மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்


.

இயற்கையில் நம் முன்னோர் சமையலில் பயன்படுத்திய பல பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது, பின்னாளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூளின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இதில் பார்ப்போம். பொதுவாக மஞ்சள் நிறம் ஏற்படவும், உணவுப் பதார்த்தங்கள் கலராக இருப்பதற்குமே மஞ்சள் பயன்படுத்தப்படுவதாக பலரும் அறிவோம். ஆனால், அவற்றின் செயல்பாடு மிகவும் ஆச்சரியப்பட வைக்கும்.

மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.

`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.

முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

No comments: