மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”

.
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 23-01-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.மெல்பேர்ன் ரெறாறா மைதானத்தில், காலை 09 மணிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் தமிழர் விளையாட்டு விழா ஆரம்பமானது.
 இந்நிகழ்வில், கிறிக்கற், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் உட்பட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான மெய்வல்லுனர் மற்றும் வினோத விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். விளையாட்டு நிகழ்வில் தமிழர் உணவுகளும் விற்பனை செய்யப்பட்டன.

கிறிக்கற் விளையாட்டு போட்டிகள், சமநேரத்தில் மூன்று மைதானங்களில் நடைபெற்றன. சிட்னி, மெல்பேர்ன் நகரங்களில் உள்ள 24 தமிழ் அணிகள் பங்குகொண்ட கிறிக்கற் விளையாட்டு போட்டியில் வெஸ்ட் சைடர்ஸ் விளையாட்டு அணி இரண்டாவது இடத்தையும், மெல்பேண் தமிழ் யுனைற்றட் விளையாட்டு அணி முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கரப்பந்தாட்ட போட்டிகளில் லெப் கேணல் காண்டீபன் விளையாட்டு அணி இரண்டாவது இடத்தையும் டெனிஸ் விளையாட்டு அணி முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இறுதியாக நிறைவடைந்த உதைபந்தாட்ட போட்டியில் ஓசி.. விளையாட்டு அணி இரண்டாவது இடத்தையும் எல்லாளன் விளையாட்டு அணி முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

விளையாட்டுக்களில் வெற்றி பெற்றோருக்கான கேடயங்களை தமிழ்ச்செயற்பாட்டாளர்களும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளும் வழங்கிக் கௌரவித்தனர்.


தேசிய கொடியிறக்கல் நிகழ்வுடன் இரவு 9 மணியளவில் விளையாட்டு விழா நிறைவுபெற்றது.

No comments: