புலிகள் மீதான தடை மேலும் 3 ஆண்டுகளுக்கு ஆஸி. அரசாங்கத்தால் நீடிப்பு

27/11/2013   விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்ரேலியா அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் தெரிவித்துள்ளார். 
தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதைத் தடுப்பதற்கான, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரகடனத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், அல் சஹாப் மற்றும் ஐரிஸ் விடுதலை இராணுவம் ஆகியவற்றின் மீதான தடையையும், அவுஸ்ரேலியா நீடித்துள்ளது. 
தீவிரவாதத்தை அவுஸ்ரேலியா கடுமையாக எதிர்ப்பதாகவும், எந்த வகையிலான தீவிரவாத செயற்பாடுகளையும் அவுஸ்ரேலியா தடுக்கும், அதற்கெதிராகப் போராடும் என்றும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  நன்றி வீரகேசரி

பொல்லாதவளாகவே - கோமதி நடராஜன்

.
அநியாயங்களைச் ,சகித்துக்
கொண்டே போனேன் .
நல்லவளானேன் .
சகிப்பு தொலைந்து ,
நிமிர்ந்து பார்த்தேன்
கெட்டவளாய் ஆனேன்
நக்கல்களை ,நல்லவிதமாய்,
எடுத்துக் கொண்டே நகர்ந்தேன்
நம்மவள் ஆனேன்.
ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன்.
யாரோ என்றானேன் .
பொய்யென்று தெரிந்தும்,
பொறுத்துப் போனேன்
ஏற்றவளானேன்
நம்பாத முகம் காட்டினேன்
தகாதவளானேன்

சோகத்தில் முடிந்தது CHOGM


CHOGM 2013பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி ஒருவாறு பொதுநலவாய மாநாட்டை இலங்கை அரசாங்கம் நடாத்தி முடித்துள்ளது. இம்மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள், அரசாங்கம் நடந்துகொண்ட முறை போன்றவற்றால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்குமா என்ற அச்சம் ஒரு பக்கமும், செலவு செய்யப்பட்ட நிதி விலையேற்றம் மூலமாக மக்களிடம் சுரண்டப்படுமா என்ற அச்சம் ஒரு பக்கமும் தற்போதைய சூழ்நிலையில் நிலவுகிறது.

இந்த மாநாட்டை ஒருசில நாடுகள் புறக்கணித்திருந்தன. இருப்பினும் பெரும்பாலான நாடுகளிலிருந்து ஒரு அரசியல் பிரமுகராவது மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 9 நாடுகளின் அதிபர்கள், 5 நாடுகளின் பிரதி அதிபர்கள் உட்பட பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளடங்கலாக 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

CLICK HERE என்பதை அழுத்துங்கள் ஆச்சரியத்தை பாருங்கள்

.

படத்தில் உள்ளவர்களின் பெயர்களை அறிய வேண்டுமா கிளிக் here என்பதை அழுத்துங்கள் ஆச்சரியத்தை பாருங்கள் 
CLICK HERE   - You should know that they have provided both vertical and horizontal scroll bars.
The Miracle of Computers!
Hope you enjoy this one- it's interesting to see all that is included.
It would prove invaluable assistance to anyone studying history or biographies.
Well worth saving for students. Now take a look at this picture.....
 Description: cid:image001.jpg@01CCAE74.2942E130
Painted by Chinese Artists, Dai Dudu, Li Tiezi and Zhang An, oil on canvas, 2006.
This painting is truly remarkable.


இசையருவி " 16/03/2014


இசையருவி " 16/03/2014 ஞாயிற்றுக் கிழமை  .. Sydney Baha'i centre.107 Derby street ,Silver water, NSW 2028 Singers . "ஈழத்துசௌந்தர்ராஐன்
ஈழத்துசௌந்தர்ராஐன் "N .ரகுநாதன் , "சுப்பர் சிங்கர் புகழ்"பிரகதி குருபிரசாத் "கன்னித்தீவு பெண்ணா புகழ்"M.L.R.கார்த்திகேயன், ","பிரபல பின்னனி பாடகி"அனித்தா

உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை

[ 1 ]
கா.சிவத்தம்பி ஈழ இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியம். இது வடக்குப்பகுதி இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு, இலங்கை முஸ்லீம்களின் இலக்கியம். இவர்கள் வடகிழக்கிலும் தெற்கிலும் வாழ்பவர்கள். மூன்று மலையக இலக்கியம்.
மலையக இலக்கியம் பிற இரண்டிலிருந்தும் வேறுபட்ட வட்டார- பண்பாட்டு அடையாளம் கொண்டது. எந்த ஓர் இலக்கியவகைமையைப்போலவும் இதுவும் ஒருசில அடையாளங்களை மட்டும்கொண்டு செய்யப்படும் தோராயமான பகுப்புதான். படைப்புகளின் சமூக-அரசியல் பின்னணியைப்புரிந்துகொள்வதற்கு மட்டுமே இது உதவும். இதனடிப்படையில் எந்த ஒரு படைப்பின் கலைப்பெறுமதியை வகுத்துக்கொள்ள முடியாது. படைப்பை முழுமுற்றாக இந்த அடையாளத்தால் குறிப்பிடவும் முடியாது
மலையகம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பு இலங்கையின் நுவரேலியா பகுதித் தேயிலைத்தோட்டங்கள் அடங்கிய மலைப்பகுதியாகும். இங்கே 1824 ஆம் ஆண்டு கண்டி பகுதியில் தேயிலை-காப்பி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அதற்கான கூலி உழைப்புக்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.

தமிழ் சினிமா

நய்யாண்டி

தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம், நடிகர் தனுஷ் இருவரும் கைகோர்த்திருக்கும் படம் நய்யாண்டி.
கும்பகோணத்தில் குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் குடும்பத்தின் இளைய மகன் சின்ன வண்டாக வருகிறார் தனுஷ்.
எப்போதும் தனது நண்பர்களுடனேயே அரட்டையடித்தபடி சுற்றித்திரியும் தனுஷ், பாட்டி வீட்டுக்கு வந்த வனரோஜா(நஸ்ரியா)வை பார்த்த மயக்கத்தில் காதலில் விழுகிறார்.
பின் என்ன வழக்கம்போல் ஹீரோயினையே சுற்றி வந்து, தனது காதல் வலையில் நஸ்ரியாவை விழவைக்கிறார் தனுஷ்.
இதற்கிடையில் தனது மகளுக்கு(நஸ்ரியா) சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக மாப்பிள்ளை பார்த்து நிச்சயத்தை நடத்தி விடுகிறார் ஆடுகளம் நரேன்.
இது தெரியாமல் காதலியின்(நஸ்ரியா) பிறந்த நாளுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக, நஸ்ரியாவை சந்திக்கும் தனுஷுக்கு தெரியவருகிறது இந்த ஷாக் நியூஸ்.
இதையடுத்து ஓட்டம் பிடிக்கும் ஜோடி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்கிறது.
தனது இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணமாகாத நிலையில் தான் இவ்வாறு செய்தது வீட்டில் தெரிந்தால், பெரிய ரணகளம் ஏற்படும் என்று பயந்து நஸ்ரியாவை வேலைக்காரியாக அனுப்பி தனதுவீட்டில் தஞ்சம் அடைய வைக்கிறார் தனுஷ்.
வீட்டிற்கு வந்த நஸ்ரியாவின் மீது மாறி மாறி ரூட்டு விடுகிறார்கள் தனுஷின் அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன்.
இறுதியில் இவர்கள் வீட்டில் தெரிந்து ஏற்றுக்கொண்டார்களா என்பதே வளவளவென செல்லும் மீதிக்கதை.
சின்ன வண்டு கதாபாத்திரத்துக்கு ஏற்ற சரியான பொருத்தம் தான் தனுஷ் என்றாலும், தனுஷுக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகனை இப்படத்தில் எந்த இடத்திலும் பார்க்கமுடியவில்லை. அது தனுஷின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
அதேபோல் ஓப்பனிங் பில்டப், சில பஞ்சஸ், இடைவெளியிலும் கிளைமேக்ஸ்லயும் பத்து பேரை பந்தாடி ஹீரோயிசம் காட்டுவது போன்ற காட்சிகளை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒப்பேத்துவார்களோ!
நஸ்ரியா தனது நடிப்பால் ஏதோ ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
தனுஷின் கூட்டாளிகளாக சூரி, சதீஷ், இமான் அண்ணாச்சி, அஷ்வின் ராஜா ஆகியோர் முதல் பாதியில் தத்தம் தமது பாணியில் வசனத்தை தெளித்தது நல்ல டைம் பாஸ்.
தனுஷின் தந்தையாக வரும் பிரமிட் நடராஜன் இங்கிலிஷ் தெரியாமல் விழிக்கும்போதும் நஸ்ரியாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரிந்தபிறகும் தன் நடிப்பில் கவர்கிறார்.
இரண்டாம் பாதியில் ஸ்ரீமன், சத்யனின் அலப்பரைகள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஜிப்ரானின் இசையில் 'டெடி பியர்' பாடல் கேட்டபோது ரசிக்கவைத்த அளவுக்கு காட்சியமைப்பில் கவர தவறுகிறது.
'ஏ லே லே எட்டிப் பார்த்தாலே', 'இனிக்க இனிக்க' பாடல் மெலோடி தன்மையில் லைட்டாக ஈர்க்கிறது. இக்கதைக்கு பின்னணி இசையில், இதற்கு மேல் எதுவும் தரமுடியாது.
படத்தின் ஒளிப்பதிவு வேல்ராஜ் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், ஒரு இடத்தில் கூட கமெரா அவரது மொழிப் பேசவில்லை.
ராஜாமுஹமதுவின் படத்தொகுப்பும் ஏதோ இந்த கதைக்கு ஏற்ற கட்டிங்கில் நகர்கிறதே தவிர புதிய யுக்தி ஒன்றும் இல்லை.
களவாணி போன்ற ஒரு கமர்ஷியல் படத்தையும், வாகை சூட வா போன்ற ஒரு தரமான படத்தையும் தந்த சற்குணம்... இப்படத்தில் ரொம்பவும் அட்டுப் பழசான கதையை எடுத்து தூசி தட்டியுள்ளார். அதிலும் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
உண்மையிலேயே தேசிய விருது பெற்ற நடிகர் - இயக்குனரின் கூட்டணியில் உருவான படம்தானா இது..? என்று நம்மை பல இடங்களில் நெளியவைக்கும் பழைய திரைக்கதை பாணி.
ஏற்கனவே தொப்புள் பிரச்சனையால் டேமேஜான சற்குணத்தின் பெயர் இந்த கதையமைப்பிலும் பெரிதாகவே டேமேஜாகியிருக்கிறது.
மொத்தத்தில் பொழுதை நக்கல் நய்யாண்டியுடன் களிக்க மட்டுமே வெளிவந்துள்ளது இந்த நய்யாண்டி.
நடிகர்: தனுஷ், சூரி, சத்யன், சதீஸ், இமான் அண்ணாச்சி, ஸ்ரீமன், வம்சி கிருஷ்ணா
நடிகை: நஸ்ரியா நசிம்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சற்குணம்
தயாரிப்பு: எஸ்.கதிரேசன்
நன்றி விடுப்பு

காற்றுக்கு வந்த சோகம் --சு.வில்வரெட்னம்.

.

முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.
வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

வட, கிழக்கில் 90,000 விதவைகள்



.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த விதவைகள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு௨013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது விதவைகள் செயலணியின் தலைவிகள் பங்குகொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு விதவைகள் அமைப்புடன் விழுது அமைப்பு தொடர்பு வைத்துள்ளதினால் விதவைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இலவச சட்ட உதவி, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.

சர்வதேச விதவைகள் தினம் ஜூன் 23ம் திகதி என பிரகடனப்படுத்திய நிலையில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் அரச புள்ளி விபரம் இதுவரையில் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.

திரும்பிப்பார்க்கின்றேன் 16 --முருகபூபதி

.

பனைமரத்துப்பாளையெல்லாம்       நில     மட்டத்தில்      வெளிவந்தால்.....
மேடையில்       உயிர்       நீத்த       தோழர்         வி.பொன்னம்பலம்


பனைமரத்துப்பாளை        எல்லாம்     நில      மட்டத்தில்     வெளியாகியிருந்தால்       சாதி      பேசும்       உயர்குடிமக்களும்   கள்ளுச்சீவியிருப்பார்கள் -         இவ்வாறு       சுவாரஸ்யமாகவும்  கருத்தாழத்துடனும்        பேசவல்ல       ஒருவர்       எம்மத்தியிலிருந்தார்.
சிறந்த      பேச்சாளர்      மொழிபெயர்ப்பாளர்        கல்வித்துறையில்       பலருக்கும்  கலங்கரைவிளக்கமாக        ஒளிதந்த      ஆசான்      கொள்கைப்பற்றாளர்   பதவிகளுக்காக        சோரம்போகாதவர்        தமிழ்மக்களின்       சுயநிர்ணய  உரிமைக்காகவே          மரணிக்கும்வரையில்        குரல்      கொடுத்தவர்  மாற்றுக்கருத்துள்ளவர்களையும்         அரவணைத்தவர்....       இவ்வாறு       பல  சிறப்பியல்புகளையும்        கொண்டிருந்த       ஆளுமையுள்ள     தலைவர்  தோழர்  வி. பொன்னம்பலம்      பற்றி      தெரிந்திருப்பவர்கள்      இன்றும்   எம்மிடையே      இருக்கிறார்கள்.
ஏறக்குறைய       இருபது        வருடங்களுக்கு       முன்னர்      ஒரு      நாள்  நள்ளிரவு.       ஆழ்ந்த     நித்திரையில்      இருந்தேன்.
    தொலைபேசி        அழைப்பு       வந்து      திடுக்கிட்டு       விழித்தேன்.  மறுமுனையில்       கனடாவிலிருந்து      மறைந்த      தோழர் வி.பொன்னம்பலத்தின்     மகன்      நமுனகுலன்.
   தோழர்  வி.பி. யின்       மறைவுச்செய்தி       அறிந்து       யார்      மூலம்   அனுதாபம்       சொல்வது     எனத்தெரியாமல்       தவித்துக்கொண்டிருந்த   எனக்கு        நமுனகுலனின்        அழைப்பு       சிலிர்ப்பைத்தந்தது.

மாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு

.
அவுஸ்திரேலியா விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2013 ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு விக்ரோறியா மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பத்தினரின் விபரங்களைத் திரட்டும் பணியை விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுள்ளது.

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-

கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:-

Bookmark and Share

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் ராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது:- வரமுடியவில்லை அம்மா - கவிதை இணைப்பு:-

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது.

A GUN & A RING 30/11, 01/12 - 2013

.

இலங்கைச் செய்திகள்

யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்

நிந்தவூர் அசாதாராண சூழ்நிலை: கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா

ஜனாதிபதியின் பதாதை யாழில் தீக்கிரை

தமிழர் என்ற அடையாளத்துடன் முரளிக்கு கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்


நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்

பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்


======================================================================

யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்

 
19/11/2013   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட 
மக்கள் மீதும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மீதும் படைத்தரப்பினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தாம்  வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Trinco X,Mas Celebrations - 30.11.2013

.


உலகச் செய்திகள்

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

இந்தோனேசியாவை உளவுபார்த்த அவுஸ்திரேலியா?

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

19/11/2013   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்  குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

கண்டி அரசன் நாட்டுக் கூத்து 01.12.2013

.


குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக

.


நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 


இது கண்கலங்க வைத்துவிடும் google விளம்பரம்

.
இது google  விளம்பரம்தான் ஆனால் இறுதியில் கண்கலங்க வைத்து விடுகிறது விளம்பரத்தால் அல்ல நட்பின் ஆழத்தால்

.
சுயநலம்
சி. ஜெயபாரதன், கனடா
சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை !
பறி போவது !
பற்றியும் பற்றாமல் ஆவது !
புலி வருது ! புலி வருது !
புலிக்குப் பயந்தவர் என்மேல்
தலை வைப்பீர் !
கடவுள் படைப்பில்
பெண் சுயநலம் !
ஆண் பொதுநலம் !
சுயநலம் இல்லையேல்
பொதுநலம் இல்லை !
அன்னை தெரேஸா
அநாதை இல்லம் பொதுநலமா ?
தனித்துவச் சுயநலம்
மனச் சாந்தி !
சுயநலம் வளர்பிறை !
பொது நலம் தேய்பிறை !
சுயநலத்தின்
நிழல் தான் பொதுநலம் !
நீர்க் குமிழியாய்
மேல் எழுவது சுயநலம் !
நுனி தெரிய
பனிப் பாறையாய்
மூழ்கிப் போவது பொதுநலம் !
முதல் அமைச்சர்
தையல் மெஷின் அளிப்பார்
தரித்திரம் போக்க !
பொதுநலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கிக் கிடந்தது
சுயநலம் !
பொதுநலம் ஓர் ஆல‌மரம்
சுயநலம் விழுது !
மேடையில்
தன் வாடை மணக்க
பொன்னாடை போர்த்துவார்
முன்னோடி யாக‌ !
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம் கட்டிய கோபுரம் !
வியப்பான
தாஜ்மகாலைக் கட்டியது
ஷாஜஹானின் சுய நலமா ?
பொது நலமா ?

மரண அறிவித்தல்


திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளை



மாப்பாணவூரி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளை அவர்கள் 19.11.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார, காலஞ்சென்ற முருகேசு – நேசரட்ணம் தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்ற Dr சோமசுந்தரம் அருளையாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் சச்சிதானந்தா (Dandenong – Melbourne) காலஞ்சென்ற முருகானந்தா (Glen Wawerly – Melbourne), சங்கமித்ரா (Waverly Park – Melbourne)  ஆகியோரின் பாசமிகு தாயாரும் வள்ளிஇ; சிறீராணிஇ பூங்குன்றன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிரோசன்இ றம்யாஇ யதுர்சன்இ சாரங்காஇ விசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல், வெள்ளிக்கிழமை (22.11.2013) மாலை 4 மணி முதல் 5:15 மணி வரை, Springvale Wilson Chappel மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் அதே தினத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு:

        சச்சி        0469 621 482

        மித்ரா        0469 149 417

        சிறீராணி    0402 079 256