கானா பிரபா
புத்தக வாசிப்புப் பழக்கம் என்பது இன்று கிண்டில் வழி மின் பதிப்பு வாகனமேறியிருக்கும் சூழலில் கிண்டில் பயனாளருமான திரு என்.சொக்கன் அவர்களை வானலையில் சந்தித்தேன். இந்த நீண்ட உரையாடலில் கிண்டில் மின் பதிப்புகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத பல விடயங்களை என்.சொக்கன் விரிவாகவும், விளக்கமாகவும் பகிர்கிறார்.
பேட்டியில் கேட்ட சில கேள்விகள்
நீங்கள் எழுத்தாளராகப் பல தொழில் முனைவர்கள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் குறித்தெல்லாம் ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள் அந்த வகையில்
ஐபாட் போன்ற கைக்கணிகள் நுகர்வோரை ஆக்கிரமித்த சூழலில் Kindle சாதனத்தின் மீதான அபிமானம் பெருகுமென்று கணித்தீர்களா?
இன்றைய சூழலில் புதிய புத்தகங்களை அச்சுப் பதிவாக வெளியிடும் சம காலத்தில்
எப்படி கள்ளத்தனமாக திரைப்படங்களை வெளியிடும் செயற்பாட்டுக்கு Amazon Prime ஒரு சவாலாக வந்ததோ அது போல் புத்தகங்களை pdf ஆகத் திருட்டுத்தனமாக வெளியிடும் முறைமைக்கு இந்த kindle புத்தகங்கள் ஆப்பு வைத்தது என்று கூறலாம் ஆனால் சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம் பேசிய போது இப்போது கிண்டில் வழி புத்தகங்களையும் திருடும் செயற்பாடு வந்திருப்பதாகத் தயங்கினார்
இது குறித்து உங்கள் கருத்து?
இன்று கிண்டிலில் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து நாட்டுடமையாக்கப்படாத கடந்த நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்களும் கிடைக்கிறதே இவை முறையான உரிமத்தோடா வெளிவருகின்றன இல்லையெனில் எழுத்தாளர் பக்கமிருந்து எவ்வகையான நடவடிக்கை எடுக்கமுடியும்?
எப்படி வலைப்பதிவு வழியாக எண்ணற்ற எழுத்துகள் குவிந்தனவோ அது போல கிண்டிலில் இன்று யாருமே பதிப்பிக்கலாம் என்ற சூழல் ஆரோக்கியமானது தானா?
தமிழ்ப் புத்தகங்களைப் பொறுத்தவரை அவற்றைப் பதிப்பிக்கும் போது ஆங்கில ஊடகம் போன்று ஒத்த வசதிகள் இல்லை என்ற கருத்து நிலவுகிறது கிண்டிலில் தொடர்ந்து நூல்களை வெளியிடும் அனுபவத்தில் இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பெரும்பாலான தமிழ் நூல்கள் அமேசன் இந்தியா வழியிலேயே கிட்டுகின்றன மற்றைய நாடுகளின் தேடுபொறியில் கூடச் சிக்குவதில்லை இது பற்றி?
காணொளி இணைப்பு
No comments:
Post a Comment