தங்கள் நிறுவனம் மூலம் நூறு படங்களுக்கு மேல் படமாக்கிய பட
நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் அதிபர் டி . ஆர். சுந்தரத்தின் மறைவுக்கு பின் அவரின் மகன் ராமசுந்தரம் நிர்வாகத்தை பொறுப்பெடுத்து 100 வது படமாக வல்லவனுக்கு வல்லவன் படத்தை தயாரித்து அப் படம் வெற்றி பெற்றது. உஸ்தாத் கி உஸ்தாத் என்ற ஹிந்திப் படத்துடன் தோ உஸ்தாத் என்ற படத்தின் உரிமையையையும் அவற்றின் தயாரிப்பாளரும், நடிகருமான ஷேக் முகத்தாரிடம் பெற்றிருந்த ராமசுந்தரம், உஸ்தாத் கி உஸ்தாத்தை வல்லவனுக்கு வல்லவனாக்கி விட்டு , அடுத்து 1966ம் வருடம் தோ உஸ்தாதை தங்களின் 101வது படமாக இரு வல்லவர்கள் என்ற பெயரில் படமாக்கினார்.
இந்த படத்தை எடுக்க அவர்கள் எண்ணிய தருணம் அதில் ஹீரோவாக
நடிக்க மிகப் பொருத்தமாக வந்து வாய்ந்தவர் ஜெய்சங்கர். நான்கைந்து படங்களில் நடித்திருந்த ஜெய்சங்கர் இப் படத்துக்கு மிக பொருந்தினார் . அதே போல் சிறு வேடங்களில் நடித்து , நடனமாடி வந்த எல் . விஜயலஷ்மி கதாநாயகியானார் . ஜெய்யிடம் இளமை, வசீகரம், ஆக்க்ஷன் எல்லாம் அமைத்திருக்க , விஜலக்ஷ்மியிடம் ஆடும் திறன், துறுதுறுப்பு, கவர்ச்சி இளமை கொட்டிக் கிடந்தன. ஜெய்க்கு ஏற்ற ஜோடி விஜயலஷ்மி என்ற சீல் இந்தப் படத்திலேயே குத்தப் பட்டு விட்டது.
நடிக்க மிகப் பொருத்தமாக வந்து வாய்ந்தவர் ஜெய்சங்கர். நான்கைந்து படங்களில் நடித்திருந்த ஜெய்சங்கர் இப் படத்துக்கு மிக பொருந்தினார் . அதே போல் சிறு வேடங்களில் நடித்து , நடனமாடி வந்த எல் . விஜயலஷ்மி கதாநாயகியானார் . ஜெய்யிடம் இளமை, வசீகரம், ஆக்க்ஷன் எல்லாம் அமைத்திருக்க , விஜலக்ஷ்மியிடம் ஆடும் திறன், துறுதுறுப்பு, கவர்ச்சி இளமை கொட்டிக் கிடந்தன. ஜெய்க்கு ஏற்ற ஜோடி விஜயலஷ்மி என்ற சீல் இந்தப் படத்திலேயே குத்தப் பட்டு விட்டது.
ஜெய் ஒரு வல்லவன் என்றால், மற்றைய வல்லவன் ஆர் .எஸ் . மனோகர். சுந்தரத்தித்தின் அபிமானத்தைப் பெற்ற மனோகர் எல்லா மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும் இடம் பெற்று அவர்களின் ஆஸ்தான நடிகரானார். இதிலும் அவர் இரண்டாவது ஹீரோவானார். ஜெய், மனோகர் இருவரையும் சுற்றியே படத்தின் கதை அமைக்கப் பட்டிருந்தது.
பெற்றோரை இழந்த மோகன், ராஜன் இரு சிறுவர்களின் வாழ்வில் கடத்தல்காரனான சுந்தரமூர்த்தி குறுக்கிட , இரு சகோதரர்களும் பிரிகிறார்கள். கொள்ளைக்காரர்களாக உருவெடுக்கும் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகளாக சந்திக்கிறார்கள். ராணி என்ற கோடிஸ்வரியையை கடத்தி சென்று பணத்தை அபகரிக்க அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் போட்டி போடுகிறார்கள் , மோதுகிறார்கள். இந்த மோதலினால் மோகன் தன் மனைவி , குழந்தை இருவரையும் விட்டுப் பிரிந்து சிறை செல்ல நேருகிறது. ஆரம்பத்தில் ராஜனை நல்லவன் என்று எண்ணி காதலிக்கும் ராணி பின்னர் அவன் திருடன் என்று அறிந்து அவனை விட்டு நீங்கி நடன குழுவில் சேர்ந்து வெளிநாடு செல்கிறாள். இதற்கு இடையில் சுந்தரமூர்த்தி ராணியை ஒரு கையாலாகாதவனுக்கு கட்டி வைத்து அவளின் சொத்துகளை அடைய அலைகிறான். இப் பிரச்னைகளில் இருந்து அண்ணன் தம்பிகளான இரு வல்லவர்களும் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் , ஒன்று சேர்ந்தார்கள் என்பதே மீதி படம்.
ஹிந்தியில் இருந்து வந்த படம் என்ற போதும் தமிழ் படத்தின் திரைக் கதை மேலும் மெருகூட்டப் பட்டிருந்தது. குறிப்பாக சுந்தரமூர்த்தி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை மோகனின் மகன் நீதிபதி முன்பும், போலீசார் முன்பும் நடித்துக் காட்டும் காட்சி அருமை. அதே போல் மோகன் தன் மகனை சந்தித்து உருகும் காட்சியும் மனதை உருக்கியது. இதில் பேபி ஷகிலாவின் நடிப்பு சூப்பர்!
1966ம் வருட காலம் தமிழ் சினிமா பல மாற்றங்களை காணத் தொடங்கியிருந்தது. உடலுடன் ஒட்டிக் கொண்ட சிக்கென்ன்ற ஆடை, கிளப்பில் கவர்ச்சி நடனம், நெருக்கமான காதல் காட்சிகள் எல்லாம் தங்கள் விசிட்டிங் கார்டை கொடுக்க தொடங்கியிருந்தன. அது இரு வல்லவர்கள் படத்தில் நன்கு தெரிந்தது. விஜயலஷ்மியின் நடனங்கள் ரசிகர்களை கிளுகிளுக்க வைத்தது. ஜெய்யின் ஆக்க்ஷன் ரசிகர்களை கவர்ந்தது.
படத்தில் தங்கவேலு, மனோரமா, கருணாநிதியின் காமெடி நன்கு
ஈடுபட்டது. பல வேடங்களில் வந்து குபீர் சிரிப்பை வரவழைக்கிறார் தங்கவேலு. இவர்களுடன் எஸ் .ஏ . அசோகன், வசந்தா, பக்கிரிசாமி, ஆகியோரும் நடித்திருந்தனர்.
ஈடுபட்டது. பல வேடங்களில் வந்து குபீர் சிரிப்பை வரவழைக்கிறார் தங்கவேலு. இவர்களுடன் எஸ் .ஏ . அசோகன், வசந்தா, பக்கிரிசாமி, ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் க. தேவராஜன். இரண்டிலும் தான் வல்லவன் என்பதை நிரூபித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. இசையமைத்தவர் வேதா. பல பாடல்கள் ஹிந்தி மெட்டில் இருந்து தமிழுக்கு வந்த போதும் அதில் இனிமையும், நேர்த்தியும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், காவிரிக்கரையில் தோட்டத்திலேயே கானம் வந்தது தோழியரே, உன் பழக்கத்தின் மேல் என்ன துடிப்பு, குவா குவா பாப்பா அவ குளிக்க காசு கேட்பா, அனுபவி ஜோரா அனுபவி பாடல்கள் அறுபது வயதைக் கடந்தும் வேதாவின் இசையில் மயக்குகின்றன.
படத்துக்கான நடனங்களை பி. ஜெயராமன் அமைத்தார். பிற் காலத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக விளங்கிய ஜூடோ ரத்தினம் இப் படத்தில்தான் ரசிகர் மத்தியில் அடையாளம் காணப்பட்டார். எல் . பாலு படத் தொகுப்பை கவனித்து கொண்டார்.
ஏற்கனவே பாக்யலஷ்மி, யாருக்காக அழுதான் படங்களை டைரக்ட் செய்திருந்த கே. எஸ். சீனிவாசன் இரு வல்லவர்கள் படத்தையும் இயக்கினார். படம் வெற்றி படமாகி , ஜெய்சங்கர், மாடர்ன் தியேட்டர்ஸ் இடையே நீண்ட , நெருங்கிய உறவுக்கு அடித்தளம் இட்டு , இவர்கள் கூட்டில் மேலும் பல படங்கள் உருவாக காரணமாகியது.
பின்னர் இதே படத்தை தழுவி சிங்களத்தில் காமினி பொன்சேகா நடிப்பில், தாஸ் முகம்மத் தயாரிப்பில் , லெனின் மொறாயஸ் இயக்கத்தில் சூரையான்கேத் சூரையா படம் உருவாகி அதுவும் சக்ஸஸ் ஆனது. அதன் பின்னர் கே. பாலாஜி இதே இருவல்லவர்கள் படத்தை கமல், ஜெய்சங்கர் நடிப்பில் சவால் என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்டார். இனியும் இப் படத்துக்கு மீண்டும் மறு அவதாரம் கிட்டுமோ என்னவோ!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment