.
எல்லைகளற்ற மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது
நான் தவழ்ந்து திரிந்தபோது
என் பின்னே நடந்து திரிந்தவள்
நான் நிமிர்த்து நின்றபோது
என்னைத் தொடராதிருந்தவள்
தூரநின்று அழகை ரசித்தவள்
துயரம் என்று கண்ணீர் விடுகையில்
அருகில் இருந்து அணைத்துக்கொண்டவள்
எந்தன் விழியாய் என்னுள் ஒளியாய்
கேள்வியும் அவளாய் விடையும் அவளாய்
இருளில் ஒளிரும் இன்ப விளக்காய்
எனக்காய் எல்லாம் அவளே ஆனவள்
மெய்என்றிருந்த பொய்யை விடுத்து
காற்றில் கலந்து நறுமணம் ஆனவள்
மீண்டும் எழுந்து மூச்சுக் காற்றாய்
என்னுள் நிறைகிறாள் .
எல்லைகளற்ற மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது
எல்லைகளற்ற மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது
நான் தவழ்ந்து திரிந்தபோது
என் பின்னே நடந்து திரிந்தவள்
நான் நிமிர்த்து நின்றபோது
என்னைத் தொடராதிருந்தவள்
தூரநின்று அழகை ரசித்தவள்
துயரம் என்று கண்ணீர் விடுகையில்
அருகில் இருந்து அணைத்துக்கொண்டவள்
எந்தன் விழியாய் என்னுள் ஒளியாய்
கேள்வியும் அவளாய் விடையும் அவளாய்
இருளில் ஒளிரும் இன்ப விளக்காய்
எனக்காய் எல்லாம் அவளே ஆனவள்
மெய்என்றிருந்த பொய்யை விடுத்து
காற்றில் கலந்து நறுமணம் ஆனவள்
மீண்டும் எழுந்து மூச்சுக் காற்றாய்
என்னுள் நிறைகிறாள் .
எல்லைகளற்ற மேகக்கூட்டம் போல்
என் அம்மாவின் நினைவுகளும்
நெஞ்சை நிறைக்கிறது
1 comment:
வணக்கம் பாஸ்கரன்
கவிதை மிக அழகான பொருள் பொதிந்த கவிதையாககாணப்படுகிறது.
மெய்என்றிருந்த பொய்யை விடுத்து
காற்றில் கலந்து நறுமணம் ஆனவள்
என்றவரிகளும்
எந்தன் விழியாய் என்னுள் ஒளியாய்
கேள்வியும் அவளாய் விடையும் அவளாய்
என்றவரிகளும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் ஓர் ஆழ்ந்த கவிதையை படித்த திருப்தி என்னுள் எழுந்தது.
பாரதியியின் அன்னையை வேண்டுதல் கவிதையின் ஆழம் இங்கே தெரிகிறது. இப்படியான ஆழமான கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
ஆனால் சிறிதாக முடித்துவிட்டீர்கள்
அன்புடன்
செல்வி
Post a Comment