அந்த மழை நாள் - செ .பாஸ்கரன்

.

சாரல் மழையில் நனைந்த காற்று 
குளிரை சுமந்து வருகிறது 
கூரையில் விழும் மழையின் தூறல்கள்  
புதிய சந்தமிசைக்கிறது 
மனது மத்தாளம் கொட்ட 
மழையில் நனைகிறேன் 
அன்று நீ மழையில் நனைந்தபடி 
புன்னகைத்தது போலவே 
புதிதாய் மலர்ந்த பூக்களும்  
புன்னகைத்து நனைகிறது 
நீயும் நனைந்தாய் 
நானும் நனைந்தேன் 
இன்று உன் நினைவுகள் 
மழை நீராய் வழிகிறது.


No comments: