தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்புள்ள வாசகர்களுக்கும்   குடும்பத்தினர் அனைவருக்கும் எமதும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  

அன்புடன்

தமிழ்முரசு ஆசிரியர் குழு 






மண்மகிழ மனம் மகிழ மலர்ந்து வா தீபாவளி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .. அவுஸ்திரேலியா    

  

               

                  வண்ண வண்ண மத்தாப்பு

                        வகை வகையாய் பட்டாசு

                    எண்ண வெண்ண நாவூறும்

                          இனிப்பு நிறை பட்சணங்கள்

                    கண் எதிரே உறவினர்கள்

                          கல கலப்பைக் கொண்டுவர

                    மண்மகிழ மனம் மகிழ

                          மலர்ந்து வா தீபாவளி  !

 

இன்றமிழே இல்லத்திற் பேசுவோம் என்று இனியதீபா வளியன்று சபதம் ஏற்பீர்! !

 


…………………………….. பல்வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி



அறத்தையெலாம் அழித்துவிட்டு அகங்கா ரத்தால்  

        அளப்பரிய அழிவுசெய்த நரகா சுரனை       

மறக்கருணை  யால்மாலோன்   ஆட்கொண்ட வேளை   

        மனந்திருந்திப் பணிவோடு இருகை கூப்பி                  

இறக்கின்ற தருணத்திற் கேட்ட வரத்தை                           

        இன்றுவரை தீபாவளி யெனவே நாமும்                    

சிறப்பாகக் கொண்டாடு  கின்ற வேளை                 

        சிவனருளால் மனத்தகத்தே ஒளியையேற் றிடுவீர்!                       

          

புத்தம்புது பட்டாடை பொலிவுற உடுப்பீர்!            

        போற்றியென்றும் வணங்குமுங்கள் தெய்வம் தொழுவீர்!  

பத்தியோடு  மறையென்னும் தமிழ்மந் திரத்தைப்    

        பக்குவமாய்க் கோவில்களில் ஓதி வருவீர் !                

எத்திக்கும் மனதைநீவிர் அலைய விடாதீர்!              

        இயன்றமட்டும் இன்சொல்லை அன்புடன்  பேசிச்           

சித்தத்தில் சிவனுருவை நிறுத்தி நித்தம்                           

        சிவத்தியானம் சிவதொண்டு  இயற்றி உய்வீர்!                                    

அந்தமில் சுகமும் பெற்று ஆனந்தம் காண்பார் வாழ்வில் !

[ கந்தசஷ்டியை முன்னிட்டு கந்தப்பெருமான் அடியார்களுக்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



கந்தனை நினைப்பார் வாழ்வில்
   வந்திடு வினைக ளெள்ளாம்
வெந்துமே சாம்ப லாகும் 
   வேதனை அகன்றே போகும்
சந்ததம் கந்தன் நாமம்
   சாற்றியே நிற்பா ரெல்லாம் 
அந்தமில் சுகமும் பெற்று
   ஆனந்தம் காண்பார் வாழ்வில்   !


சஷ்டியை நோற்று நின்றால்
   சங்கடம் அகன்றே ஓடும் 
துஷ்டரும் பக்கம் வாரார்
    துன்மதி தொலைந்தே போகும்
இஷ்டங்கள் இணைந்தே வாழ்வில்
    இல்லமும் சிறந்தே ஓங்கும்
நிஷ்டையும் அமைந்தே நிற்கும்
    நிம்மதி நிறையும் வாழ்வில்   !

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 17 யாழ். பல்கலைக்கழகத் தோற்றத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் அக்கப்போர் அரசியலை புறக்கணித்து ஆக்கபூர்வமாக உழைத்த இலக்கியவாதிகள் ! முருகபூபதி


எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  கொழும்பில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக இரண்டு நாட்கள் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு முன்னர் நாடெங்கும் அது தொடர்பாக நடத்திய பிரசாரக்கூட்டங்களில் ஒன்று எங்கள் நீர்கொழும்பூரிலும் நடந்தது.

அதனையும் அங்கிருந்த சில தீவிர தமிழ்க்கொழுந்துகள் எதிர்த்து சுவரொட்டிகளும் ஒட்டின.

அக்கூட்டத்திற்கு பேசவந்தவர் பேராசிரியர் க. கைலாசபதி. அவருடை மாணாக்கர் மு. நித்தியானந்தனும் பிரபல சிங்கள எழுத்தாளரும் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் தலைவருமான குணசேன விதானவும் வருகை தந்து உரையாற்றினர்.

கைலாஸ் பேசிக்கொண்டிருகையில் மண்டபத்தின் கூரைக்கு  கல்


வீச்சும்  நடந்தது. அவர் மேலே கூரையை  பார்த்துவிட்டு தொடர்ந்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சி முடிந்ததும்  பேச்சாளர்கள் மூவரையும் நானே பஸ் நிலையம் வரையில் அழைத்துச்சென்று கொழும்புக்கு இ. போ. ச. பஸ்ஸில் ஏற்றிவிட்டேன்.

இன்றுபோல் அன்று ஓட்டோக்கள் இருக்கவில்லை.  நீர்கொழும்பு  வீதிகளில்  நடந்து வந்து,  திரும்பிச்சென்றார்கள்.

கைலாஸ் எங்கள் ஊர் மேடையில் பேசிக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் கொழும்பில் பத்திரிகைகளில்   மறுநாளுக்கான தலைப்புச்செய்தி அச்சாகிக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

அடுத்த நாள் வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக பேராசிரியர் கைலாசபதி நியமனம் என்ற செய்தி பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் வேண்டும் என்று தமிழ்க்காங்கிரஸ் கட்சி கேட்டது.  அங்கு வேண்டாம் தமிழர்களின் தலைநகரம் திருகோணமலைதான், எனவே அங்குதான் வேண்டும் என்று தமிழரசுக்கட்சியினர் பிடிவாதம் பிடித்தனர்.

மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்

 மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்: எரித்ரியா மீதும் ராக்கெட் வீச்சு

An Ethiopian woman who fled the ongoing fighting in Tigray region holds a child in Hamdait village on the Sudan-Ethiopia border in eastern Kassala state, Sudan November 14, 2020
படக்குறிப்பு,

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண்.

எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர்.

இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 23 - சங்கமம் - சுந்தரதாஸ்

தமிழ் நடிகர்களுக்குள் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலக வாழ்விலும் காதல் மன்னனாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். ஆயிரக்கணக்கான பெண் ரசிகைகளின் அபிமானத்தை கொண்டிருந்த இவர் பல நடிகைகளின் அன்பிற்கும் பாத்திரமாக திகழ்ந்தார். பாப்புஜி ,புஷ்பவல்லி , சாவித்திரி, ஜூலியானா என நால்வருக்கு ஜெமினி கணவனாக விளங்கினார். ஆனாலும் முதல் மனைவியான பாப்ஜி உடனேயே அவருடைய இல்வாழ்வு 65 ஆண்டுகள் தொடர்ந்தது. அப்பேற்பட்ட ஜெமினி கணேசனுக்கு இவ்வாண்டு நூற்றாண்டாகும்.

17ஆம் திகதி நவம்பர் மாதம் 1920 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டதாரியாகி டாக்டராக வேண்டும் என கனவு கண்டவர பின்பு நடிகரானார் நடிகர் ஜெமினி . இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன கே பாலச்சந்தர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் என பல இயக்குனர்களின் விருப்புக்குரிய நடிகராக இவர் விளங்கினார்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 40 – ஒத்து மற்றும் துத்தி – சரவண பிரபு ராமமூர்த்தி

 ஒத்து – ஊதுகருவி

நீ என்ன அவனுக்கு ஒத்து ஊதுறியா? என்று நாம் பலரும் பேசக் கேட்டு


இருப்போம். ஒத்து ஊதுதலும் ஒரு கலை தான். சென்ற நூற்றாண்டின் பாதி வரை உயிர்ப்புடன் இருந்தது ஒத்து இசைக்கருவி. தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நாம் ஒத்தைக் காணலாம்.

 நாதசுரத்தின் துணைக்கருவி ஒத்து. நாசுர இசைக்கு ஆதார சுருதி வழங்கி வந்த கருவி ‘ஒத்து’. நாதசுரம் போலவே இருக்கும். ஆச்சா மரத்தில் செய்யப்பட்டது. ஒத்தில் ஒரு துளை தான் இருக்கும்.  இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்புவார். தற்காலத்தில் நாசுரத்திற்கு சுதிப் பெட்டி வைத்திருக்கிறார்கள்.  அதற்கு முன்பு ஒத்து தான் வாசிக்கப்பட்டது. ஆரம்பம் முதல் முடியும் வரை  ம்ம்ம்ம்ம்ம்எனும்  ஒரே விதமான ஒலி தான் வரும். அதனால் இதை ஊமைக்குழல் என்றும்


சொல்வார்கள். அவ்வளவு சுலபமான கலையல்ல ஒத்து ஊதுவது. குனிந்த தலை நிமிராமல் அடக்கிய மூச்சு ஒத்தின் வழி மேலும் கீழும் சுழல ஊத வேண்டும். வாய் பகுதியில் துணியால் மூடியும் இசைப்பார்கள்.  சிரமமான இந்த வேலையை இலகுவாக்கியது சுதி பெட்டி. பின்பு அதுவும் அழிந்து இப்பொழுது மின்னணு சுதி பெட்டி வந்துவிட்டது. மெல்பர்ன் அருள்மிகு வக்ரதுண்ட பிள்ளையார் கோவிலில் நாதசுர கலைஞர் முனைவர் ஸ்ரீனிவாசன் கலியமூர்த்தி அவர்களின் குடும்பத்தார் போன்ற சிலர் இந்த பழைய ஒத்து இசைக்கருவியைப் பாதுகாத்து ஆயுத பூசை நாட்களில் அவர்கள் முன்னோர் இசைத்த நாதசுரம்/ஒத்து போன்ற இசைக்கருவிகளுக்குப் பூசைகள் செய்து வருகிறார்கள். திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் பகிர்ந்த அரிய ஒத்து புகைப்படம் நீங்கள் இங்கே காணலாம்.

 

தமிழ்நாட்டில் கொங்கு பகுதிகளில் மட்டும் இன்னும் உயிர் மூச்சை விட்டுக்கொண்டு இருக்கின்றது ஒத்து.  இரண்டரை கட்டை சுதி என்று சொல்லக்கூடிய  சின்ன நாயனம் இசைக்கருவி  கொட்டுத்தவுல், பறை, உருமி, பேரிகை போன்ற இசைக்கருவிகளுடன்  வாசிக்கப்பட்டு வருகிறது . இந்த சின்ன நாயனத்திற்கு ஒத்து ஊதும் வழக்கம் தற்பொழுதும் இப்பகுதிகளில் தொடர்கிறது. அங்கேயும் ஆட்குறைப்பு கலாசாரம் வரும் வரை ஒத்து வாழும் என்று நம்புவோம். கொங்கு பகுதி நாட்டார் தெய்வ கோவில் விழாக்கள், திருமணம் மற்றும் இறப்பு வீடுகளில் ஒத்து இசைக்கப்படுவதை நாம் காணலாம். இவர்களின்றி கொண்டாரெட்டி எனப்படும் பழங்குடி மக்களும் ஒத்து இசைக்கிறார்கள். இதுவும் அவர்களின் சிறிய நாதசுரம் போன்ற இசைக்கருவிக்கு சுருதிக் கருவி தான்.

இலங்கைச் செய்திகள்

 அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி

2020 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பற்றிய விவாதம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் நேற்று CID யினரால் கைது

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம்

சடலங்களை எரிப்பதை மீள் பரிசீலனை செய்யவும்

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை

கொழும்பில் மேலும் சில இடங்கள் திங்கள் முதல் தனிமைப்படுத்தல்

மேலும் 293 பேர் குணமடைவு: 11,324 பேர்; நேற்று 468 பேர் அடையாளம்: 16,191 பேர்


அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி

அவுஸ்திரேலியாவில் சமையல் வல்லுனர் கிண்ணத்தை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சிறுமி ஒருவர் வென்றுள்ளார்.

“Junior Master Chef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்ட 11 வயதுடைய  ஜோர்ஜியா என்ற சிறுமி பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய தொலைகாட்சியான Network 10 இல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி-Junior Master Chef Australia 2020

ஏனைய போட்டியாளர்களை பின்தள்ளிய இலங்கை சிறுமி 25,000 அவுஸ்திரேலிய டொலர் பணப்பரிசை வென்றுள்ளார்.

ஜோர்ஜியா உட்பட இறுதிச் சுற்றில் பங்கு பற்றியவர்களுக்கு இரண்டு பிரதான உணவுகள் தயாரிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜோர்ஜியா இலங்கையின் தேசிய பொருட்களிலான உணவுகள் இரண்டை தயாரித்திருந்தார். அதற்கு Tropical Mess என பெயரிட்டிருந்தார். எனது பாட்டி இலங்கையராவார். அவர் எனக்கு இலங்கை உணவுகள் சமைப்பதற்கு கற்பித்தார்.

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி-Junior Master Chef Australia 2020

அதற்கமைய நான் வெற்றி பெற்றேன். வென்ற பரிசு தொகையில் உணவு தொடர்பான விடயங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு

பாதுகாப்பு செயலாளரை பதவி நீக்கினார் டிரம்ப்

கொவிட் –19: ‘பைசர்’ மருந்தில் 90 வீதம் நோய் தடுப்பு ஆற்றல்

டிரம்பின் மோசடிக் குற்றச்சாட்டை தேர்தல் துறையினர் நிராகரிப்பு

பைடனுக்கு ‘உளவுக்குறிப்பு’ வழங்க ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் ஆதரவு

லிபிய கடலில் படகு மூழ்கி 74 பேர் பலி

மியன்மார் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி


தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறுப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச வழக்குத் தொடுநர்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி அளித்திருப்பதாக நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான–நம்பகமான கூற்றுகள் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலமும்  கணங்களும் பிரேம்ஜிஞானசுந்தரன் (1930 - 2014)தன்முனைப்பற்றமனிதநேயவாதியின் மறைகரத்தால்  மலர்ந்த  பணிகள் ! நவம்பர்17 ஆம் திகதி பிறந்த தினம்                                                          முருகபூபதி


எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் மு. கனகராஜன். மல்லிகை ஜீவா எனக்கு  கனகராஜனை  அறிமுகப்படுத்தியிருந்தார்.

இவ்வாறு அறிமுகங்களினாலேயே எனது நட்பு வட்டம் விரிவடைந்திருக்கிறது.  பெருகியிருக்கிறது.

பிரேம்ஜியுடன் 1974 ஆம் ஆண்டிலிருந்து  நெருங்கியிருந்த நான், 05-02-2014 ஆம் திகதி வரையில்  அவருடன் தொடர்போடிருந்தேன்.  இவ்வாறு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக  எனது நெஞ்சத்திற்கு நெருக்கமாக வாழ்ந்திருக்கும் அவருடன் நான் தொலைபேசியில்  இறுதியாக உரையாற்றிய திகதியைத்தான் இங்கே பதிவுசெய்கின்றேன்.

அன்றைய தினம்தான் நான் அவருடன் தொலைபேசியில் உரையாற்றிய இறுதிநாள்.  சுகவீனமுற்றிருக்கிறார் என அறிந்ததும் தொடர்புகொண்டு உரையாடினேன்.  வழக்கமாக உற்சாகத்துடன் சிரிக்கச்சிரிக்கபேசும் அவரது குரலில் தொனித்த சோர்வு என்னை நிலைகுலையச்செய்தது.

அவரை நாம் ஞானா என்றுதான் அழைப்போம்.


 “ என்ன ஞானா..? எப்படி இருக்கிறீர்கள்..?  “ என வழமையான சம்பிரதாய கேள்விதான் கேட்டேன்.

 “  ஏதோ இருக்கிறன்.  கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. அவ்வளவுதான்.  நீர் எப்படி..? பிள்ளைகள் எப்படி…?   “ எனக்கேட்டார். அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு பேச்சை தொடர்ந்து வளர்க்காமல்,  “ பிறகு தொடர்புகொள்கின்றேன்.  “ என்றேன்.

மூன்று நாட்களில், அதாவது  08-02-2014 ஆம் திகதி அவர்  எங்களையெல்லாம்  விட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற தகவல் என்னை வந்தடைந்தது.

மௌனத்துள் உறைந்துபோனேன்.

எனது வாழ்வில் நேர்ந்த சில எதிர்பாராத நல்ல  திருப்பங்களிலும் அவர் கலந்திருக்கின்றமையால் இன்றும் அவர் என்னோடு வாழ்கின்ற உணர்வுடனேயே இதனை எழுதுகின்றேன்.

தமிழர் கலாச்சாரமும், கொரொனா வைரசும் - ஆக்கம்: சிவனடிமை



"சூரரைப் போற்று" - கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்

 "சூரரைப் போற்று" - கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் செய்த சாதனைகள்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
"சூரரைப் போற்று" கேப்டன் கோபிநாத்தின் கதை என்ன?

சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் வெளியாகிறது. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்தான் இது.

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.

நூலகர் நடராஜா செல்வராஜாவின் ஈழத்துத் தமிழ் நாவலியல் நூல்



ஈழத்துத் தமிழ் நாவலியல்
நூல் வெளிவந்துவிட்டது. நூலின் விலை லண்டனில் தபால் செலவுடன் 25 பவுண்களாகும்.  ஐரோப்பாவுக்குள்  அனுப்பவதானால் நூலின் விலை தபால் செலவுடன் முப்பது பவுண்களாகும்.  (ஆஸ்திரேலியாவுக்குள்  அனுப்பவதானால்  ஆசிரியரைத்  தொடர்பு கொள்ளவும் )

ஈழத்தின் தமிழ் நாவலியல்: ஓர் ஆய்வுக் கையேடு. என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், இணை வெளியீட்டாளர், கொழும்பு 06 -  குமரன் புத்தக இல்லம், 39, 36 ஆவது ஒழுங்கை, முதலாவது பதிப்பு, ஜுன் 2020.

754 பக்கங்கள் ,   இலங்கை விலை:  3600/= ரூபா.


1856 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நீண்டதோர் காலகட்டத்தில் இலங்கையில் வெளியான 1420 தமிழ் நாவல்கள்

தொடர்பான ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டதும், குறிப்புரையுடன் கூடியதுமானதொரு பாரிய தொகுப்பு இதுவாகும்.

 

நாவல்கள் தொடர்பான குறிப்புகளையும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் நாவல் வெளியான வருடம், பதிப்பகம், உள்ளடக்கம் முதலான துல்லியமான தகவல்களையும் திரட்டித் தருகின்ற சமூகப் பயன்பாடு மிக்க அரியதோர் படைப்பு இது.

 

 ஈழத்தின் தமிழ் நாவலியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் எவருக்கும் தவிர்க்கமுடியாதவோர் உசாத்துணை ஆவணம் இது. 


Paying in to  Bank Account

Account Name: N.Selvarajah

Bank (1):  HSBC              Sort Code: 40-30-32                      

Account Number: 22335077

IBAN No. GB88HBUK40303222335077  

BIC. HBUKGB4144A

 

பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை ) முருகபூபதி


 “ கெதியா வீடு மாறவேண்டும். இல்லையென்றால் நாங்கள் வேறு வீடு


பார்த்துக்கொண்டு போகவேணும்  “

சிங்காரவேலர் மனைவியிடம் புறுபுறுக்கத் தொடங்கினார். அவரது இந்தப்புறுபுறுப்பு, மருமகள் வீட்டுக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு தொடங்கிவிட்டது.

மகனும் மருமகளும் காலையில் துயில் எழும்புவதற்கு முன்னர், சமையலறையில் மனைவி நீலாம்பிகையிடம் கோப்பியோ, தேநீரோ வாங்கி அருந்தும்போதுதான் அவர் இந்த வீடு மாறவேண்டும், அல்லது மகன் மருமகளை இடம் மாற்றவேண்டும் என்ற பல்லவியை பாடத் தொடங்குவார்.

கொரோனோ காலத்தில்தான்   அவரது மகன் செல்வேந்திரனுக்கும்  சாருலதாவுக்கும்  திருமணம் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களை வைத்துக்கொண்டு மிக…. மிக… மிக… எளிமையாக நடந்தது.

தை மாதம் பிறந்ததும்  கோயில் மண்டபத்தில் நடத்துவதற்காக


ஐநூறுபேருக்கு மேல் திருமண அழைப்பிதழும் அனுப்பி, வெளிநாடுகளிலிருக்கும் உறவுகளும்  வருவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவெய்திய சூழ்நிலையில் இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் வந்து அனைத்து ஏற்பாட்டையும் சீர்குலைத்துவிட்டதே என்ற கோபம் அவருக்கு மட்டுமல்ல, மணமக்களுக்கும் சம்பந்தி வீட்டாருக்கும்தான் நீடித்தது.

ஐந்து பேருடன்தான் திருமண நிகழ்வுகள் நடத்தலாம் என்ற அரசின் உத்தரவு வந்ததும் இரண்டு குடும்பங்களுக்குமிடையில் தொலைபேசி பேச்சுவார்த்தைகள் முதலில் சுமுகமாகத்  தொடங்கி, படிப்படியாக சர்ச்சையாகி,  நிச்சயிக்கப்பட்ட திருமண பந்தமே குழம்பிவிடலாம் என்ற  ஏமாற்றத்தையும் நோக்கி நகர்ந்தபோதுதான்,  லண்டனிலிருந்து சிங்காரவேலரின் தங்கை அவருக்கு புத்திமதி சொல்லி, பெண்வீட்டாருடனும் சமாதானம் பேசி, தவறவிட்ட திருமண நாளுக்குப்பதிலாக வேறு  நாளை குறித்து பத்துப்பேருடன் அந்தத் திருமணம் நடந்தது.

   கனடாவிலிருக்கும் சிங்காரவேலரின்  மூத்த மகள்,  தம்பியின்  திருமணத்திற்காக  அவுஸ்திரேலியா வந்து கட்டுவதற்கு கனடாவில் வாங்கிய  தங்கச் சரிகை போட்ட காஞ்சிபுரம் சாரியையும் மணமக்களுக்கு  பரிசளிக்க வாங்கிய மோதிரங்களையும் ஸ்கைப்பில் அழாக்குறையாக காண்பித்தாள்.

லண்டனிலிருக்கும்  அவரது தங்கையும்  “ இந்தா  பாருங்க அண்ணா, நானும் அவரும் வருவதற்கு எடுத்த  ஃபிளைட் டிக்கட்  ஐடினரி.  இனி என்ன செய்வது..? எப்போது இதற்கு ரிஃபண்ட் தருவாங்களோ தெரியாது  “ என்று  புலம்பினாள்.