மாஸ்கோவில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி _

.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள டெமோட்டோவோ பயணிகள் வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில்; 35பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
படுகாயமடைந்த அனைவரும் வைத்திசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டதுடன் அவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தலைமை விசாரணை அதிகாரி இது ஒரு பயங்கரவாத தாக்தல் என்று கூறியுள்ளார்.அதேநேரம் தலைநகர் மொஸ்கோவின் அனைத்துப் பகுதிகளினதும் பாதுகாப்பை ரஸ்ய இராணுவத்தினர் பலப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி டிமெற்றி மெத்தேவ் தாக்குதலை நடத்தியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். இக்குண்டுத்தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட உலகநாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


No comments: