கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு


அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள் கொடகே பதிப்பகத்தின் ஸ்தாபகர் திரு. கொடகே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து) லெ.முருகபூபதி (அவுஸ்திரேலியா) வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்) அளவெட்டி சிறிசுகந்தராஜா (கனடா) பத்மகுணசீலன் (ஜேர்மனி) கனகசபாபதி (கனடா)ஆகியோருடன் இலங்கை எழுத்தாளர்கள் திக்குவல்லை கமால், ஓ.கே. குணநாதன் ஆகியோரும் சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான உபாலி லீலாரத்னவும் இச்சந்திப்பில் கலந்துரையாடினர்.பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை கலைப்பீட மாணவர்களுடனான சந்திப்பும் அண்மையில் கலைப்பீடத்தில் நடந்தது. இச்சந்திப்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளர் திரு. லெ.முருகபூபதி, தமிழ்த்துறைத்தலைவர் கலாநிதி துரைமனோகரனிடம் மாநாட்டு மலர், கட்டுரைக்கோவை உட்பட சில நூல்களை பல்கலைக்கழக நூலகத்திற்காக வழங்கினார். இச்சந்திப்பில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், கலாநிதி மகேஸ்வரன், இந்து நாகரீகத்துறைத்தலைவர் கலாநிதி கனகரத்தினம் மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் அஸ்ரப் சிகாப்தீன், ஓ.கே. குணநாதன் ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்

No comments: