அந்திக்கருக்கலில் அவள் நடந்தாள் - செ.பாஸ்கரன் -


   .
              
அந்திச் சூரியனின் கருக்கலில்
அடிவானம் வெட்கிச் சிவந்திருக்க
பொற்கதிர்வீசிப் புணரத்துடிக்கிறது
காமதேவனின் கட்டியம் கூறலில்
காற்றுக்கூட குளிரைப் போர்த்தியபடி
நாசித்துவாரங்களில் நர்த்தனம் புரிகிறது
ஒற்றைச்சடையில் உயிரோவியமாய்
வெள்ளிக் கொலிசின் சந்தம் பிசகாத
பாதச் சுவட்டில் நீ நடக்கிறாய்


பாதங்களை வருடிவிட வேண்டுமென்று
அலையெழுந்து கை நீட்டி மணலில் புரள்கிறது
நுரையெறிந்த கடல் அலையில்
நீ சிக்காத சித்திரமாய் கரைதாவும் அழகு
நாட்டியத்தின் முத்திரைகள் முழுவதையும்
கடற்கரையின் காற்றில் வரைகின்றாய்
அழியாத ஓவியமாய் என் நெஞ்சில் பதிகிறது
வேல் கொண்டு விழி உயர்த்தும் உன் அழகும்
திசையறியா உன் இடையளகும்
இயற்கையின் இன்பங்களை ரசிக்கவந்தவனை
இமைக்கமறந்த இமையாக்கி விடுகிறது
உனைப்பார்த்து நிற்கும் வேளையிலே
உப்புக்கரிக்கின்ற நீர் கூட உவப்பாய்த் தெரியவில்லை
உன் சின்னச் சிரிப்பில் சிந்துகின்ற சத்தமதில்
கம்பன் பாடிய காவியங்கள் கேட்கிறது
நெற்றிப்பரப்பினிலே நின்றாடும் குழல் அசைவில்
நெஞ்சே அசைய நிமிர்ந்து நடக்கின்றேன

3 comments:

Anonymous said...

ஆகா அற்புதம் ! என்ன கற்பனை !!
அற்புதமான வரிகள் !!!
கொன்னிட்டீங்க சார்
எங்க சார் பாத்தீங்க இப்பிடியொரு பெண்ணை
அப்பிடியே கடல் கரையில நிக்கிற மாதிரி இருக்கு சார்
அருமையான கவிதை
தொடரட்டும் உங்கள் கவிதைகள்
வாழ்த்துக்கள்

தாமரை said...

"நுரையெறிந்த கடல் அலையில்
நீ சிக்காத சித்திரமாய் கரைதாவும் அழகு
நாட்டியத்தின் முத்திரைகள் முழுவதையும்
கடற்கரையின் காற்றில் வரைகின்றாய்"

கடலலையில் ஓடி விளையாடும் பெண்ணைப்பார்த்து அழகாக இருக்கு என்று சொல்லுவோம். அதையே கவிஞர் வடித்திருக்கும் வார்த்தைகள் மிக நன்று. பாராட்டுக்கள். யார் அவள் ?????????????

kirrkan said...

[quote]கடலலையில் ஓடி விளையாடும் பெண்ணைப்பார்த்து அழகாக இருக்கு என்று சொல்லுவோம். அதையே கவிஞர் வடித்திருக்கும் வார்த்தைகள் மிக நன்று. பாராட்டுக்கள். யார் அவள் ????????????? [/quote]


கடலையில் தமிழ் பெண்கள் விளையாடுவது குறைவு .....
வெளிநாட்டு பெண்கள் விளையாடுவது உண்டு...
இரு துண்டுடன் அது அழகுதான்

கவிஞருக்கு பாரட்டுக்கள் .



எங்கே நன்றிகள்?