தேன் தமிழ் மணக்கும் அறிவகமே! - சிறீ ரங்கேஸ்வரி பாரதி

.

விந்தையாய் வளர்ந்து வரும்
வித்தகக் கற்பகமே! – சிட்னி
தந்ததோர் அற்புதமே! – தேன்
தமிழ்மணக்கும் அறிவகமே!

(விந்தையாய்)

செந்தமிழ் மக்கள் என்றும் செய்கையிற் சோர மாட்டார்
சந்ததி போற்ற அவர் சிந்தையில் எழுந்து இன்று

(விந்தையாய்)

திங்களொடு வெள்ளி தவிர் தினங்கள் ஐந்து நாளும்
இங்குநாமும் தேடிவந்து கூடிக் குலவிடுவோம்
பொங்கலோ புதுவருடத் தோடுநவ ராத்திரியும்
மங்களமாய்க் கொண்டாடி மகிழ்ந்திடும் இடமாக

(விந்தையாய்)

அறிவெனும் பசிபோக்க ஆயிரந் தமிழ் நு}ல்கள்
அனைத்துலகச் செய்திதரப் பலதரப் பத்திரிகை
குறிப்பாகத் தகவல்கள் நிறைவாகப் பெறுதற்கும்
அறியாத தறிவதற்கும் அன்புத்தொண்டர் சேவைதனில்

(விந்தையாய்)

கருத்தரங்கு பல நடக்கும்! கலைக்கூடமாய் விளங்கும்
ஒருத்தரும் கதைக்க இன்றித் தவித்திடும் முதியோர் கூடிச்
சரித்திரம் தெடங்கி ஈழச் சங்கதி்யெலாம் அலசிச்
சிரித்து மகிழ வைக்கும் சிந்தனை அரங்கமாக

(விந்தையாய்)

 சிறீ ரங்கேஸ்வரி பாரதி

No comments: