மாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு

.
அவுஸ்திரேலியா விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2013 ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு விக்ரோறியா மாநிலத்தில் வாழும் மாவீரர் குடும்பத்தினரின் விபரங்களைத் திரட்டும் பணியை விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டுள்ளது.



இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் விக்ரோறியா மாநிலத்துக்குக் குடிபுகுந்தவர்கள், மற்றும் புதிய முகவரிக்கு இடம்மாறியுள்ள மாவீரர் குடும்பத்தவர்கள்தயவுசெய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளங்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது.
எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத, விக்டோரியவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர்  0400 804 253 என்ற தொலைபேசி எண்ணில் திரு. நந்தகுமார் அவர்களைத் தொடர்புகொள்ளவும்.

No comments: