உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்

.


உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றது.சாக்கர் சிட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தும் எதையும் கோலாக்க முடியவில்லை. பிற்பாதி ஆட்டம் தொடங்கிபிறகும் இதே நிலைதான் நீடித்தது. 62-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் ஸ்னைடருக்கு கோலடிப்பதற்கான அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதனை ஸ்பெயினி்ன் கோல்கீப்பர் கேசிலாஸ் அருமையாகத் தடுத்தார். 69-வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவும் ஒரு வாய்ப்பை வீணாக்கினார்.பின்னர் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது அதில் ஸ்பெயின் அணியின் இனியெஸ்டா கோல் அடித்தார். இதன்பிறகு நெதர்லாந்து வீரர்கள் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.கோலடித்த இனியெஸ்டா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: