகிறது. ஆனால் அருண் திருந்துவதாக இல்லை. ஆனாலும் லஷ்மி அவனை மனிதனாக்கி விஜயா வாழ்வில் ஒளியேற்றுகிறது.

படத்தில் நகைச்சுவைக்கு நாகேஷ் பொறுப்பு. ஏமாற்றவில்லை அவர். கவர்ச்சிக்கு எம் பானுமதி. தாய்ப்பாசத்துக்கு எஸ் என் லட்சுமி. குணசித்திரத்துக்கு அசோகன், சுந்தரராஜன் இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், வி கோபாலகிருஷ்ணன் , பேபி சுமதி ஆகியோரும் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் புறம் தள்ளிவிட்டு லஷ்மி என்ற மாடு முன் நிற்கிறது , படத்தையும் நகர்த்துகிறது.

தமிழ் முரசே என் தவிப்பைக்கேளாயோ

 கங்காரு தேசமே என்னைக் கண் நோக்கிப்பாராய!     

கடவுள் படைத்த உயிரைக்காவுகொடுக்காமல் காக்க வேண்டி கடல் கடந்தார் என் கணவன்.

கனிவு நிறைந்த அவுஸ்திரேலிய தேசத்திற்கு வந்தவரை வரவேற்று வாழவைத்தது அந்த தேசம்.

தலை வணங்குகின்றேன் தாயே உன்னை நான்.

அபலைப் பெண் நான் அனுப்புகின்றேன்.. 

என் ஆழ்மனதின் துயரங்களை அதை ஒருமுறை

முரசே நீ முழுவதுமாய்.கேளாயோ

ன்புடனே எனக்கும் தூது செல்லாயோ

அகதியாய் வந்தவர்க்கும் உயிர் உண்டு, உணர்வு உண்டு, உறவுகள் பல உண்டு, எனக்கும் என் கணவனைக் காண்பேனா என ஏக்கமுண்டு.

எண்ணற்ற ஆசையுண்டு ஆண்டவன் தந்த  ஆயுள் ஆயிரம் வருடங்களா அறுபது தாண்டுவதே அரிதாகிப் போகிறது இவ்வுலகில்

ஆயினும் ஆறாய் பெறுகிறது அன்பு மட்டும்.

அகதியாய் உள்ள  என் கணவனைப் பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய நாட்டு சட்டத்திற்கு ஏற்ப நான் அங்கு வந்து என்உறவைப்பார்த்திடவும் ஆழ்மனதின் காயங்களை பகிர்ந்திடவும் அனுமதிக்குமா ?

அன்புநிறை அவுஸ்திரேலிய தேசம் தமிழ்முரசே என் தவிப்பை எழுத்து வடிவில் நீ எடுத்து இயம்பாயோ, எனக்கு ஒரு பதில் தாராயோ, ஏக்கமுடன் காத்திருக்கும் அகதியின் மனைவி நான்.   

 

திருமதி .கஜநந்தினி.வரதலோஜன்

 யா/கதீஜா மகா வித்தியாலயம்.

நவராத்திரி பூஜை - கொலு அலங்காரம், ஷண்டி ஹோமம் - பேர்த் பால முருகன் கோவில்

 
நவராத்திரி கொண்டாட்டங்கள் @ SVT (15 அக்டோபர் முதல் 24 அக்டோபர் 2023 வரை)

 


– அக்டோபர் 23 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீ சரஸ்வதி பூஜை.

– விஜயதசமி பூஜை – அக்.24 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அக்ஷராப்யாசம்.

அறிவை வளப்படுத்த ஸ்ரீ சரஸ்வதியின் அருளைப் பெற அனைவரையும் வரவேற்கிறோம்.

சண்டி மகா யாகம் - 22 அக்டோபர் 2023 ஞாயிறு - நவராத்திரி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது .

 


கலைக் கதம்பம் 2023 - 1911/2023ஸ்ரீ துர்கா ஹோமம் அக்டோபர் 22, 2023 ஞாயிற்றுக்கிழமை

 


"ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த ஸாதிகே

சரண்யே த்ரயாம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே"

ஸ்ரீ துர்க்கை அனைத்து உயிரினங்களின் நலனைக் கவனித்து, அவர்களின் செழிப்புக்காக தன்னை அனைத்து உலகங்களுக்கும் தாயாகக் காட்டுகிறார். சிவபெருமானின் தெய்வீக "சக்தி" ஆற்றலின் செயலில் உள்ள தேவியை எழுப்ப, பல மந்திரங்கள் ஆண்டு முழுவதும் மற்றும் குறிப்பாக நவராத்திரியின் போது உச்சரிக்கப்படுகின்றன.

நவராத்திரியின் போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் 22 அக்டோபர் 2023  ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ துர்கா பூஜையைக் கொண்டாடுகிறது.

காலை 8.00 மணிக்கு ஸ்ரீ துர்காம்பிகா திரிசதி ஹோமத்துடன் தொடங்கி, அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தொடர்ந்து, ஸ்ரீ துர்க்கைக்கு மகா தீபாராதனையுடன் முடிவடைகிறது.