மே மாதம் 18ம் திகதி அவுஸ்திரேலியாவில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்


.
இலங்கைத்தீவில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்வையும், அவர்தம் வளத்தையும் அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடிய போரின் நினைவுகள் எவராலும் மறக்கமுடியாதவையாகும்.

தமிழ் மக்களின் இருப்பை அழித்து, விடுதலை வேண்டிநின்ற மக்களின் விருப்புக்களை, தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் மௌனமாக்கி, அதன்மூலம் தமிழினத்தின் உணர்வுகளை அடக்கிவிட்டதாக சிறிலங்கா அரசு நினைக்கின்றது.


உலகத்தின் பார்வையிலிருந்து மறைத்து, தமிழ் மக்கள் மேல் தொடுக்கப்பட்ட இப்போரின் கோரப்பற்கள், மே மாதம் 18 ஆம்திகதி 2009ஆம் ஆண்டுவரை, தொடர்ந்து ஆயிரக்கணக்கான எம் தமிழ் உறவுகளை மரணிக்கச்செய்துள்ளன.
சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற 1948 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மக்களின் இருப்பையும், அவர்தம் உரிமைகளையும் மறுதலித்துத் தொடர்ச்சியான அடக்குமுறைகளையே சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செய்து வந்திருக்கின்றன.

கொடிய அடக்குமுறையின் உச்சமாக, மேமாதத்தில் நிகழ்த்தப்பட்ட பேரவலம் சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுக்குவதன் மூலம் மரணித்துப்போன எம் உறவுகளின் உணர்வுகளுக்கும், அப்போரில் காயமடைந்து ஊனமாகிப்போன எம்சந்ததியின் வலிகளுக்கும், ஆறுதலைப் பெற்றுத்தரும் என நம்புகின்றோம்.

இலங்கைத்தீவில் நடந்து முடிந்த இக்கொடிய போரின் மறுபக்கங்களை, இப்போதுதான் உலக சமுதாயம் ஓரளவுக்காவது உணரத்தொடங்கியுள்ளது. சர்வதேச ஊடகங்களும் இப்போது போதிய முக்கியத்துவத்தைக் கொடுத்து, நீதி மறுக்கப்பட்ட எமது தேசத்தின் மக்களுடன் இணைந்து நிற்கின்றார்கள்.

இவ்வேளையில், தமிழர்கள் பரந்துவாழும் உலகின் அனைத்து நாடுகளிலும், மே மாதம் 18ம் திகதி அன்று நினைவேந்தல் நாள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் மெல்பேணில் மே மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு, Federation Square இலும், மாலை 6 மணிக்கு சிட்னியில் Martin Place இலும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

மரணித்துப்போன எம் உறவுகளை நெஞ்சில் நிறுத்தி, சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை வெளிப்படுத்தி, குரலடங்கிப்போயுள்ள எமது தாயக மக்களின் குரலாக அனைவரையும் திரண்டுவருமாறு அன்புடனும் உரிமையுடனும் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வு நடைபெறும் இடம்
மெல்பேணில்: Federation Square – Opposite of Flinders Street Station
சிட்னியில்: Martin Place Sydney

நிகழ்வு நேரம்: மேமாதம் 18ம் திகதி
மெல்பேணில்- மாலை 4 மணி தொடக்கம் 7 மணி வரை
சிட்னியில் - மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை

மெல்பேண் தொடர்புகளுக்கு
டொமினிக் – 0404 802 104
சிவகுமார் – 0404 894 591
ஏட்றியன் – 0423 781 481

சிட்னி தொடர்புகளுக்கு:
0469 089 883

தகவல் Ramesh 

1 comment:

Kalairasikan said...

Let's all get together to show our support to the victims and share their pain.
Let's set aside all our differences and be united at the hour of the need.
Yes, we can