நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி


.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இன வெறிக் கொள்கையினை எதிர்த்து போராடி சிறை சென்ற நெல்சன் மண்டேலா (92), கடந்த சில மாதங்களாக பொது மக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல் நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும், கடந்தாண்டு நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது தான் கடைசியாக பொது மக்களை சந்தித்தார்.அதன் பின்னர் கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் கேப்டவுண் நகரிலிருந்து ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர் எனவும், இது வழக்கமான உடல் பரிசோதனை தான் தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது என்றும் ஜோஹனஸ்பெர் ஆர்ச் பிஷப் டெஸ்மான்டூட்டு தெரிவித்தார்.


நன்றி தினகரன்

No comments: