சிட்னியில் இந்திய கடை தீக்கிரை

சிட்னி சறே ஹில்ஸ்சிலுள்ள ஒரு இந்திய சாப்பாட்டுக்கடை தீக்கிரையாக்கபட்டது. தாக்கப்பட்ட இந்திய சாப்பாட்டுக்கடைக்கு மேல் வசித்து வந்த நால்வர் உயிர் தப்பியுள்ளார்கள். இச்சம்பவம் சுமார் இரவு 11.30 மணியளவில் பெரிய குண்டு வெடிப்புச்சத்தத்தோடு தீ பரவத்தொடங்கியது. அவ்விடத்திலிருந்து இருவர் ஓடிச்சென்றதை சிலர் அவதானித்ததாக காவல் படையினர் கூறுகின்றார்கள். இக்கடை முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. சில மணி நேரம் கிளிவெலாண்ட் வீதி மூடப்பட்டிருந்தது.

No comments: