ஜோர்ஜ் கொலையையடுத்து நொருங்கும் நிறவெறி!
திரும்புகிறது வரலாறு

வரலாறு திரும்புகிறது... உலக மக்கள் விழிப்பின் உச்சத்துக்கு வந்துள்ளனர்.. லண்டனில் அடிமைகளை வியாபாரம் செய்து பணம் ஈட்டிய ஆங்கிலேயர் எட்வர்ட்ஸ் கோஸ்ட்டனின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் துவம்சம் செய்துள்ளனர்.

125 ஆண்டு காலமாக இருந்த சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன், அதை ஆவேசமாக இழுத்துக் கொண்டு போய் கடலில் வீசியும் எறிந்தனர். அமெரிக்காவின் மின்னசொட்டாவில், ​ேஜார்ஜ் என்ற கறுப்பினத்தவரின் கொலை சம்பவமானது, உள்நாட்டுப் பிரச்சினையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இலட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டக்கார்களைப் பார்த்து ஜனாதிபதி ட்ரம்ப் திணறுகிறார். எச்சரிக்ைக விடுக்கிறார். இராணுவத்தை்க் கொண்டு அடக்க போகிறேன் என்று எச்சரிக்கிறார். இருந்தாலும் சொந்த நாட்டில் ஒருத்தரைக் கூட இவரால் அடக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இவரது 2வது மனைவி, மகளும் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
​ேஜார்ஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.. ஆனால் இப்போது நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.
அதுவும் உலகளாவிய அளவில் உருமாறி உள்ளது. இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. லண்டனில் 'முன்னாள் பிரதமரின் வின்ஸ்ட்டன்ட் ​ேசர்ச்சிலின் நினைவுச் சின்னம் தீது இனவெறி' என்று போராட்டக்காரர்கள் எழுதி வைத்ததே இதற்குச் சாட்சி. இதைத் தவிர, அங்கிருக்கும் மகாத்மா காந்தி சிலை, ஆபிரகாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளமை இன்னுமொரு சாட்சி.
இப்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.இங்கிலாந்தில் எட்வர்ட் கோஸ்ட்டனின் சிலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.கோஸ்ட்டன் அங்கு முன்னாள் எம்பியாக இருந்தவர். அடிமைகளை விற்றே பணம் சம்பாதித்து வந்தவர்.

இவரது சிலையைத்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர். அத்தோடு விடவில்லை, அந்தச் சிலையை தரதரவென இழுத்துக் கொண்டு போய் கடலில் வீசியெறிந்தனர்.
125 ஆண்டு காலமாக இருந்த சிலை துவம்சம் செய்யப்பட்டது மிகப் பெரிய அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.
போராட்டக்காரர்கள் எந்த அளவுக்கு உக்கிரத்தில் உள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.. இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த பொலிசார் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் யாரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களின் ஆவேசத்தை குறைக்க முடியவில்லை. அவுஸ்திரேலியாவிலும் கொந்தளித்து உள்ளனர் மக்கள்.ஐரோப்பியாவின் பெல்ஜியத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் நகரவில்லை. பிரேசிலில் நடந்த போராட்ட முழக்கங்கள் விண்ணை முட்டி வருகின்றன.
அமெரிக்காவில் தடியடியுடன் கண்ணீர்ப் புகையும் வீசப்பட்டது. மிளகுப் பொடி கூட அவர்கள் மீது தூவப்பட்டது.
நகராமல் கொட்டும் மழையிலும் போராட்டம் வெடித்து சிதறி வருகிறது. அமெரிக்காவில்தான் போராட்டம் ஆரம்பமானது என்றாலும், இன்று ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் மக்கள் திரண்டுள்ளது சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
உலக வரலாற்றை திருப்பி போட மக்கள் ஒன்று திரண்டதன் அடையாளமாகவும் இது உருவெடுத்துள்ளது.   நன்றி தினகரன் 


No comments: