பொல்லாதவளாகவே - கோமதி நடராஜன்

.
அநியாயங்களைச் ,சகித்துக்
கொண்டே போனேன் .
நல்லவளானேன் .
சகிப்பு தொலைந்து ,
நிமிர்ந்து பார்த்தேன்
கெட்டவளாய் ஆனேன்
நக்கல்களை ,நல்லவிதமாய்,
எடுத்துக் கொண்டே நகர்ந்தேன்
நம்மவள் ஆனேன்.
ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன்.
யாரோ என்றானேன் .
பொய்யென்று தெரிந்தும்,
பொறுத்துப் போனேன்
ஏற்றவளானேன்
நம்பாத முகம் காட்டினேன்
தகாதவளானேன்


நல்லவளாய்
ஏற்றவளாய்
இனியவளாய்
என்றுமிருக்க
நல்லவை அல்லாதவைகளைப்,
பொறுத்துப் போனால்தான்
சாத்தியமென்றால் ,
பாதகமில்லை !
நான் ,பொல்லாதவளாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்.

No comments: