நீச்சல் உடையில் இந்துக்கடவுளின் படம்

.
 நீச்சல் உடையில் இந்துக்கடவுளின் படம்,  நிறுவனம் மன்னிப்புக் கோரியது விற்பனைக்கு விட்டதை மீளப்பெறுவதாகவும் அறிவிப்பு
 நீச்சல் உடையில் இந்துக் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லிசா ப்ளு ஸ்விம்வேர் நிறுவனத்தின் புதிய நீச்சலுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ஒருமொடல் அழகி, அணிந்து வந்த நீச்சல் உடை இந்துக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.








காரணம் அந்த உடையில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டிருந்தனர். இதற்கு உலகெங்கும் உள்ள இந்த அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புக்கிளம்பியது. இதையடுத்து அந்த நிறுவனம் தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இது குறித்து லிசா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக் கடவுள் லட்சுமியின் படம் லீசா ப்ளு ஸ்விம்வேர் நிறுவனத் தயாரிப்பில் இடம் பெற்றதால், யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அந்தத் தயாரிப்பை விற்பனைக்கு விடாமல் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும் விற்பனைக்குப் போய் விட்டவற்றை விற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இந்த லட்சுமி நீச்சல் உடை விற்கப்பட மாட்டாது என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

2 comments:

kirrukan said...

[quote]இதற்கு உலகெங்கும் உள்ள இந்த அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புக்கிளம்பியது. [/quote]

ஈழத்தில் இந்துக்கள் சாகும் பொழுது குரல் கொடுக்காத இந்த இந்து அமைப்புக்கள் நீச்சல் உடையில் இந்து கடவுள் என்றவுடன் குரல் கொடுக்கினம்..என்ன கொடுமையடா சாமி

Ramesh said...

இந்நாட்டுக்காரர் என்ற காரணத்தால் செய்த தவறை தவறென்று ஏற்றுக் கொண்டதுடன் விற்பனையையும் முடக்குவதாக கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார்கள். எம்மவர்களென்றால் மன்னிப்பும் கேட்க மாட்டார்கள். தவறே இல்லை என்று வாதாடிக்கொண்டே இருந்திருப்பார்கள். கற்க வேண்டியது கன்க்க உள்ளது. அழகாக கற்றது கைமண்ணளவு என்று அழகாக சொல்லியுள்ளார்.
அது சரி இந்துக்கோவில்களில் கலை என்று அம்மணமாய் சிலை வடித்திருக்கிறோம். காமசூத்திரத்தை கல்லில் வடித்த கோவில்களை புராதன கலை என்று அழியாது பாதுகாக்கிறோம். சீலையில் வரைந்து அம்மணத்தை மறைத்ததற்கு கொடி எரிப்பா தாங்காதய்யா.