மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
66. வரதட்சணை

உங்கள் பெற்றோர்களின் ஒருசில அற்பமான ஆசைகளுக்குச் சரணடைந்து விடாதீர்கள். ஓ! மகனே! வுpரைவில் திருமணஞ் செய்துகொள். லட்சக்கணக்கான ரூபாய்கள் உனக்கு ‘வரதட்சணை’ (டவ்ரி)யாகக் கிடைக்கும்!’ என்று கூறுவர். இந்த மாதிரி பெற்றோர்கள் பேசுவது எவ்வளவு அவமானம்? அவர்களின் பையன்களும், அவர்கள் சொன்னபடியே கேட்பது எவ்வளவு அசிங்கம்! ஒரு பெண்ணுக்காகப் பையனை விற்க வேண்டியது அவசியந்தானா? அது பத்து லட்சமாய் இருந்தாலுஞ சரியே… நீங்களே உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள்! உங்களின் சொந்தக் கால்களிலேயே நீங்கள் நிற்க வேண்டும்: உங்கள் பலத்தையே நீங்கள் சார்ந்து இருக்க வேண்டும். பிறர் கூறுவதைக் கேட்டு நீங்கள் உங்களை இழந்து விடக்கூடாது. ஓர் ‘அடிமை’யாக ஆகிவிடாதீர்கள். அதன் பின்னரே நீங்கள் தலைவராக – பிறருக்கும் மேலாக - திகழமுடியும்!

67. பூட்டும், சாவியும்

பூட்டில் உள்ள சாவியினை வலது பக்கம் திருப்பினால் பூட்டு திறக்கின்றது. அதே சாவியினை இடது பக்கம் திருப்புக, பூட்டிக் கொள்கின்றது. அதே போன்று, உங்கள் மனத்தைப் புறஉலகை நோக்கித் திருப்புங்கள்: அது உங்களைப் பற்றிக் கொள்ளும், சிக்கிக்கொள்ளும்! மனதைப் புலன்களைப் பற்றும் பொருள்களில் இருந்து சரியான வழியில் திருப்புக, கட்டு தளரும், விடுதலை உங்கள் கைகளில்! எவ்வாறு திருப்புவது? திருப்புதலின் முதல்படி இறைவனின் திருநாமம் நவிற்றலே! (நாமஸ்மரணம்)

68. எனக்குச் செய்ய வேண்டியது

நான் விதைத்த மெய்யறிவு என்னும் விதைகள் நல்ல பயிர்களாக வளர்ந்து, நல்ல பலனைக் கொடுக்காமற் போனால், அதனால் நானும் பாதிக்கப்படுகின்றேன்! அதற்கு மாறாக, அவை நன்கு வளர்ந்து முற்றிப் பேரின்பமாகிய ஆனந்தம் என்னும் பலனைக் கொடுக்கும்போது, நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றேன்: அதுதான் என் உணவு. இந்தச் சேவைதான் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டியது. இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை!

69. வாழ்க்கை

வாழ்க்கை என்பது அன்பே! அதனை அனுபவித்திடுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சவால்! ஆதனை எதிர்கொள்ளுங்கள்

வாழ்க்கை என்பது ஓர் இசைப்பாடல்! அதனைப் பாடிடுங்கள்

வாழ்க்கை என்பது ஒரு கனவு! ஆதனை உணர்ந்திடுக.

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு! அதமை ஆடிடுங்கள்!

70. பிறந்த நாள் கொண்டாடுவது எப்போது?

இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் தங்களின் மகன் பிறந்தநாளில் இனிப்புகளை வழங்கி மகிழ்கின்றார்கள்: கொண்டாடுகின்றார்கள். ஆனால் கொண்டாட்டத்தினைக் கொண்டாடச்சரியான சமயம் அதுவன்று! பின் சரியான நேரம் எதுவென்றால், அந்த மகன் ஆனவன், சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதிக்கின்ற அந்தச் சமயந்தான் இனிப்பு வழங்கிக் கொண்டாடி மகிழ்வதற்கான சரியான நேரம் ஆகும்!



No comments: