பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 6 - வைராக்கியம் - சுந்தரதாஸ்

.



வைராக்கியம் தமிழ்த்திரையில் எம்ஜிஆர், சிவாஜி ,ஜெமினி மூவரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுடன் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்ந்தவர் இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன். ஏராளமான படங்களில் நடித்து ஒன்றிரண்டு படங்களையும் இயக்கிய இவருக்கு 1970 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இன்றி இருந்த இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் சந்தர்ப்பம் வைராக்கியம் படம் மூலம் கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை பாலன் பிக்சர்ஸ் அதிபர் கே ஆர் பாலன் வழங்கினார், காரணம் பாலனும் எஸ் எஸ் ஆர் ரும் திராவிட முன்னேற்ற கழக அங்கத்தவர்கள் ஆவார்கள்.

இரட்டை கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக ஜெமினி நடித்தார் இவர்களுடன் நாகேஷ் படத்தில் பிரதான வேடத்தில் தோன்றினார். ஆலம், எஸ் எஸ் ஆரை முதன்மைப்படுத்திய படம் தயாரானது . ஊரில் கழைக்கூத்தாடியாக கயிற்றில் ஆடி வித்தைகள் செய்து பிழைப்பவன் முருகன் . வெகுளியான இவன் பிரபலம் அடைய வேண்டும் என்றும் பத்திரிகைகளில் தன் பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார், பொலிஸாரினால் எச்சரிக்கப்படுகிறான் . அவனுடைய தங்கை செல்வந்தரான ரங்கநாதனின் மகனை காதலிக்கிறாள், இக்காதலை முருகனும் ரங்கநாதநும் எதிர்க்கிறார்கள், இந்நிலையில் ஓர் இரவு ரங்கநாதன் படுகொலை செய்யப்படுகிறார்,கொலையை தானே செய்ததாக முருகன் கூற பொலிசார் அவன் ஒரு வெகுளி என நினைத்து அதனை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் முருகன் ஒரு வைராக்கியத்துடன் இயங்கியது பின்னரே தெரிய வருகிறது.








வைராக்கியம் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா கோகுல லட்சுமி ,சந்திரகாந்தா ஆகியோரும் நடித்தனர். வில்லன்களாக ஓ ஏ கே தேவரும் , எம் ஆர் ஆர் வாசுவும் நடித்தனர், படத்துக்கான கதை வசனத்தை மதுரை குருமாறன் எழுதியிருந்தார் எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார் கதாநாயகனான எஸ் எஸ் ஆர் ருக்கு காதல் டூயட் எதுவும் இல்லை அந்த குறையை ஜெமினியும் நிர்மலாவும் போக்குகிறார்கள். கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி மூனா இத்தன்னா தானா உம்மன்னா வேண்டுமா என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார் எல்லார் ஈஸ்வரி குரலில் பாடல் இனிமையாக ஒலித்தது. இது தவிர துடிப்பது என்ன என்ற பாடலையும் டிஎம்எஸ் உடன் பாடினார் ஈஸ்வரி


வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட வைராக்கியத்தை ஏ காசிலிங்கம் டைரக்ட் செய்தார் இந்தப் படத்துக்குப் பிறகு எஸ்எஸ் ராஜேந்திரன் நீண்டகாலத்துக்கு கதாநாயகனாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: