கொங்கு மண்டலத்தின் வரலாறு

.

செம்மொழி மாநாடு கண்ட கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வாங்கியிருக்கிறார் பிரண்டா பெக். அத்தோடு நின்றுவிடாமல் கொங்கு மக்களின் வரலாறுகளை -அவர்களின் பாரம்பரிய பெருமைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் கடந்த 7 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார், கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான பிரண்டா... கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாக சொல்கிறார். தமிழ் பேசவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.


""என்னுடைய 13 வயதில் முதல்முதலாக என் பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். அப்போதே எனக்கு கோயம்புத்தூர் மீதும், கொங்கு மண்டல மக்களின் மீதும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. அதனால் என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக கொங்கு மண்டல மக்களின் வரலாறை எடுத்துக்கொண்டேன். 1965-ம் ஆண்டு என்னுடைய 22 வது வயதில் இதற்காக மீண்டும் கோவைக்கு வந்து தங்கினேன். காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களின் கதையை நாட்டுப்புறப் பாட்டாகவே பாடிக்காட்டினார்கள். 44 மணி நேரம் அவற்றை பதிவு செய்தேன். அதுதான் ‘அண்ணன்மார் கதி''’ என்று கொஞ்சு தமிழில் பேசும்
 
 
""தமிழும், குறிப்பாக கொங்கு தமிழும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். தமிழ் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. என்னை பெரிதும் ஈர்த்த மொழி தமிழ். தமிழில் உச்சரித்தால் உற்சாகம் வருகிறது. தமிழ் கற்றதன் மூலம் இந்த உலகத்தை இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது எனத் தெரிந்ததும் மிகுந்த உற்சாகத்தோடு இங்கு வந்திருக்கிறேன்'' என்கிற பேராசிரியை பிரண்டா, இதற்கு முன்பு கோலாலம்பூரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.


""கலைஞர் எழுதிய "பொன்னர் சங்கர்' காவியத்தில் என்னைப்பற்றியும், என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பிரண்டா... அண்ணன்மார் கதையை முப்பரிமாண ஒலி-ஒளி காட்சிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ""26 பகுதிகள் கொண்டதாக அண்ணன்மார் கதையை காட்சிகளாக்கி வருகிறோம். 7 வருடமாக இதற்காக ஒரு குழு வேலை செய்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவோம். இந்த காட்சிகளுக்கு நடிகர் சிவக் குமார் குரல் கொடுத் திருக்கிறார். கொங்கு மண்டலத்தின் வரலாறை பதிவு செய்யும் உங்கள் முயற் சிக்கு நான் செய்யும் உதவி என்று சிவகுமார் இலவசமாகவே செய்து கொடுக்கிறார்'' என்கிறார் பேராசிரியை பிரண்டா பெக்.

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழோடும், தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பிரண்டா, "அண்ணன்மார் கதை எனக்கு கிடைத்த அட்சய பாத்திரம்' என்கிறார். பிரண்டாவின் எண்ணங்களை முப்பரிமாணக் காட்சிப்படுத்தும் பணியை செய்யும் கனடா தமிழரான ரவிச்சந்திரன், "கொங்கு மக்களின் வரலாறு பிரமிப்பு தருவதாக இருக்கிறது. இதை ஆவணப்படுத்தும் பணியில் பங்கேற்பது நிறைவு தருகிறது'’என நெகிழ்கிறார்.
அண்ணன்மார் கதையை தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட பிற மொழி களிலும் பதிவு செய்யும் திட்டத்திலும் இருக்கிறது பேராசிரியை பிரண்டா பெக் குழு.
-ச.கார்த்திகைச்செல்வன்
படம் : ஸ்டாலின்
நன்றி http://www.nakkheeran.in/

No comments: