27/11/2013 விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்ரேலியா அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதைத் தடுப்பதற்கான, ஐ.நா
பாதுகாப்புச் சபையின் பிரகடனத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், அல் சஹாப் மற்றும் ஐரிஸ் விடுதலை
இராணுவம் ஆகியவற்றின் மீதான தடையையும், அவுஸ்ரேலியா நீடித்துள்ளது.
தீவிரவாதத்தை அவுஸ்ரேலியா கடுமையாக எதிர்ப்பதாகவும், எந்த வகையிலான
தீவிரவாத செயற்பாடுகளையும் அவுஸ்ரேலியா தடுக்கும், அதற்கெதிராகப் போராடும்
என்றும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment