இந்தோனேசிய எரிமலை

.
இந்தோனேசிய எரிமலையொன்று குமுறி வருவதால் பாலி தீவுக்கான அநேக விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு ஜாவாவிலுள்ள புரோமோ எரிமலையானது கடந்த வருட இறுதியிலிருந்து குமுற ஆரம்பித்துள்ளது.

இந்த எரிமலை வியாழக்கிழமை பெருமளவு புகையையும் சாம்பலையும் வெளித்தள்ள ஆரம்பித்ததால் அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுக ளிலிருந்தான விமானங்கள் திசை திருப்பப் பட்டன. ஏனைய சர்வதேச விமான சேவை களும் தமது விமான பயணங்களை இரத்துச் செய்திருந்தன. எனினும் உள்ளூர் விமான சேவைகள் நடத்தப்பட்டன.தாம் நிலைமையை அவதானித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி எரிமலையிலிருந்து வெளிக்கிளம்பிய புகை, அந்த எரிமலையின் தென் கிழக்கே 18,000 அடிஉயரத்துக்கு காணப்படுவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சானது விமான சேவை களுக்கு எச்சக் கை விடுத்துள் ளது.

பாலி விமான நிலையத்தில் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதால் சுமார் 1300 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகிறது.

மூன்று அவுஸ்திரேலிய நகர்களிலிருந் தான விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.
2,329 மீற்றர் உயரமான இந்த எரிமலை அமைந்துள்ள பிரதேசம் கிழக்கு ஜாவாவில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது.

No comments: