அவர் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற மிக உயர் அதிகாரி. ஒருமுறை கவர்னர் மாளிகையில் அரசின் ஓர் முக்கிய விருந்தில் கலந்து கொண்டு இரவு 9-9.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியதும் அவருக்கென தயாராக இருந்த ராகி தோசையை சாப்பிடத் துவங்கினார். அருகில் இருந்த நான் ”கவர்னர் மாளிகையில் சாப்பிடலையா?,” என்றதும்,
”இன்றைக்கு 75 வயதிலும் ஆரோக்கியமாக, 32 வருட காலமாக சர்க்கரை வியாதி இருந்தும் எந்த தொல்லையும் இல்லாமல், ஏராளமான மருந்துகளின் பிடியிலும் இல்லாமல் இன்றும் உழைக்க முடிகிறதென்றால் அதற்கு இந்த உணவுக் கட்டுப்பாடும் ’விருந்துகள் வேண்டாம்’ என்ற மன உறுதியும் தான் காரணம்,” என்றார். இன்றைக்கும் அவர் மழைக் காலத்தில் குடை பிடித்துக் கொண்டு வாக்கிங் போவது அவர்தம் உடல் மீதான அக்கறைக்கான இன்னொரு அடையாளம்.
இன்றைக்கு 35-40 வயதில் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, வாழ்வின், உழைப்பிலும் உச்சகட்ட உற்பத்திதிறன் உள்ள தருவாயிலும் இருக்கும் சமயம் வந்துவிட்ட இந்த மதுமேகத்தைக் கண்டு எரிச்சலும் கோபமும் கொண்டவர் பலர். ”கடுமையாக உழைக்கிறேன்!. அதை திங்காதே! இதை சாப்பிடாதே! நட..தியானம் பண்ணு..குட்டிகரணம் போடு!”..சார்..இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி? முன்னெல்லாம் பர்ஸ்-ல மருந்து வச்சுப்பேன். அப்புறம் சின்னதா ஒரு டப்பா..இப்போ மாசம் மாசம் பிக் ஷாப்பர்-ல மருந்து ஷாப்பிங் போறோம் சார்..விடிவே கிடையாதா?”-என்னும் இனிப்பான நண்பர்கள் வினவுவது உண்டு.
கண்டிப்பாய் விடிவு உண்டு. தேவை கொஞ்சம் அக்கறை. கூடுதல் மெனக்கிடல். குழைவாய் ஒரு குதூகல மனம். ஒரு சின்ன சிரமம், இந்த மூன்றும் கடைகளில் கிடைக்காது! உங்களுக்குள் தேட கிடைக்கும். எப்படி? பார்க்கலாம்.
அப்பா-அம்மாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் மட்டுமே நமக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை-என்கிறது வெகு சமீபத்திய ஆய்வு முடிவுகள். இனிப்பு-மற்றும் பாலிஷ் தானியங்களின் அதிகப்படியான உபயோகம், உணவுக் கலாச்சாரத்தில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவு-இவை தாம் இன்றளவில் நீரிழிவு வர முக்கிய காரணங்கள். முதலில் உணவை பார்க்கலாம்.
சர்க்கரையின் முதல் எதிரியாகச் சித்தரிக்கப்படுவது அரிசி. அதில் பெரும் உண்மையில்லை. இயற்கையில் விளைந்த பாரம்பரிய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ-கிளைசிமிக் தன்மை உடையன. வேகமாக ரத்ததில் சர்க்கரையை சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார் பொருளும், தவிட்டில் உள்ள ஒரைசினால் எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்களும் இன்னும் நீரிழிவிற்கு நல்ல பலனுள்ளவை. விஷயம் ”அளவில்” தான் உள்ளது. ஒரு வேளை குதிரையில் அலுவலகம் போவது என்றால், அரிசி சோறை ஒரு கட்டு கட்டினாலும் பிரச்சினை இல்லை. அலுங்காமல் குலுங்காமல்..வியர்க்காமல் ஏசி பஸ்ஸில்/காரில் போய், வீல்-உள்ள சேரில் முதுகு நோகாமல் நகர்ந்து பணி புரிவோருக்கு அரிசி சோறின் அளவு குறைவாக இருப்பது தான் நல்லது.
’வெள்ளை மனது’ வேடிக்கையாகிப் போனதும், ’வெள்ளை நிறம்’ வசீகரிக்கப் படுவதும் இன்றைக்கு இன்னுமொரு கொடுமை. அரிசி/கோதுமை என எல்லா தானியத்தையும் பட்டை தீட்டி, வெண்மையாய் ’சில்க்கி பாலிஷ்’ போட்டு பம்மாத்தாய் விற்பனை செய்வதில் அது இரத்தத்தில் சர்க்கரையை வேகமாக ஏற்றுகிறது. அவற்றை தவிர்த்து விடுங்கள். ஒருவேளை வெளியிடத்தில் அது தான் கிடைக்கிறது என்றால், அரிசி உணவுடன் கீரை காய்கறிகளை நன்கு பிசைந்து மெதுவாக மென்று சாப்பிடுங்கள். அரிசி சோற்றின் சர்க்கரையானது இரத்ததில் கலக்கும் வேகத்தை கீரையின் நார்கள் மெதுவாக்கிடும்.
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள், குறிப்பாய் உருளை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. கேரட்டும் பீட்ரூட்டும்?-அதற்கும் பொடா தான்.
கோவைக்காய், கத்தரிக்காய், அவரைப்பிஞ்சு, வெண்டைக்காய், கொத்தவரை, டபுள் பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக் கீரை, கொத்துமல்லி-புதினா,-இவை எல்லாமே சர்க்கரை நோயாளிக்கு மிகுந்த நல்ல பலன் அளிக்கக் கூடியவை. பாகற்காய் சர்க்கரை நோயாளியின் சிறந்த நண்பன். சர்க்கரை அளவை குறைப்பதில் பலனளிப்பதை இன்றைய மருத்துவ விஞ்ஞானம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு வேளை உங்கள் வீட்டுப் பாட்டி இந்த பொருள் உடலுக்கு நல்லது என்றால்,சும்மா இரு பாட்டி..! இண்டர் நெட்டில் பப்-மெட்டில் பார்த்துவிட்டுதான் சாப்பிடுவேன் என அடம் பிடிக்காதீர்கள். உங்கள் பாட்டி 2000 வருட என்சைக்ளோபீடியா. இணையத்தில் காசு வாங்கிக் கொண்டு செர்ச் எஞ்சினில், முதலிடம் பிடிக்கும் குறுக்கு புத்தியோ அல்லது கார்ப்பொரேட் கம்பெனி கோலூச்ச தகடுதனம் செய்ய்ம் அறிவியலோ அவர்கட்கு தெரியாது. அவர்தம் அறிவு தன் பாரம்பரியம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனும் அதிகபட்ச அக்கறை மட்டுமே கொண்டது. அதற்கு ஒரு சின்ன உதாரணம்..பாகற்காயும் வெந்தயமும் தான். ஒருகாலத்தில் அரசு பெரிய மருத்துவமனைகளில் கூட பாகற்காய் சர்க்கரை நோய்க்கு எந்த பலனும் தருவதில்லை என்று எழுதி வைத்திருந்த காலம் உண்டு. வெள்ளைகாரகள் அவர்கள் மொழியில் சொன்னதும், இன்று அவசரமாய் ஆமோதிக்கும் நம் மன நிலை என்று மாறும் தெரியவில்லை.
நாருள்ள இனிப்பு குறைவாயும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்கள் கண்டிப்பாக தினசரி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது அவசியம். மாம்பழம், சப்போட்டா, மோரீஸ் வாழைப்பழம்- இன்னும் ஹைப்பிரிட் வாழை தவிர பிற பழங்களை மாலை வேளையில் பிற உணவு இல்லாத போது உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி தினசரி சாப்பிடுங்கள். தோலுடன் உள்ள ஆப்பிள், துவர்ப்பான இளம்பழுப்பில் உள்ள கொய்யா, நாவல், துவர்ப்புள்ள நம்மூர் மாதுளை நீரிழிவிற்கு நல்லது. 10,000 நபர்களில் செய்யப்பட்ட பல்கேரிய நாட்டு ஆய்வில் தோலுடன் கூடிய ஆப்பிள் சர்க்கரை நோயில் பலனளிப்பதை உறுதி செய்து உள்ளது.அதற்குக் காரணம் அதிலுள்ள quercitin எனும் பொருளாம். நம்ம ஊர் இலந்தையிலும், நாவலிலும், கொய்யாவிலும் இது போல் பெரிய ஆய்வுகள் நடந்தால் அதன் பலனும் தெரியவரும்.
பானத்திற்கு பச்சைத் தேயிலைதான் -green tea- (பால் சேர்க்காமல்/இனிப்பு சேர்க்காமல்) முதலிடம். பாலுக்கு பதில் தினசரி மோர் சாப்பிடலாம். காலையில் முருங்கைக் கீரை வெங்காயம் சேர்த்த சூப், அல்லது கொத்துமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீர் சாப்பிடலாம். வெட்டிவேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்திற்கு நல்லது.
வாரம் இரண்டு நாள் அரிசி சோறு, இரண்டு நாள் தினைஅரிசி சோறு, இரண்டு நாள் வரகரிசி சோறு, ஒருநாள் மாப்பிள்ளைச்சம்பா அவல் என மதிய உணவும், இரவில் தினை ரவா உப்புமா/கேழ்வரகு அடை –பாசிப்பயறு கூட்டுடன் சாப்பிடுங்கள். காலை உணவிற்கு பஜ்ரா ரொட்டி(கம்பு அடை),சிகப்பரிசி அவல், கைக்குத்தலரிசி பொங்கல் என அளவாய் சாப்பிடுவது நல்லது. அதிகம் விளம்பரப்படுதப்படும் ஓட்ஸ் கஞ்சிக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாததும் கூடுதல் பலனும் உள்ளது நம்ம ஊர் நவதானியக் கஞ்சி. காலை உணவாக அந்த லோ-கிளைசிமிக் கஞ்சி கண்டிப்பாக பலனளிக்கும்.
கடைசியாய். மனம். குதூகலம் வெளியில் தேடும் மன நிலை மாறவேண்டும். பரவசம் மனதில் அவ்வப்போது வந்து செல்லும் வாழ்வியல் அவசியம் வேண்டும். மருந்து சீட்டில் இல்லாத இடம் பெறாத இரு பெரும் மருந்துகள் கீழ்கண்டவை. ஒன்று சோடனையில்லாத காதல், இரண்டாவதுஎந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் பாசமும். உணவிற்கு முன்னோ/ பின்னோ கண்டிப்பாக தினசரி இருக்க வேண்டும். வசதியைப் பெருக்குவது மட்டுமே வாழ்க்கை அல்ல. நவீனத்துவ பன்னாட்டு வணிக கலாச்சாரப் பிடியில் ”ஈ.எம்.ஐ.” வாழ்க்கை வாழாமல், ‘இந்தப் புன்னகை என்ன விலை?” என்று வாழ்வதும் நீரிழிவு வருவதை ஒருவகையில் தடுக்கும்.
http://siddhavaithiyan.blogspot.com/2010/07/blog-post_08.html நன்றி
1 comment:
சர்க்கரை வியாதிக்கு மருந்து....
சட்டிஸ்கர் மாநிலம், துர்க் என்ற இடத்தில சர்கரி நோய்க்கு மருந்து தருவதாக...கேள்விப்பட்டு
முதலில் சென்று மருந்து சாபிடடில் நல்ல குணம் தெரிகறது. அவர் சுமார் 30 வருடங்களாக மருந்து கொடுத்து வருகின்றாராம்.
ஒரு முறை வந்தவர்கள் தனது தெரிந்தவர்களை அழைத்து வருகின்றார்கள். அதில் குணம் பெற்றவரில் எனது குடும்பத்தினரும் அடக்கம்.
மருத்துவத்தின் விபரம்,
கலையில் வெறும் வயற்றில் செல்ல வேண்டும் ஆண்ட மருந்து சாப்பிட்டு 4 மணி நேரம் எதுவும் சாப்பிட கூடாது. அதன் பின் சிறிது இனிப்பு சாப்பிட வேண்டும்.
2 மாதங்களுக்கு கத்திரிக்காய், புளி, மாம்பழம்,மா வற்றல், மாங்காய், எதுவும் சாப்பிட கூடாது.
சர்க்கரை இன்சுலின் பூட்டு கொள்பவர்கள் மட்டும் 2 நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு முறை மட்டும் தான்.
மருந்து உட்ட்கொண்டவர்கள் கண்டிப்பாக 15 நாட்கள் கண்டிப்பாக பாண் பாக்கள்,மது , புகை விட்டு தவிர்க்க வேண்டும்.
வீறு எந்த பத்தியமும் கிடையாது.
அட்ரஸ்
சென்னையில் இருந்து துர்க் ( சட்டிஸ்கர் ) , பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்
திங்கள் , இரவு 9 .10 க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இர்ருண்டு புறப்படும். சுமார் 20 மணிநேர பயனடிற்கு பிறகு மாலை 5 .30 மணி அளவில் துர்க்இல் இறங்கி, ஷேர் ஆட்டோ அல்லது சைக்கிள் ரிக்ச வில் சென்று, டோகேன் வாங்கி, மறுநாள். காலை மருந்து சாப்பிட வேண்டும். இரவு தங்க அங்கே லோட்ஜே நிறைய உள்ளது. 60 ருபாய் முதல் 2000 வரை.
மருத்துவ கட்டணம்.
டோகேன் 30 ருபாய்,
மருந்துக்கு 150 ருபாய் ,
,
சிலர் ஒருவருக்கு இவ்வாறு அழைத்து சென்று சேவையும் செய்து வருகின்றனர். அவர்களை பற்றிய விபரம் அடுட வாரம் தருகின்றேன்.
மருந்து இல்லை என்று வெறும் வாதம் செய்யாமல் குணம் அடைடவர்களை பார்த்து பயன் அடைவதே சிறந்தது.
இப்படிக்கு,
அபு
+91 9176675956
Post a Comment