மேற்கு வங்கத்தில் திரிணாமூல் அபார வெற்றி


.
கேரள மற்றும் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
.
மமதா பானர்ஜி
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி ஈட்டியுள்ளது.
இதனால் இம்மாநிலத்தில் 34 ஆண்டு கால இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புதிய வரலாறு
கட்சிவாரி முடிவு
திரிணாமூல் 186
காங்கிரஸ் 41
சி.பி.எம். 41

அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், சுமார் 225 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தனியாகவே திரிணாமூல் காங்கிரஸ் 186 இடங்களில் வென்றுள்ளது . அதனோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 41 இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சராக உள்ள மமதான பானர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகி உள்ளது.
அவர் வரும் 18-ம் தேதி பதவியேற்பார் என்று திரிணாமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரிக் கூட்டணி 63 தொகுதிகளில் வென்றுள்ளது.

Nantri BBC






காங்கிரஸ் கட்சியின் ஓமன் சாண்டி முதல்வராக வருவார் எனத் தெரிகிறது
காங்கிரஸ் கட்சியின் ஓமன் சாண்டி முதல்வராக வருவார் எனத் தெரிகிறது.

கேரள மற்றும் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தில் ஆட்சி செய்துவந்த இடது சாரிக் கூட்டணியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சொற்ப இடங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
140 நாற்பது இடங்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் இம்முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 72 இடங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக் கூட்டணி 68 இடங்களையும் வென்றுள்ளன.
கேரளத்தில் ஆட்சியமைக்க குறைந்த பட்சம் தேவையான 71 இடங்களைப் பெற்ற நிலையில் அங்கு ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
இதற்கு முன்னால் நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி ஆளும் கூட்டணி கடுமையான் தோல்வி கண்டிருர்ந்தது என்றாலும் அது இம்முறை அப்படிப்பட்ட ஒரு தோல்வியைத் தவிர்த்துள்ளது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்குரிய வெற்றியை சொற்ப் இடங்களில் அது தவறவிட்டுள்ளது.

No comments: