அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உதவி


.


 02.05.2011 அன்று காலை வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலயத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால்வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நடைபெற்றது.
வைபவத்தில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார்.பாடசாலை அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தலைமை தாங்கினார்.வரவேற்புரையை பாடசாலையின் உபஅதிபர் திருவி.நற்குணசிங்கம் வழங்கபாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி .வசந்தி மற்றும் மாணவி.கமலினி ஆகியோர் நன்றியுரையினை வழங்கினர்.
விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்தி ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
பாடசாலை மாணவ மாணவிகளுக்கான உதவிப்பொருட்களை பாராளுமன்றஉறுப்பினரும்பாடசாலை அதிபரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும்வழங்கினர்.

4 comments:

திருநந்தகுமார் said...

காலத்தால் செய்யும் நன்முயற்சி
பாராட்டுகள்.
ஒன்றைத் தவிர மிகுதிப் படங்கள் தெரியவில்லை. ஆவன செய்க!

Anonymous said...

Well done ATBC.

C.Paskaran said...

நன்றி திருநந்தகுமார்.தவறு திருத்தப்பட்டுள்ளது.

திருநந்தகுமார் said...

மகிழ்ச்சி, ஏக்கம், சோகம் அனைத்தும் கலந்த முகங்கள்.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல்கண்டு சிந்தை இரங்கியோர் தேவருள் வைக்கப்படும்.