யாழ். போதனா வைத்தியசாலைக்கு முக கவசங்கள் அன்பளிப்பு
இந்தியாவினால் 10 தொன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கௌரவம்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முக கவசங்கள் அன்பளிப்பு
Tuesday, April 7, 2020 - 5:59am
யாழ். போதனா வைத்தியசாலைக்கு இந்து அமைப்பினரும் அந்தணர்களும் இணைந்து ஒரு தொகை முக கவசங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இதனை லண்டன் என்பீலட் நாகபூசனி அம்மன் ஆலயம், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், யாழ்.இந்து குருமார் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த முக கவசங்களை வழங்கினர்.
இந்த நன்கொடைகளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
பருத்தித்துறை விசேட நிருபர் - நன்றி தினகரன் இந்தியாவினால் 10 தொன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
Tuesday, April 7, 2020 - 10:27pm
கொவிட்–19 நெருக்கடி நிலையில் இன்றைய தினம் (07) 10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசியமான மருந்து தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம் ஒன்றின் மூலமாக இன்று (07) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது. உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.
நன்றி தினகரன்
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம் ஒன்றின் மூலமாக இன்று (07) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறது. உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது.
கொவிட் – 19 நோய்க்கு எதிரான போராட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக 2020 மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்கள் மட்டத்திலான காணொளி மூலமான மாநாடு (Video Conference) ஒன்று இந்திய பிரதமரின் யோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்ததனை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளவேண்டும்.
சார்க் கொவிட் – 19 அவசரகால நிதிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்கள் 2020 மார்ச் 26 ஆம் திகதி காணொளி மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இந்திய சுகாதார அமைச்சு சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு இணையம் மூலமான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள சார்க் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (SDMC) சார்க் உறுப்பு நாடுகளின் கொவிட் – 19 நிலைமை குறித்த இணையத்தளம் [www.covid19-sdmc.org] ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சகல திட்டங்களிலும் இலங்கை மிகவும் முக்கியமான ஒரு பங்காளராக உள்ளது.
நன்றி தினகரன்
வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு
Saturday, April 11, 2020 - 7:12pm
- பணத்தை வைப்பிலிட பல தரப்பினருக்கு அனுமதி
- அதிக வட்டி
- வரி, அந்நியச் செலாவணி விதிமுறைகள் நீக்கம்
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளில் தாபிக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிதியங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்தியை விரும்பும் எந்த ஒருவருக்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் விசேட வைப்புக் கணக்கை திறக்க முடியும்.
நிதி, பொருளாதார மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சினால் ஏப்ரல் 08ஆம் திகதி அரசாங்கத்தின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் புதிய வைப்பு சம்பந்தமான சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வெளியே வெளிநாட்டு பண வைப்பு அல்லது முதலீட்டை பேணி வரும் அனைத்து இலங்கை வர்த்தக சமூகத்திற்கும், கம்பனி உரிமையாளர்களுக்கும் இலங்கையின் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி தம்மிடமுள்ள நிதியங்களின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்ப முடியும்.
புதிய கணக்கில் வைப்பிலிடக் கூடிய பணத்தின் அளவுக்கு ஆகக்குறைந்த எல்லை இல்லை. வைப்பொன்றுக்கான குறைந்த காலம் 06 மாதங்களாகும். சாதாரண வெளிநாட்டு பண வைப்புக்கு வழங்கப்படும் வட்டியைப் பார்க்கிலும் அதிக வட்டி வீதம் வைப்புகளுக்கான தவணை முடிவில் வழங்கப்படும். அந்த வகையில் 06மாத விசேட வைப்புக் கணக்கிற்கு 1வீதமும் 12 மாத வைப்பொன்றுக்கு 2வீதமும் அதிக வட்டி உரித்தாகும். வைப்புகளின் தவணை முடிவில் அதிலுள்ள பணத்தை தடையின்றி வேறு நிதிக்கு மாற்றுவதற்கும் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி உள்ளது.
அனைத்து வைப்புகளும் வரி மற்றும் அந்நியச் செலாவணி சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். வைப்புகளுக்கு வங்கியின் இரகசிய ஏற்பாடுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கணக்கு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் அதிக நன்மைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் 2020 வரவு செலவுத்திட்ட ஆவணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டர்லின் பவுன், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், சுவீடன் குரோனர், சுவிஸ் பிராங்க், கனடா டொலர், ஹொங்கொங் டொலர், ஜப்பான் யென், டென்மார்க் குரோனர், நோர்வே குரோனர், சீன ரென்மின்பி மற்றும் நியூசிலாந்து டொலர் என்பன விசேட கணக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் பணங்களாகும்.
விசேட வைப்புக் கணக்கு குறித்த மேலதிக விபரங்களை ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி அல்லது இலங்கையின் தூதுவராலயங்களின் இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். கொவிட் 19 நிவாரண, சமூகப் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கௌரவம்
Saturday, April 11, 2020 - 8:37pm
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இன்று (11) மாலை 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment