உறவியல் கட்டுரை - மஷூக் ரஹ்மான்

.
பகிர்தல் பற்றி சென்ற வாரம் பேசினோம்…
இப்பவும் அதே விஷயம்தான். ஆனா பொருள் வேறு!

ஒரு வயது குழந்தை உண்ணுவதே தனி அழகு! ஆனா வளர்ந்துவிட்ட ஒருவர் குழந்தைபோல் சாப்பிட்டால்?

இப்படித்தான் நம்மில் பலர் ஒரு விஷயத்தைப் பகிர்கின்ற விஷயத்தில் வளராமல் இருக்கிறோம். ஒரு உரையாடல்இ ஆலோசனை அல்லது கருத்துப் பரிமாற்றம். இந்த மூன்றுமே வெற்றிகரமாக அமைவதற்கு தேவை பொறுமையாக கவனிக்கும் திறன்.

உதாரணம்: பேச இயலாதவர்களும் தங்களுக்குள் பரிமாறிச் சிரிப்பது

இப்போது மூன்று விதமான சூழல்களை ஆராய்வோம்

நிர்வாகி – பணியாளர்

இதில் நடைபெறுவது (One-way-downward communication) கீழ் நோக்கான ஒரு வழிப் பரிமாற்றம். இதில் உள்ள உறவியல் சிக்கல் என்ன? தன் நிர்வாகி சொல்வதை கேட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தால் சிரத்தையோடு தலையாட்டிவிட்டு இடத்தை காலி செய்வதே பணியாளரின் நோக்கமாக இருக்கும். செய்தியின் பொருளும் அவசிய அவசரமும் சரியான முறையில் பணியாளர் மனதில் பதியாமல் போக அநேக வாய்ப்புகள் அதிகம். இதே நிலை பல குடும்பங்களில் கணவன்-மனைவி இடையே நிகழ்வதும் உண்டு.காதலன் - காதலி ஃ நண்பர்கள்

பெரும்பாலும் இதுவும் மேற்சொன்ன வகைதான். இங்கே நிகழும் பரிமாற்றம் கருத்துக்களை மையப் படுத்துவதில்லை அதற்கான அவசியமும் இல்லை என்பதே பலரின் முடிவு. ஆக மொத்தம் இரண்டு வகையிலுமே கால விரையம்தான் மிச்சம்.

மனம் - தெய்வம்

பிரார்த்தனை என்பதும் ஒரு மௌனப் பரிமாற்றம்தான். ஒரு தேவையை முன் நிறுத்தி அதை மட்டுமே ஒருமுகப் படுத்திஇ மனம் என்ற வெட்ட வெளியில் “நான்” என்ற எண்ணமில்லாமல் உணர்ச்சி மிகுந்து நாம் நமக்காகவோஇ பிறருக்காகவோ செய்யும் பிரார்த்தனை ஒரு அதிர்வை உண்டு பண்ணி; லட்சியத்தை அடைய உதவுகின்றது. ஐnhiடிவைழைளெ இல்லாத பரிசுத்த பரிமாற்றம்இ எண்ணிய மாற்றங்களை உண்டு பண்ணும்.

இந்த மூன்றாம் நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கோ ஆலோசனைக்கோ உரையாடலுக்கோ மிக மிக முக்கியம் சுய தெளிவுஇ “நான்” என்ற எண்ணமின்மை மற்றும் பிறருக்கும் பேச வாய்ப்பளித்து நாமும் பேசும் நற்பண்பு. இப்படி நம் பரிமாற்றத்தை இருவழிப் பட்டதாக நிகழ்த்தும்போது அனுபவங்களின் சுரங்கம் திறந்து மனதின் அழுக்காறு அழிந்து அறிவின் ஜோதி மிளிரும். நம் உறவின் பலமும் பெருகும்.

No comments: