இன்னும் எப்போ பூ பூக்குமோ?? -கவிதை

.


உன் மெளனமும்
என் மெளனமும்
இன்னும் எப்போ
பூ பூக்குமோ?

காதல் செய்யும் என் கனவாய் நீ
கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ

பனியில் - நீ
கனியா

நெஞ்சோரம் சாய்வாய்

மொட்ட விழ்ந்த கள்ளி
சட்டென்று எள்ளி
நகைகொண்டாய் உயிரில்

பயிர் கொண்ட கள்வா
உறவாட வருவாய்
பலநாள் என்னெதிரில்

மனசென்னும் இசையில்
விசைகொண்ட ராகம்

மனசென்னும் இசையில்
விசைகொண்ட தாளம்


மணவாளா மதுரங்கள் வீசும்
பூவாய் நீ
எனைக்கொள்ள
உடன் வந்து தீ மூட்டு

கைநீட்டி நீயும்
முத்தங்கள் தந்து
கடந்தாய் கனவில்

கைநீட்ட நானும்
விட்டுத் தள்ளி நீயும்
கட்டி அணைத்தாய் குளிரில்

சொல்லாத சொல்லும்
கால்கொண்ட பூவாய்

சொல்லாத சொல்லும்
நடமாடி என்னோடு வா வா
உயிர்சேர்ந்து
பொருள் தேடும்
பொன்னான நேரம் இது
nantri sidaralkal.blogspot

No comments: