இலங்கை அகதிகள் வருகை

'

இலங்கை அகதிகள் வருகை ஆஸ்திரேலியாவில் தடை நீங்கியது ஆஸ்திரேலியாவில்  சட்டவிரோதமாக குடியேறும்  இலங்கை அகதிகளுக்கான தடையை,  அரசு நீக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள், இந்த நாட்டில் தஞ்சம் புகுந்து வந்தனர்.

இலங்கையில் போர் நடந்த காலத்தில் அகதிகள் போர்வையில்  பலர், ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை தடுக்க, இலங்கை அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதே போல ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்கு தடை உள்ளது.கெவின் ரட் பிரதமராக இருந்த போது அமல்படுத்தப்பட்ட இந்த தடைக்கு ஐ.நா., மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய புதிய பிரதமராக ஜூலியா கிலார்ட் பொறுப்பேற்றுள்ளார். இலங்கை அகதிகள் பலர் படகில் வந்து ஆஸ்திரேலியாவில் காத்திருந்து தடை உத்தரவு காரணமாக மீண்டும் தாயகம் திரும்பி செல்லும் நிலை உள்ளது. படகில் வந்து பரிதாபத்தின் பேரில் ஆஸ்திரேலியாவில் குடியேறும் எண்ணத்தை அகதிகள் கைவிட வேண்டும்' எனக் கூறிய ஜூலியா, இலங்கை அகதிகளுக்கான தடையை விலக்கியுள்ளார். விரைவில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான தடையையும் நீக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ஜூலியா கிலாட் கிழக்கு ரிமோர் ஜனாதிபதி யோஸ் ரமோஸ்ஹொட்ரா அவர்களுடன் அந்நாட்டில் அகதிகளின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்குரிய இடமாக தெரிவு செய்வதற்கு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் ஜூலியா கிலார்ட் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கேயுடனும் இவிவிடயத்தைப்பற்றி பேசியுள்ளார்.

No comments: