சென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத்த கண்டனக் குரல் எழுந்துள்ளது

.
தமிழகத்தின் சென்னை மாநகரின் எழும்பூரில் உள்ள மகா போதி சங்க காரியாலயத்தின் மீது, சில துஷ்டர்கள் மேற் கொண்ட சட்ட விரோத தாக்குதல்களை, தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மாநில அரசாங் கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அந்த ஸ்தானத்திற்கு விரை ந்து சென்ற, இந்தியாவில் இருக்கும் இலங்கை துணை உயர்ஸ் தானிகர் திரு. கிருஷ்ணமூர்த்தி, நிலைமையை நேரில் அவதா னித்தார்.



திரு. கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தமிழக அரசின் முக்கியஸ்தர் களுடன் தொடர்பு கொண்டு, இந்த அசம்பாவிதம் குறித்து அறி வித்ததுடன், தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை நிறுவனங்கள் மீதான பாதுகாப்பை வலுப்படுத் தியது.

தமிழகத்தில் உள்ள இலங்கை வங்கி, இலங்கை வங் கிக்கிளை, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கிளை, மாபோதி சங்கத்தின் காரியாலயம் மற்றும் விடுதிகளுக்கு 24 மணி நேரமும் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதற்கு தமிழக அர சாங்கம் உத்தரவு பிறப்பித்ததாக திரு. கிருஷ்ணமூர்த்தி அறிவித் துள்ளார்.

இதேவேளையில், மகாபோதி தாக்குதல் தொடர்பாக, தமிழக அர சின் தலைமைச் செயலாளர் எஸ். மாலதியையும், எமது துணை உயர்ஸ்தானிகர் கிருஷ்ணமூர்த்தி அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார்.

இனம் தெரியாத நபர்களினால், நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு தலைமைச் செயலாளர் மாலதி, கவ லையும் கண்டனத்தையும் தெரிவித்த பின், இலங்கையின் சகல நிறுவனங்களுக்கும் தமிழக அரசாங்கம் பூரண பாதுகாப்பை அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் அரசியல் இருக்க வில்லை என்று, தமிழகத்தில் உள்ள அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். வேண்டுமென்றே பிரச்சினைகளை ஏற் படுத்தி, இலங்கை இந்திய உறவை மாசுபடுத்த எத்தனிக்கும் சில சுயநலவாத விசமிகளே இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மகாபோதி சங்கத்தின் சென்னையில் உள்ள காரியாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து, இப்போது உலகெங்கிலுமுள்ள சமாதானத்தை விரும்பும் மனித நேயம் படைத்தவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தில் சிறுகாய ங்களுக்குட்பட்ட பெளத்த பிக்குமார்களின் நலனை கவனிப் பதற்காக, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகர் பிரசாத் காரிய வசம், இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் புதுடில்லியி லிருந்து உடனடியாக சென்னைக்கு சென்று, தமிழ்நாடு முத லமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும், ஏனைய முக்கியஸ்தர்களையும் சந்தித்து, இந்த சம்பவம் குறித்து இல ங்கை அரசாங்கத்தின் கவலையை தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கான பாதுகாப்பையும், இந்தியா வின் புனித பெளத்த தலங்களை தரிசிக்க செல்லும் இலங்கை மக்களுக்கும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.

சென்னையில் இருக்கும் மகாபோதி சங்கத்தின் விகாரை மற்றும் காரியாலயத்திற்கும் இதற்கு முன்னர் இது போன்ற எவ்வித தாக் குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.

சில விசமிகள் இத்தகைய தாக்குல்களை சென்னையில் உள்ள பெளத்த புனித தலங்கள் மீது, மேற்கொள்வதன் மூலம் சிங்கள பெளத்தர்களின் உணர்வை தூண்டிவிட்டு, மீண்டும் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றது போன்ற, இனக் கலவரங்களுக்கு இல ங்கையில் தூபம் இடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த போதிலும், இலங்கை மக்கள் இத்தகைய சம்பவங்களை பார்த்து, ஆத்திரமடையமாட்டார்கள் என்று ஒரு புத்தி ஜீவி தெரிவித் தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின், இன்றைய அரசாங்கம், நாட்டில் தோற்றுவித்திருக்கும் சமாதானமும், இன ஒற்றுமையும் சகல மக்களிடையேயும் இருந்து வரும் தேசபற்றுடனான ஐக்கியமும், எக்காரணம் கொண்டும் இனிமேல் சீர்குலைந்து விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இனிமேல், இலங்கையில் இனங்களுக்கு இடையே பகைமையுணர்வோ, சந்தேக உணர்வோ ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. இலங்கை மக்கள் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் போன்ற சதி முயற்சி களுக்கு பகிரங்கமாக கண்டனத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், நாட்டின் இன ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறிதேனும் தயக்கம் காட்டமாட்டார்கள் என்று நாம் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறோம்.


நன்றி தினகரன்


No comments: