'கொறோனா'வால் - அந்தரிக்கும் அகிலத்து மக்களைநீ காப்பதெப்போ? - ........ பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

முந்திவந்து அருள்சிந்தி விந்தைசெய்யும் கந்தகுகா!
எந்தநாளும்  ஏங்கிவாழும்  சொந்தங்களுக் கருள்வதெப்போ?
                                       (முந்தி) 

அந்திவண்ணன் உமையாளொடு எந்தநாளும் மகிழ்ந்திருக்கத்
தந்திமுகன் தம்பியெனப் பிந்திவந்த செந்திவேலா!
                                       (முந்தி) 

சந்ததமுந் தொழுதேத்தி வந்தனையும் செய்யலையோ?
சிந்தையிலே உனையிருத்திச் சிவம்வளர்த்தோம் மறந்தனையோ?  
சுந்தரம யூரமேறிச் செஞ்சரண அருள்சொரிந்து
அந்தரிக்கும் அகிலத்து மக்களைநீ காப்பதெப்போ?
                                     
இன்றிந்தக் கலியுகத்தில் அதர்மநிலை கண்டுதானோ?
கொன்றழிக்கும்; 'கொறோனா'வை  எங்குமின்று பரவவிட்டாய்?  
என்றென்றும் அறங்காக்கும் இனியவுன்றன் மக்களைநீ
மன்றாடிக்; கேட்டிடுவேன் மால்மருகா காத்திடாயோ?

அவனியெலாம் இயற்கையதன் சீற்றமெனக் கொறோனாவை
பவனிவரச் செய்ததேனோ? பலரையது மாய்க்குதையா!
புவனமெலாம் மனிதகுலம் இயற்கைவள மழித்ததற்குச்;
சிவனவனார் கற்பிக்கும் சீர்திருத்தப் பாடமிதோ?  

யாதுமூரே யாவரும் கேளிரெனத் தமிழிற்சொன்ன
மூதறிஞன் பொன்மொழியை மேதினியில் மறந்ததற்கோ?
பாதகச்செயல் கற்பழிப்பு பாரெங்கும்; களவுகொலை 
சாதனையாயச் செய்பவர்க்குத் தகுந்தபாடம் தருவதற்கோ?

கண்டதும் கட்டியணைத்துக் கைகுலுக்கிக் கொஞ்சிடாது
காதலொடு கைகூப்பித் தூரநின்று வணங்குவதும்
உண்டிடமுன் கையலம்பி இறைதொழுது உண்பதுவும்
உயர்ந்ததமிழ்ப் பண்பென்று உலகிற்குக் காட்டிடவோ?
                                       (முந்தி)
காலணியை  வெளிவிட்டுக் காலலம்பி வீடுவரும்
கடுஞ்சுத்தம் தமிழர்கள் பேணியதைக் காட்டிடவோ?
கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால்
குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் குயிற்றிடவோ?

ஒருவனுக்கு ஒருத்தியென்று ஓம்பிவாழ்ந்த தமிழர்தம்
ஒப்புவமை இல்லாநல் உயர்நெறியைப்; பரப்புதற்கோ?
பெருவழக்காய் நோயணுகா உணவுமுறை கொண்டதனால்
பேரழிவுக் கிருமிகளும் தாக்கஅஞ்சும் வழிசொலவோ?
                                    
உலகசமா தானமுங்கள் வீட்டிலாரம் பித்தபின்தான்
உன்சுற்றம் சமுதாயம் உன்நாடு கண்டமென்று
பலவழியிற் பரவுமெனப் பகன்றவரெம் மஹரிஷியே!
பாருலகு இதையுணர்ந்து பலன்பெறுமென் றோதுதற்கோ?

 'தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம்
நன்றுநன்று உலகத்தோரே நாள்தொறும் கடைப்பிடிப்பீர்' 
என்றுஅறிவித்துப் பாடம் படிப்பிக்க வோமுருகா   
இன்றுஇந்தக் 'கொறோனா'வை  எங்கும்நீ பரவவிட்டாய்?
                                       (முந்தி)

அவனியெலாம் இயற்கையதன் சீற்றமெனக் கொறோனாவை
பவனிவரச் செய்ததேனோ? பலரையது மாய்க்குதையா!
புவனமெலாம் மனிதகுலம் இயற்கைவள மழித்ததற்குச்;
சிவனவனார் கற்பிக்கும் சீர்திருத்தப் பாடமிதோ?  

யாதுமூரே யாவரும் கேளிரெனத் தமிழிற்சொன்ன
மூதறிஞன் பொன்மொழியை மேதினியில் மறந்ததற்கோ?
பாதகச்செயல் கற்பழிப்பு பாரெங்கும்; களவுகொலை 
சாதனையாயச்; செய்பவர்க்குத் தகுந்தபாடம் தருவதற்கோ?

கண்டதும் கட்டியணைத்துக் கைகுலுக்கிக் கொஞ்சிடாது
காதலொடு கைகூப்பித் தூரநின்று வணங்குவதும்
உண்டிடமுன் கையலம்பி இறைதொழுது உண்பதுவும்
உயர்ந்ததமிழ்ப் பண்பென்று உலகிற்குக் காட்டிடவோ?
                                       (முந்தி)
காலணியை  வெளிவிட்டுக் காலலம்பி வீடுவரும்
கடுஞ்சுத்தம் தமிழர்கள் பேணியதைக் காட்டிடவோ?
கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால்
குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் குயிற்றிடவோ?

ஒருவனுக்கு ஒருத்தியென்று ஓம்பிவாழ்ந்த தமிழர்தம்
ஒப்புவமை இல்லாநல் உயர்நெறியைப்; பரப்புதற்கோ?
பெருவழக்காய் நோயணுகா உணவுமுறை கொண்டதனால்
பேரழிவுக் கிருமிகளும் தாக்கஅஞ்சும் வழிசொலவோ?
                                    
உலகசமா தானமுங்கள் வீட்டிலாரம் பித்தபின்தான்
உன்சுற்றம் சமுதாயம் உன்நாடு; கண்டமென்று
பலவழியிற் பரவுமெனப் பகன்றவரெம் மஹரிஷியே!
பாருலகு இதையுணர்ந்து பலன்பெறுமென் றோதுதற்கோ?

 'தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம்
நன்றுநன்று உலகத்தோரே நாள்n;தாறும் கடைப்பிடிப்பீர்' 
என்றுஅறிவித்; துப்;பாடம் படிப்பிக்க வோமுருகா   
இன்றுஇந்தக் 'கொறோனா'வை  எங்கும்நீ பரவவிட்டாய்?
                                       (முந்தி)
         ........   பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

No comments: