தேர்தலில் அதிமுக வெற்றி




election 2011 அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு அடித்தது யோகம்!
A+  A-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு, இந்த தேர்தலில் யோகம் அடித்துள்ளது. தே.மு.தி.க., மற்றும் இடதுசாரி கட்சிகள் கணிசமான இடங்களை அள்ளியதுடன், ஒன்றிரண்டு இடங்களைப் பெற்ற குட்டிக் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட, காங்.,-பா.ம.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. அதிலும், 10 தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், 7 தொகுதிகளைப் பெற்ற கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வின.

தேர்தல் வந்துவிட்டால் திடீரென புற்றீசல் போல் சில கட்சிகள் உதயமாகும். பிரமாண்ட கூட்டங்களை நடத்தி, பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி, சில, "சீட்'டுகளையும் பெற்று விடுவர். தேர்தலில், பிரதானக் கட்சிக்கு ஆதரவாக அலை வீசினால், அதோடு சேர்ந்து உதிரிக் கட்சிகளும் வெற்றி பெற்றுவிடும். இல்லையெனில், தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும்.அந்த வகையில், நடப்பு சட்டசபை தேர்தலில், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை புதிதாக முளைத்தன.

அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக், ஆகிய 10 கட்சிகள் கூட்டணி வைத்தன. தி.மு.க.,வுடன், காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க.,-இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய ஏழு கட்சிகள் கூட்டணி வைத்தன.வெற்றி பெறும் கட்சியில் வழக்கமாக சவாரி செய்யும் பா.ம.க., இந்த முறை, அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்தது. அது கிடைக்காது என்று தெரிந்ததும், தி.மு.க.,வில் ஐக்கியமாகி, "தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்' என, தனது வழக்கமான, "டயலாக்கை' அவிழ்த்து விட்டார் ராமதாஸ்.

கோவை மண்டலத்தில் பெரும் செல்வாக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட கொ.மு.க.,வுக்கு, ஏழு தொகுதிகளை வாரி வழங்கினார் கருணாநிதி. கோவை மண்டலத்தில், தி.மு.க., "வீக்' காக இருப்பதை சரி செய்யும் வகையில், கொ.மு.க.,வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமியும், "கோவை மண்டலம் தி.மு.க.,விற்குத் தான்' என, முழங்கினார். தேர்தலுக்குப் பின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரிசையாக கோபாலபுரம் வந்து, கருணாநிதியை சந்தித்து, "ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வர் பொறுப்பை ஏற்பார். தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்' என, எழுதி வைத்தாற்போல் பேட்டி கொடுத்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள், தி.மு.க.,விற்கு மட்டுமில்லாமல், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பலத்த அடியாக அமைந்துவிட்டது. "டயலாக்' விட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம், மக்கள் முடிவைக் கண்டு, வாயடைத்துபோய் நிற்கின்றனர். குறிப்பாக, "63 நாயன்மார்கள்' என கருணாநிதி புகழ்ந்த காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

பத்து தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 10 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. கடந்த முறை இந்த கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு 2 எம்.எல்.ஏ.,க்களை பெற்றன. அதிலும் ஒருவர் கட்சி கட்சி மாறிவிட்டார். "பா.ம.க., இருக்கிற அணி தான், வெற்றிக் கூட்டணி' என, வார்த்தைக்கு வார்த்தை பேசும் ராமதாசுக்கும், இந்த தேர்தலில் பலத்த அடி விழுந்துள்ளது. மொத்தம் 30 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சியும் அ.தி.மு.க, கூட்டணியில் போட்டியிட்டு 18 இடங்களை பெற்றது. இப்போது அதன் பலம் மூன்றாக குறைந்து விட்டது. கொங்கு மண்டலம் எங்களுக்குத் தான் என மார்தட்டிய கொ.மு.க., "டோட்டல் வாஷ் அவுட்!'

கோவை மண்டலம் எப்போதுமே அ.தி.மு.க., கோட்டை என்பதை, அம்மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். தொழிற்கூடங்கள் நிறைந்த கோவை மண்டலம், மின்வெட்டு பிரச்னை, சாயக்கழிவு நீர் பிரச்னை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க., வந்தால் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க., கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., இடதுசாரி கட்சிகள் மட்டுமில்லாமல், ஒன்றிரண்டு இடங்களைப் பெற்ற குட்டிக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. இதில், ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு என, "திருச்சுழி' தொகுதியைப் பெற்ற அகில இந்திய மூவேந்தர் முன்னணி மட்டும், அமைச்சர் தங்கம் தென்னரசிடம் தோற்றது. மீதமுள்ள கட்சிகள் அனைத்தும், போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, குதூகலித்து வருகின்றன.

Nantri thinamalar


2011 கட்சி ஓர் பார்வை

கட்சி
போட்டியிட்ட
தொகுதிகள்
வெற்றி
பெற்றவை
தோல்வி
அடைந்தவை
டெப்பாசிட்
இழந்தது
கிடைத்த வாக்கு
சதவீகிதம்
அ.தி.மு.க16014614-0
0
தே.மு.தி.க.412912-0
0
தி மு க1192396-0
0
மா. கம்யூ12102-0
0
இந்திய கம்யூனிஸ்ட்1091-0
0
காங்கிரஸ்63558-0
0
பா. ம. க30327-0
0
புதிய தமிழகம்220-0
0
மனிதநேய மக்கள் கட்சி321-0
0
ச.ம.க220-0
0
கொ இ பே110-0
0
பார்வர்டு பிளாக்110-0
0
இ கு கட்சி110-0
0
அ இ மூ.மு.க100-0
0
இந்திய முஸ்லிம் லீக்301-0
0
விடுதலை சிறுத்தைகள்1000-0
0
மூ மு க100-0
0
கொ மு க700-0
0
பெ ம கட்சி10

No comments: