.
இளம் கவிஞராக அறிமுகமாகும் உமை அவர்கள் உயர் தர வகுப்பில் தமிழை ஒருபாடமாக படிக்கின்றார். புலம் பெயர் வாழ்வில் தமிழை கற்பது மட்டுமல்லாது ஹோம்புஷ் தமிழ் பாடசாலையின் கலைவிழாவில் கவியரங்கில் பங்குகொண்ட ஒரு இளம் கவிஞர்.
தமிழே! என் பேச்சே!
மூச்சாய் என் உயிராய் நீ வந்தாய்
தமிழோடு விளையாடி நீ நின்றாய்
உள்ளத்தின் உணர்வுகளை நீ தந்தாய்
உதட்டோரம் அழகாகி வெளி வந்தாய்!
சொல்லால் கவரும் கலை முறையானாய்
அமையும் சிறந்த சக்தித் திறனாய் மிளிர்ந்தாய்!
உள்ளதை உரைத்தாய் உண்மையும் சொன்னாய்!
கள்ளத்தை மறைத்து காட்சியும் காட்டினாய்!
இல்லாததை உருவாக்கி கதையும் கட்டினாய்!
மனிதனுக்குப் பெரும் சக்தியாய் நீ வந்தாய்!
பேச்சு எனும் பெரும் சக்தியே!
அமைதியான பேச்சாய் மனதில் பதிந்தாய்!
ஆன்மிகப் பேச்சாய் சிந்தயைத் திறந்தாய்!
காந்தமான பேச்சாய் கேட்போரைக் கவர்ந்தாய்!
உருக்கமான பேச்சாய் கனிய வைத்தாய்!
விடுதலைப் பேச்சாகி விழித்தெழ வைத்தாய்!
வெள்ளைமனப் பேச்சாய் ஆறுதல் கொடுத்தாய்!
அரசியல் வாதியின் பேச்சாய் ஆற்றோடு போனாய்!
காற்றோடு கலந்தாய்!
மகாத்மா காந்தியின் பேச்சாய் மானிட நேயத்தை வளர்த்தாய்!
மார்டின் லூதர்கிங் பேச்சாய் மக்கள் சக்தியை மீட்டாய்
விவேகானந்தரின் பேச்சாய் கிழக்கையும் மேற்கையும் இணைத்தாய்!
உள்ளத்தின் உணர்வுகளை நீ தந்தாய்
உதட்டோரம் அழகாகி வெளி வந்தாய்
பேச்சின் சக்தி மாபெரும் சக்தி
புவிமிசை பேணுவோம் அச்சக்தியை!
2 comments:
இன்னும் பல கவிதைகள் படைக்க வேண்டும் உமை .,இளம் கவிஞருக்கு பாராட்டுக்கள்
மிக நன்று வாழ்த்துக்கள் உமை
ஆசிரியருக்கு ஹோம்புஷ் தமிழ் கல்வி மாணவர்களின் ஆக்கங்களை ஒவ்வொரு வாரமும் கொண்டுவாருங்கள்
நன்றியுடன் குமரகுரு
Post a Comment