தமிழ் சினிமா - திரைப்பட விமர்சனம் - ஓ மை கடவுளே!


நடிகர்கள்:

அசோக் செல்வன்,ரித்திகா சிங்,விஜய் சேதுபதி,வாணி போஜன்
இயக்கம்: அஷ்வத் மாரிமுத்துசினிமா வகை:Romance, Comedyகால அளவு:2 Hrs 31 Min

அர்ஜுன்(அசேக் செல்வன்), அனு(ரித்திகா சிங்), மணி (ஷா ரா) ஆகியோர் பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே நண்பர்கள். அனுவுக்கு அர்ஜுன் மீது காதல் ஆனால் அர்ஜுனுக்கு அப்படி இல்லை. இந்நிலையில் என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று அனு கேட்க, முடியாது என்று சொல்ல காரணம் இல்லாததால் சம்மதம் தெரிவிக்கிறார் அர்ஜுன்.முதல் இரவில் அனுவை முத்தமிட முயலும் போது அர்ஜுனுக்கு சிரிப்பு தான் வருகிறது. அனுவை மனைவியாக பார்க்க முடியாமல் திணறுகிறார் அர்ஜுன். இதை புரிந்து கொண்ட அனு அதுவா நடக்கட்டும் என்று விட்டுவிடுகிறார். இருவருக்கும் இடையே ஒத்து வராமல் திருமணமான வேகத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்கின்றனர். அப்பொழுது தான் அர்ஜுன் கடவுளான விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக்கை சந்திக்கிறார். அர்ஜுன் தன் வாழ்க்கையை மாற்றும் வகையில் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார் விஜய் சேதுபதி. அதை அர்ஜுன் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதே கதை.



அசோக் செல்வனின் நடிப்பு நன்றாக இருந்தாலும் இன்னும் முயற்சி செய்திருக்கலாம். அர்ஜுன் தனது பள்ளி சீனியரான மீராவுடன் (வாணி போஜன்) பழகுவதை பார்த்து சந்தேகப்படும் காட்சிகள் முதல் தான் வரும் அனைத்து காட்சிகளிலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் ரித்திகா சிங். ஷாராவை பார்த்தால் கடுப்பாக வருகிறது. படத்தில் பல இடங்களில் லாஜிக்கே இல்லை.


பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வாணி போஜன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பள்ளித் தோழியான அனு எப்படி நடிகராக விரும்பும் அர்ஜுனை தன் அப்பாவின் கம்பெனியில் வேலைக்கு சேரச் சொல்கிறார் என்பது புரியவில்லை. சீனியர் மீரா பப்பில் அனு, அர்ஜுன், மணியை பார்க்கும்போது அர்ஜுனை மட்டும் தான் நினைவு கூர்ந்து பேசுவாராம். இது போன்ற சில இடங்களில் காரணத்தை விளக்க மறந்துவிட்டார் இயக்குநர். காட்சிகள் ஸ்லோவாக செல்வது தியேட்டரில் உள்ளவர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

நல்ல வேளை கடவுள் என்கிற பெயரில் விஜய் சேதுபதி லெக்சர் அடிக்காமல் அம்சமாக நடித்தது ஆறுதல். ஓட்டைகள் இருந்தாலும் காதலை கொண்டாடுகிறது படம்.  
நன்றி சமயம் 


No comments: