மெல்பேர்ன் ஆஞ்சநேயம்" நாட்டிய நாடகநிகழ்வு

.அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை "ஆஞ்சநேயம்" எனும் கலைநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பின் ஆதரவுடன் "பட்ச் வேக்" எனும் அமைப்புக்காக நடத்தப்பட்ட இக்கலைநிகழ்வின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி தாயகத்தில் மாற்றுவலு தேவைப்படுவோரின் ஆதரவு நிதிக்காக செலவிடப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை 03-07-2010 அன்று நடைபெற்ற இக்கலைநிகழ்வில் ஆஞ்சநேயம் எனும் நாட்டியநாடகம் நாட்டிய கலைஞர் சேரன் சிறிபாலனின் நெறியாள்கையில் இடம்பெற்றது. இவர் நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

முந்நூறு வரையான பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வினை விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பு சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தது. தாயகத்தில் தற்போது போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுவலு தேவைப்படுவோரினதும் மற்றும் ஏனைய காரணங்களால் மாற்றுவலு தேவைப்படுவோரின் நலன்களை பராமரித்துவரும் "பட்ச்வேக்" அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அதன் முதன்மை அமைப்பாளர் தெளிவுபடுத்தினார்.

தாயகத்தில் வாழும் மாற்றுவலு தேவைப்படுவோர் பற்றிய காணொலியும் திரையில் காண்பிக்கப்பட்டதுடன் அண்மையில் அவுஸ்திரேலிய தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட ”முல்லைத்தீவு” என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டமும் திரையிடப்பட்டு, அரங்கத்தில் வெளியிடப்பட்டது.

மாலை ஐந்துமணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஏழு முப்பது மணியளவில் நிறைவுபெற்றது. பச்வேக் அமைப்பு தொடர்பான விபரங்களை http://patchwork.org.au/ என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

No comments: