சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு
ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!
பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமகாண ஆளுநர் வேதநாயகன்
யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்
சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு
28 Jan, 2026 | 05:19 PM
(எம்.நியூட்டன்)
தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கேற்ரலுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார்.
இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016இல் கிளிநொச்சியிலும் எமது அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்
லண்டனில் வசிப்பவர்களுமாகிய வைத்திய கலாநிதி கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் மனமுவந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பீடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் , சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதிதிகள் உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நன்றி வீரகேசரி
ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!
28 Jan, 2026 | 04:26 PM
லண்டன் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில் ரயில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு மீதான விசாரணைகளை மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு அறிவித்து வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமகாண ஆளுநர் வேதநாயகன்
28 Jan, 2026 | 04:13 PM
(எம்.நியூட்டன்)
போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி
சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (28) கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.
உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறி, உங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும்.
இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய ஜெயசேகரம் நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார்.
கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கின்றார் என்ற அடிப்படையில், இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு அவர் கிளிநொச்சியைத் தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள், என்றார்.
வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்காக ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா
செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவியினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!
28 Jan, 2026 | 01:23 PM
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச
சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்
Published By: Digital Desk 3
28 Jan, 2026 | 03:55 PM
திருகோணமலை கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறிச் சிலையமைத்த விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் இன்று புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பௌத்த பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு,
கடந்த 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மீளப் பெறுவதற்கு சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நகர கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதக் கட்டிடம் ஒன்றை அமைத்து பௌத்த சிலையொன்றை பிரதிஷ்டை செய்ததாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பெயரிடப்பட்ட 11 சந்தேக நபர்களில் 09 பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராகக் கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தை
மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானங்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் விடயங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிறைச்சாலையினுள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த போதிலும், பின்னர் அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























No comments:
Post a Comment