முட்டையிடும் பெட்டைக்கோழி! -கவிஞர் வாலி

.


கவிஞர் வாலியிடம் என்ன இப்படியான பாடல்களும் எழுதுகிறீர்களே என்று கேட்டபோது அவர் கவிதையில் கூறிய விடை .


இங்கே நான் 
வண்ணமொழிப் பிள்ளைக்குக் 
தாலாட்டும் தாய்; 

அங்கே நான் 
விட்டெறியும் எலும்புக்கு 
வாலாட்டும் நாய்! 

மேலும்… 

எந்தப்பா சினிமாவில் 
எடுபடுமோ? விலைபெறுமோ? 
அந்தப்பா எழுதுகிறேன்; 
என்தப்பா? நீர் சொல்லும்! 

மோனை முகம் பார்த்து 
முழங்கிட நான் முயற்சித்தால் 
பானை முகம் பார்த்தென் 
பத்தினியாள் பசித்திருப்பாள் 

கட்டுக்குள் அகப்படாமல் 
கற்பனைச் சிறகடிக்கும் 
சிட்டுக்கள் நீங்கள்; 
சிறியேன் அப்படியா? 

மெட்டுக்குள் கருத்தரித்து 
மெல்லவே இடுப்புநோகத் 
துட்டுக்குத் தகுந்தவாறு 
முட்டையிடும் பெட்டைக்கோழி!


No comments: