தமிழ் சினிமா - அடுத்த சாட்டை திரைவிமர்சனம்

சமுத்திரக்கனி நடிப்பில் 2012ல் வெளிவந்த படம் சாட்டை. பள்ளி ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என காட்டி நல்ல வரவேற்பையும் பெற்ற படம் அது. அதன் இரண்டாம் பாகம் 'அடுத்த சாட்டை' இன்று திரைக்கு வந்துள்ளது.
படம் எப்படி இருக்கு? வாங்க பாப்போம்.
கதை:
சாட்டை முழுவதும் பள்ளியை மையப்படுத்திய கதை என்றால், அடுத்த சாட்டை அப்படியே கல்லூரியில் நடப்பது போன்ற கதை. தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் கடமைக்கு வேலை செய்துகொண்டு மாணவர்கள் மீது வெறுப்பை காட்டிக்கொண்டிருக்க, மாணவர்களுக்கு பிடித்தபடி நெருங்கி பழகி பாடம் நடத்தும் ஒரு சில ஆசிரியர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையா. (அவர் தான் படத்தின் வில்லன்.) பல விஷயங்களில் அவருக்கும் சமுத்திரக்கனிக்கும் முட்டிக்கொள்கிறது.
தம்பி ராமையா மகன் பழனிமுத்து(யுவன்) அதே கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு அவரது வகுப்பில் இருக்கும் போதும் பொண்ணு (அதுல்யா) மீது ஒருதலை காதல். ஜாதி வெறி பிடித்த பழனிமுத்து அதுல்யாவிடம் பழகும் மற்றவர்களை தாக்குகிறார். கல்லூரியில் இருக்கும் அனைவரும் தங்கள் ஜாதிக்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தில் கயிறு கட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் அதுல்யா வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு பையனுடன் நெருங்கி பழகுகிறார். அதனால் பல பிரச்சனைகளும் வருகிறது. மறுபுறம் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுடன் சமுத்திரக்கனியின் லவ் ட்ராக் ஓடுகிறது.
தன் காதல், மாணவர்கள் இடையில் ஜாதி வெறி, தம்பி ராமையா கொடுக்கும் குடைச்சல், மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு சமுத்திரக்கனி எப்படி தீர்வு கண்டார் என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
சமுத்திரக்கனி - மொத்த படமும் அவர் தலை மீது தான். அவரை சுற்றியே நடக்கும் கதை என்பதால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எதாவது அறிவுரை கூறிக்கொண்டே இருக்கிறார். சாட்டை படத்தில் மற்ற கதாபாத்திரங்களிடம் பேசி அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்த சமுத்திரக்கனி, இந்த முறை நேராக படம் பார்க்கும் ஆடியன்ஸை பார்த்தே கருத்து சொல்கிறார்.
படிச்சது நியாபகத்தில் இல்லை என கூறும் மாணவனிடம், "உனக்கு சினிமா பிடிக்குமா. ஒவ்வொரு questionகும் பேரு வெச்சிக்கோ. இது அஜித் question, இது vijay question" என சமுத்திரக்கனி கொடுக்கும் அட்வைஸ் எல்லாம் தனி ரகம்.
நெகடிவ் வேடத்தில் நடித்த தம்பி ராமையா தான் நடிப்பில் பின்னியுள்ளார். அதுல்யா ரவி - கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். இண்டெர்வெல் காட்சியில் அவரது அந்த நீண்ட பேச்சு கவர்கிறது.
யுவன், புதுமுகம் கௌஷிக் (விக்ரம் வேதா நடிகர் பிரேம் குமாரின் மகன்), பசங்க பட புகழ் ஸ்ரீராம் என மற்ற நடிகர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
முதல் பாதியில் மிக மெதுவாக பரபரப்பே இல்லாமல் ஓடும் நிலையில், இரண்டாம் பாதி ஓரளவு நம்மை நிமிர்த்து பார்க்க வைக்கிறது. சென்சார் போர்டு mute செய்துள்ள சில வார்த்தைகள் தான் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புகிறது.
பாசிட்டிவ் & நெகடிவ்:
-ஜாதி பிரிவினைகள், தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது என்பது மட்டுமே இந்த படத்தின் பிளஸ்.
-சாட்டை படத்தில் பள்ளி சூழ்நிலை மற்றும் பிரச்சனைகளை ரியலாக காட்டியிருந்ததால் அது நம்மை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அடுத்த சாட்டையில் பல இடங்களில் அப்பட்டமாக பல விஷயங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது என்பதும், கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் அட்வைஸ் மேல் அட்வைஸ் கொடுக்கிறார்கள் என்பது மட்டுமே தான் பெரிய நெகட்டிவ்.
-ஒருவர் விடாமல் அனைவரும் கயிறு கட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்பது நம்பும்படியா இருக்கு?
-அப்பா கலை கல்லூரி என பெயரை படத்தில் காட்டும் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்களை கவனித்திருக்கலாம். ஷூட்டிங் நடப்பது அன்னை பொறியியல் கல்லூரி என படத்தில் சில இடங்களில் தம்பி ராமையா டேபிள் மீது இருக்கும் புத்தகமே காட்டிக்கொடுத்துவிடுகிறது.
அட்வைஸ் ஓன்றிரண்டு சொல்லலாம், ஆனால் படம் முழுவதும் ஒவ்வொரு நொடியும் அட்வைஸ் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி?
மொத்தத்தில் 'அடுத்த சாட்டை' கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமான பாடம்.  நன்றி CineUlagam










No comments: