சிவலிங்கம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


“தாயில் சிறந்த கோயிலும் இல்லைஎன்பது எமது மூத்தோர் வாக்கு. நாம் பிறந்ததில் இருந்து என்பது பெரியவராகும் வரை எமக்காக அன்னை பட்ட துன்பங்கள் தியாகங்கள் பல. இத்தகைய தாயை போற்றுவதற்காக வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி அதை Mothers Day எனக் கொண்டாடுவது மேற்கத்திய பண்பாடு. நாகரீக மேற்கத்திய நாகரீகத்தில் பெண்ணுக்கு முதல் இடம் கொடுப்பது ஒரு சம்பிரதாயம் ‘Ladies first’ ஒரு பெண்ணை ஆண், படிகளால் இறங்கும்போதோ அல்லது ஏறும் போதோ அவளை முன்னே விட்டு அவன் பிள்ளை போகவேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் உள்ளார்ந்த அர்த்தம் அவள் மெல்லியளாள். அவளை அவன் காப்பாற்ற வேண்டும் என்பதே.
ஆனால் பண்டைய சமுதாயம் உருவாகிய காலத்தில் தாயே குளுவின் தலைவியாக இருந்தாள். தாயாய் தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தினாள். சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் தகப்பன் என்ற சொல் அர்த்தமற்றது. கணவன் மனைவி என்ற கட்டுக்கோப்பெல்லாம் அறியாத காலம். புதியதோர் உயிர் உருவாவதில் ஆணின் பங்கை அறியாத காலம். பெண் என்பவனோ புதியதோர் உயிரை தனக்குள் உருவாக்கி வளர்த்து உலகுக்கு அளிப்பவள். அன்றைய மக்கள் அதைக் கண்டு வியந்தார்கள். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனித சமுதாயம் மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். நோய் நொடியாலும் இயற்கையின் பாதிப்பாலும் அழிந்த காலம் அது. அதனால் மனித சமுதாயம் பல குழந்தைகளை வேண்டி நின்ற காலம் அது. பெரிய கூட்டமாக வாழ்வதே அவர்களின் பெலமாக கருதப்பட்டது. அதனால் குழந்தை பெற்றெடுக்கும் தாய் உயர் நிலையில் மதிக்கப்பட்டாள். அதனால் பராக்கிரமசாரியாக இருந்து, குளுக்களை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றியவள் தலைவியானாள். இது மனிதன் மனிதனாக வாளத் தொடங்குவதற்கு முற்பட்ட நிலை.


உலகம் பூராவும் தாய் கடவுள் வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இவ்வாறாக வணங்கப்பட்ட தாய் கடவுள் சிலைகள், பெண் உருவம் பெரிய வயிற்றுடன் காணப்படும். அதன் அர்த்தம் புதிய உயிரை தன் வயிற்றில் உருவாக்கி உலகுக்கு அளிப்பவள் என்பது போற்றப்பட்ட, சமுதாய சிந்தனையின் ஆக்கமே இது. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பு வணக்கமாக மாறியது. அதுவே தாய் கடவுள் வளிபாடாகவும் மாறியது. இன்று போல் கடவுள் கோட்பாடு பற்றி நுணுக்கமான அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லை. தம்மை போல மனித உருவிலேயே கற்பனை செய்தனர். நிஜ வாழ்வில் பெண்ணுக்கே சிறப்பாக உள்ள தாயளம் அடையும் பண்பினை கண்டு வியந்து போற்றிய மக்கள் தாம் வணங்கும் கடவுளையும் பெண்ணுருவில் கற்பனை செய்வது யதார்த்தமே.
இத்தகைய பெண் தெய்வ வழிபாடு திராவிடருக்கு மட்டும் உரித்தானது அல்ல. எகிப்து, சீனா, சிரியா போன்ற நாடுகளிலும் வகைகில் இருந்தவையே. பண்டைய தமிழ் மக்களின் முக்கிய தெய்வம் பெண் உருவமே என்பதை சங்க இலக்கியங்களிலும் காணலாம். கொற்றவை எனும் தெய்வத்தை வழிபடுவதை வழிபடும் முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. பெண்களே பூசாரிகளாக நின்று பூசைகளை செய்ததாக கூறப்படுகிறது.
மனித சமுதாயம் வளர்ச்சி அடைய அவர்கள் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. மனித இனம் இனக்குளுக்களாக நிலத்தை உழத்தொடங்கிய போது அவர்கள் சிந்தனையிலும் மாற்றத்தைக் காணலாம். உழுது பயிரிகும் நிலத்திற்கு உரிமை கொண்டாடி, அதை பறிமுதல் செய்ய முற்பட்டவர்களுடன் போர்களை நிகர்த்தினர். இவ்வாறு ஏற்பட்ட போர்களிலே மாண்டவர்க்கு வீர வணக்கம் செலுத்தினர். இது ஒரு நன்றிக்கடனே. புதை குழியில் அடக்கம் செய்து வணங்கினர். இதுவே வீரயுக நடுகல் வழிபாட்டு முறையாக இருந்தது. புதை குழிமேல் கல்லை நாட்டி வணங்கினார்கள்.
உடல் உழைப்பால் மந்தைகளை வழர்த்து நிலத்தை உழுது பயிரிட்டனர். தமது உழைப்பில் மிகுந்த நம்பிகையும் வைத்த மக்கள், பயிர் விளைச்சல், உடற்பேணல் போன்ற தமது தேவைகளை நிறைவேற்ற சில மயாவித்தைகள் கிரிகைகள் என்றெல்லாம் கையாண்டனர். இவற்றை செய்வதால் பலன் கிட்டும் என்ற சிந்தனை வளர்ந்தது.
ஆண் பெண் கூட்டுறவால் மனித இனப் பெருக்கம், செழிப்பு ஏற்படுவதை அவதானித்தான் புராதன மனிதன். பிரபஞ்சத்தின் செழிப்பிற்கும், பயிர் வழர்வதற்கும் நல்ல விழைச்சலுக்கும் ஆண் – பெண் போன்ற இரண்டு எதிரும் புதிருமான அம்சமே சகல செழிப்பிற்கும் அவசியம் என நம்பினார்கள். பயிர் செழிப்பதற்கு பாலியல் ரீதியான சங்கேதங்களை வரைந்தும், உறுப்புக்களை கழிமண்ணினால் செய்தும் வயல் வெளிகளில் ஆனார்கள். இவ்வாறு ஆண் பெண் புணர்ச்சி போன்ற ஒன்றே சகல செழிப்புக்கும் காரணம் என எண்ணும் போது அதையே தெய்வமாகவும் வழிபட்டனர். இதுவே இன்று நாம் காணும் லிங்க வழிபாட்டின் தோற்றம் என கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி கூறுகிறார்.
ஆகவே, இயற்கையான வாழ்கையில் ஈடுபாடு மிகுந்தவர்களாக வாழ்ந்த மக்கள் நாம் கண்டு கேட்டு உணர்ந்தவற்றிற்கு உருவம் கொடுத்து வணங்கவும் செய்தனர். ஆயினும் இப்புராதன சிந்தனை மத வளிபாடாக, எம்மிடையே நிலைபெற்றுவிட்டது. இதுவே லிங்க வழிபாடு இதை அறிஞர் சாமி சிதம்பரனார் பின்வருமாறு விளக்குகிறார்.
“உலகத்துக்கு மூலகாரணம் சிவசக்தி சிவன் என்பது. ஆண் சக்தி என்பது பெண். இவ்வுண்மையை காட்டவே சிவலிங்கம் தோன்றியது. லிங்கத்தின் அடிப்பாகம் வட்டமும் தட்டையுமானது. இச் சக்தியை குறிக்கும். மேலேயுள்ள குழவி போன்ற பகுதி சிவத்தை குறிப்பது”.
அதாவது உலக உற்பத்தி பற்றிய ஆதி முன்னோடியான சிந்தனையே இது. காலப்போக்கில் மத சார்பான தத்துவமாகி, எம்மிடையே இன்று வழிபாட்டு சின்னமாக நிலைத்து, மதக் கொள்கைக்குள் சங்கமமாகிவிட்டது.

No comments: