வேட்டை! ---கவிதை -மப்றூக்

.
சில பாடல்கள் சில முகங்களை ஞாபகப்படுத்தும், சில முகங்கள் சிலபாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனால், இப்போதெல்லாம் கேட்கும் எல்லாப்பாடல்களும் உன்னையே ஞாபகப்படுத்துகின்றன.
ஆனாலும், சந்தோசப்பாடல்களில் வெட்கத்துடன் தலைகாட்டி விட்டு மட்டுமே செல்லுகின்ற நீ, சோகப்பாடல்களிலோ சீவியம் நடத்துகின்றாய்!
உன் காதல் கடிதங்களில் கூட, அதிகமாய் நீ அனுப்பி வைத்ததெல்லாம் கண்ணீரைத்தானே!
 பாலைவனைத்தில் தனித்தலையும் பசிகொண்டதொரு ஒட்டகம் மாதிரி, உன்னைத் தேடியலைகிறேன். நிழலாய்க் கூட நீ வருகிறாயில்லை?
காதல் இத்தனை சுயநலமிக்கதென்றால் உன்னைச் சந்தித்திருக்கவே மாட்டேன்!
உண்மையில் இந்த வலியை காதல்தான் தருகின்றதா இல்லை நீ தருகிறாயா?
ஓடி ஒளிய இடமற்றதொரு பரந்த வெளியினில்,  கழுகளால் விரட்டப்படும் ஒரு கோழிக்குஞ்சு போல், உன் நினைவுகளால் நான் வேட்டையாடப்படுகின்றேன்!
எரிகிறது என் இரவுகள்! நீயோ பனிப்பூக்களோடு விளையாடிக் கொண்டிருப்பாய்!
நீ சிரித்தது, நீ சினந்தது
நீ அழுதது, நீ அணைத்தது
ஒற்றை வார்த்தை சொல்லாமல்
நீ மறைந்தது, மறந்தது
இதில் – எதை
காதல் என்கிறாய்??                                         

நன்றி kaattu.wordpress
No comments: