2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

.

2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 15, மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

உங்களது விண்ணப்பங்கள் 12/07/2010 திகதிக்கு முன்னதாக தபால் மூலமாகவோ, தமிழ்ப் பாடசாலையூடாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நீங்கள் அனுப்பி வைக்க முடியும்.

இப்போட்டிகளுக்கான விபரக்கொத்துக்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இவாண்டிற்கான போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன,

1) கடந்த வருடம் தமது பிரிவுப் போட்டிகளில் அதிகூடிய விருதைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைத் தவிர மற்றைய அனைத்து மாணவர்களும் தமது பிரிவின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்ற முடியும்.

2) மேற்பிரிவு : 10 - 11 வயது, அதிமேற்பிரிவு : 12 - 14 வயது, இளைஞர் பிரிவு :15 - 17 வயது.

3) ஒவ்வொரு போட்டிக்கும் தலா $5.00 அறவிடப்படுவதோடு, போட்டி நிர்வாகக் கட்டணமாக $ 5.00 உம் அறவிடப்படும்.

விபரக் கொத்தையோ அல்லது மேலதிக விபரங்களையோ பின்வரும் எமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும், www.kalappai.org.

போட்டி பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களூடாக எம்முடன் தொடர்புகொள்ள முடியும்,

சிட்னி : (02) 8824 3051 / 0419 255 625

மெல்பேர்ன் : (03) 9449 7887

போட்டி தொடர்பான முக்கிய திகதிகள்,

12/07/2010 : போட்டி விண்ணப்ப இறுதி நாள்.

15 மற்றும் 22 ஆகஸ்ட் 2010 : நியூ சவுத் வேல்ஸ் மாநில தமிழ்ப் போட்டிகள், Homebush primary school .

22 ஆகஸ்ட் 2010: written competition

02/10/2010 : தேசிய ரீதியிலான போட்டிகள், Sydney.(Darcy Road Public school, Wentworthville)

03/10/2010 : பரிசளிப்பு விழா, Ryde Civic centre (Sydney).

உங்களுக்கு எமது வாழ்த்துக்கள் !
 
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் அமைப்பு


Admin, TC 2010

Australian Society of Graduate Tamils (ASoGT)

PO Box 4040 Homebush, NSW 2140

Tel :612 8824 3051 or 0419 255 625

`16 YEARS IN SERVICE OF TAMIL'

No comments: