இந்திய சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய நிறுவனம் ஏவி எம் புரொடக்ஷன்ஸ் . இதன் அதிபர் ஏவி மெய்யப்ப செட்டியார் தனது கடின உழைப்பாலும், திட்டமிடலாலும் இந்த நிறுவனத்தை உன்னத நிலைக்கு உருவாக்கி இருந்தார். இவர் தயாரித்த படங்கள் தென் இந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் , குறிப்பாக ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
தமிழில் சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர் , என்று நட்சத்திர நடிகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்த ஏவி எம் ஒரு நட்சத்திர நடிகரின் படத்தை மட்டும் தயாரிப்பதை தவிர்த்து வந்தார் . அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல , எம் ஜி ஆர் தான்! தான் தயாரிக்கும் படங்களில் வேறு எவருடைய தலையீட்டையும் விரும்பாத செட்டியார் , எம் ஜி ஆர் நடிப்பில் படம் எடுத்தால் அவரின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பதால் அவரை தவிர்த்தே வந்தார். ஆனாலும் எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன், தெய்வத் தாய் போன்ற படங்களுக்கு நிதியுதவி வழங்க அவர் பின் நிற்கவில்லை .
எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படமேனும் எடுக்க வேண்டும் என்று பல
தயாரிப்பாளர்கள் தவம் இருக்க எம் ஜி ஆர் சில தயாரிப்பாளர்களின் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற அஜெண்டாவை உருவாக்கி வைத்திருந்தார்.
தயாரிப்பாளர்கள் தவம் இருக்க எம் ஜி ஆர் சில தயாரிப்பாளர்களின் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற அஜெண்டாவை உருவாக்கி வைத்திருந்தார்.
பெரிய தயாரிப்பாளர்களும், ஸ்டூடியோ அதிபர்களுமான பக்ஷிராஜா ஸ்டுடியோவுக்கு மலைக் கள்ளன், மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அலிபாபாவும் 40 திருடர்களும், விஜயா வாஹினி ஸ்டுடியோவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை படங்களில் நடித்து அவை வெற்றி பெற்ற நிலையில் ஏவி எம் ஸ்டூடியோ , ஜெமினி ஸ்டூடியோ இவை இரண்டுமே பாக்கி இருந்தன. இந்த நிறுவனங்களின் படங்களில் சிவாஜி எற்கனவே நடித்து விட்டார்!
இந்த நிலையில் எம் ஜி ஆருக்கு இப்படியொரு எண்ணம் இருப்பதை அறிந்திருந்த அசோகன் , ஏவி எம்மின் புதல்வர்களான முருகன், குமரன், சரவணன் மூவரிடமும் எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படம் எடுங்கள் , அவரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று வலியுறுத்தத் தொடங்கினார். தொடர்ந்து எம் ஜி ஆருடன் இடம் பெற்ற அவர்களின் முதல் சந்திப்பிலேயே எம் ஜி ஆர் ஏவி எம் நிறுவனத்துக்கு படம் நடித்து தர உடன் பட்டார் . அந்த படம் தான் அன்பே வா.
ஏவி எம்முக்கு முதல் கலர் படம் . அதற்கு அமைய பெரும்பாலான
காட்சிகள் சிம்லாவில் படமாகின. மாமூல் எம் ஜி ஆர் படங்களில் இருந்து விலகி காதல், நகைச்சுவை, இசை, பாடல்கள் , வெளிப்புற காட்சிகள் என்று படத்தை உருவாக்கியிருந்தார்கள். படத்தில் எம் ஜி ஆர் ஏழை அல்ல, பில்லினியர் , இதில் அவருக்கு தாய் செண்டிமெண்ட் கிடையாது, திட்டமிட்டு சதி செய்யும் வில்லன் கிடையாது, ஏழைகளுக்காக குரல் எழுப்பவும் தேவையில்லை . இரண்டே இரண்டு சண்டைகள். அதுவும் வழக்கமான வில்லன்களுடன் அல்ல . ஆந்திராவிலிருந்து வந்த நெல்லூர் காந்தராவ் என்ற ரெஸ்லிங் வீரருடன் தான் கோதாவில் குதிக்கிறார் எம்ஜிஆர்.

படத்தில் நாகேஷ், மனோரமா நகைசுவை விருந்தளிக்கிறார்கள். அசோகன் மென்மையான வேடத்தில் நடித்து கவருகிறார். இவர்களுடன் டி ஆர் ராமசந்திரன், முத்துலெஷ்மி, பி டி சம்பந்தம், மாதவி, எஸ் ராமராவ் , ஏ , வீரப்பன் , சதன் , ராமதாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
ஆரூர்தாஸ் படத்தின் வசனங்களை எழுதினார் . படத்துக்கு
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசை உச்ச உபயம். வாலியின் உள்ளம் என்றொரு கோயிலிலேயே, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் , புதிய வானம் , உட்பட எல்லா பாடல்களும் ரசிகர்களுக்கு இசை விருந்தளித்ததன. நாடோடி நாடோடி ஓட வேண்டும் ஓடோடி , எ வான்ஸ் ஏ பாப்பா மெட்ட மமா பாடல்கள் துள்ளிசையாக அமைத்து ரசிகர்களை ஆட வைத்தன.

படத்தை எஸ். மருதிராவ், பி என் சுந்தரம் இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். ஏ கே சேகரின் அரங்க அமைப்பு படு ஜோர் . எம் ஜி ஆர், சரோஜாதேவி நடித்த விறல் விட்டு எண்ணக கூடிய கலர் படங்களுள் அன்பே வா படமும் ஒன்றனது. இந்த படத்தை விரைந்து நடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக தனக்கு மிக வேண்டிய ஆர் எம் வீரப்பன் தயாரித்த நான் ஆணையிட்டால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார் எம் ஜி ஆர்.
சிவாஜியின் ஏராளமான படங்களை இயக்கிய ஏ சி திருலோகசந்தர் , சிவாஜியை இயக்கம் முன்பே எம் ஜி ஆரின் இந்தப் படத்தை டைரக்ட் செய்திருந்தார். எம் ஜி ஆரின் எவ்வித தலையீடும் இல்லாமல் குறுகிய காலத்துள் படம் தயாராகி வெளி வந்து பெரும் வெற்றி பெற்றது .
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏவி எம் புதல்வர்கள் மீண்டும் எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படம் தயாரிக்க ஆசைப் பட்டு , அதில் கதாநாயகியாக நடிக்க ஜெயலலிதாவின் கால்ஷீட்டை வங்கியிருந்தார்கள். ஆனால் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காததனால் அம் முயற்சி தொடரவில்லை! ஆனால் இரண்டாண்டுகள் கழித்து ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த ஒளி விளக்கு படத்தில் நடித்து தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் எம் ஜி ஆர்! .
.png)

No comments:
Post a Comment