இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி

.
மூன்றாவது போட்டிஇங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளால் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஒவர்களில் 214 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.


அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் பிரெட் லீ 27 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவுஸ்திரேலியா அணி 46 ஒவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 215 ஒட்டங்களை பெற்றது. டேவிற் ஹஸி 68 ஒட்டங்களையும் பிரெட் ஹாஷஸ் 54 ஒட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர். பிரெட் லீ இப்போட்டியில் சிறப்பாட்டக்காராக தெரிவானார்.

4 ஆவது போட்டி
தொடர்ச்சியாக 3 போட்டிகளை அவுஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அணி  ட்ரொட்டின் சதம் கைகொடுக்க 4 ஆவது போட்டியை 21 ஓட்டங் களால் வென்று அவுஸ்திரேலியாவுக்கு பதிலடிகொடுத்துள்ளது.


இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடன் 4 ஆவது போட்டி  அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை பறிகொடுத்த நிலையில் இப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரராக பியருடன் களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரெரஸ் 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து 2 ஆவது விக்கெட்டுக்காக இணைந்து நம்பிக்கையளித்தார் ட்ரொட். பியருடன் இணைந்து இவர் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து சரமாயாக ஓட்டங்களை குவித்தார். இந்நிலையில் அரைச்சதத்தினைக்கடந்து (67) பியர் ஆடிக்கொண்டிருக்கையில் ஸ்மித்தின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார். இதனையடுத்து ஏனைய விக்கெட்டுக்கள் 40 ஓட்டங்களை எட்டாத நிலையில் மிக விரைவாக சய 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது. ட்ரொட் 6 பௌண்டகள் உட்பட 102 ஓட்டங் களைப் பெற்றார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிசார்பாக ஹஸ்ஸி 4 விக்கெட்டுக்களையும், ஸ்மித் 3 விக்கெட்டுக்களையும், பிரட் லீ ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் 300 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவுஸ் திரேலிய அணி ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை பறி கொடுத்து 278 ஓட்டங்களைப் பெற்று 21 ஓட்டங்களால் 4 ஆவது போட்டியைப் பறி கொடுத்தது. இதில் அதிகபட்சமாக வோட்சன் (64) அரைச்சதத்தி னைப் பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அண்டர்சன், ட்ரொட் ஆகி யோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து 7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 3   -  1 என்ற நிலையில் முன்னிலைவகிக்கின்றது.

No comments: